Monday, April 09, 2007

முகவை மாவட்ட தொகுதிகள் மாற்றம்



ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் மறுசீரமைப்பு * லோக்சபா தொகுதியிலும் மாற்றம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு செய்து இந்திய எல்லை மறுவரையறை கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பின்படி ஐந்து சட்டசபை தொகுதிகள் நான்கு சட்டசபை தொகுதியாகவும், லோக் சபா தொகுதியில் மாற்றங்கள் செய்தும் அறிவித்துள்ளது. முன்பு ராமநாதபுரம், திருவாடானை, கடலாடி,முதுகுளத்துõர், பரமக்குடி ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது மறுசீரமைப்பின்படி முதுகுளத்துõர் தொகுதியை நீக்கம் செய்து இத்தொகுதியை கடலாடியிலும் பரமக்குடியிலுமாக சேர்த்துள்ளனர். மேலும் லோக்சபா தொகுதியில் முன்பு சிவகங்கை தொகுதியில் இருந்த திருவாடானை, புதிய தொகுதியான திருச்சுழி ஆகியவைகள் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புபடி தொகுதியில் அடங்கிய பகுதிகள் வருமாறு:

ராமநாதபுரம் தொகுதி: ஆற் றாங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, ராஜசூரியமடை, வெள்ளாமரிச் சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக் கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட் டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டினம், களிமண்குண்டு, திருப்புல் லாணி, களரி, திருஉத்திரகோசமங்கை, மல்லல், அழகன்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனுõர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லாந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள், ராமநாதபுரம் (நகராட்சி), கீழக்கரை (நகராட்சி), மண்டபம் (பேரூராட்சி), ராமேஸ்வரம் தாலுகா.

திருவாடானை : பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்துõர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந் தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனுõர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார் கோட்டை, அத்தியூத்து, பழங் குளம், தொருவளூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டினம்காத்தான், கழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந் தன்வயல், லாந்தை, பனைக் குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.

பரமக்குடி(தனி): த.புனவாசல், வாங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வல்லந்தை, எழுவனுõர், கூடங்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், சடையேனந்தல், சம்பக்குளம், கமுதி, மரக்குளம், மண்டலமாணிக்கம், தவிக்குறிச்சி, அபிராமம்(பேரூராட்சி)

கடலாடி: முதுகுளத்துõர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா பகுதிகள் அடங் கும். முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ.கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங் குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல் நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங் குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொத்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலசுப்பிரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடாமங்களம். கமுதி (பேரூராட்சி).

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி: ராமநாதபுரம், பரமக்குடி(தனி), மானாமதுரை(தனி), திருச்சுழி, கடலாடி, திருவாடானை ஆகிய சட்டசபை தொகுதிகள் .

இதுகுறித்து ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் செயலாளர், எல்லை மறுவரையறை ஆணையம், நிர்வாசன் சதன், அசோகா ரோடு, புதுடில்லி 110 001 என்ற முகவரியில் ஏப்.18ம் தேதிக்குள் மனுவாக அனுப்பி வைக்கலாம்.

இஸ்லாம், முஸ்லிம்

No comments: