Saturday, March 17, 2007

முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் (Frontline Report)

முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் அதன் தலைவர்களே!
அதிர்ச்சியூட்டும் FRONTLINE ரிப்போர்ட்


60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எல்லா சமூகங்களின் சமூகப் பொருளாதார வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு அரசு பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

நல வாரியத்திட்டம், ஐந்து ஆண்டு திட்டம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தொகுதி மறு சீரமைப்புத் திட்டம், அரசு ஆய்வு கமிஷன் பரிந்துரையின் பேரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூகங்களுக்கு வழங்கியும், வளர்ந்து வரும் சமூகப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மற்ற சமூகங்களைவிட முஸ்லிம் சமுதாயம் ஏன் மிக மிக பின் தங்கி உள்ளது? அதற்குக் காரணம் தகுதியற்ற முஸ்லிம் தலைவர்களே என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை குசழவெடiநெ ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல் பலத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய சக்திகள் முஸ்லிம்கள். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் 50 – 60 சதவீதம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகள் திட்டமிட்டு தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டு சட்டமியற்றும் சபைகளில் முஸ்லிம்கள் குரல் ஒலிக்க மறைமுகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.


அற்ப பதவிக்கு பார்வைக் குருவிகளாக முஸ்லிம் தலைவர்கள் நியமிக்கப்படுதல்.

தேர்தல் நேரங்களில் முடிவான முடிவு எடுக்க இயலாத தலைமை.

முஸ்லிம் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த விடாமல் முஸ்லிம் தலைவர்களைக் கொண்டே பிளவு செய்தல்.

முஸ்லிம் தலைவர்களின் பலகீனங்களை பயன்படுத்தி உளவு மூலம் அவர்களுக்குள் மோத விடுதல்.

அற்ப விஷயங்களின் பக்கம் கவனத்தை செலுத்த விடுதல், தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர் பல்டி என குழப்பத்தை ஏற்படுத்தல்,


இவை முஸ்லிம் சமூகப் பின்னடைவிற்கு முஸ்லிம் தலைவர்களால் செய்யப்பட்ட சாதனைகள், சமூகத் தலைவர்கள் தடம் மாறி, இடம் மாறி, இலக்கு மாறி, லட்சியங்களை விட்டு விட்டு லட்சத்திற்கு வில் வளைவது போல் வளைந்ததால் ஏற்பட்ட சோதனைகள், வீழ்ந்தவர்கள் மீண்டும் எழுந்தார்கள் என்ற வரலாற்றை நாமே பார்க்கிறோம். நிதர்சனமாக இன்று வீழ்வதையே வெற்றி என்று பாடும் இயங்கா இயக்கத் தலைவர்களை என்னவென்று சொல்ல???

ஆம், மாண்டு விட்ட இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது, தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் முஸ்லிம் தலைவர்களுக்குள் சண்டை வந்து விடுகிறது. கோழிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டன.

இளைஞனே! எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள், தலைவர்கள் கோட்டை விட்டதை உன் சிந்தனையில் நிறுத்திப் பார். உண்மை புரியும். உழுவதற்கு முன் நிலத்தின் தன்மையை அறிந்து இருக்க வேண்டும். விதைக்கும் முன் விதையின் வீரியத்ததைத் தெரிந்து இருக்க வேண்டும். வேகம் இருந்த அளவு விவேகம் இல்லாததால் ததியற்ற தலைமைத்தனம், முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து விட்டது என்று குசழவெடiநெ பத்திரிக்கை சுட்டிக் காட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது உனக்கு.

வீழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்றிட, வாருங்கள் தலைவர்களை உருவாக்குவதை விட, மக்களை உருவாக்குவோம், சிந்தனைகளை கூர்மைப்படுத்துவோம், ஓய்வற்ற அறப்போராட்டம், உறக்கமற்ற விழிப்புணர்வு, கடின உழைப்பு தேவை.




இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK ), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street,
Mannady, Chennai – 600 001
Tel : 98407-30652
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

No comments: