இட ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் டெல்லியல் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் அகில இந்திய அளவில் பல அமைப்புக்களும் தங்கள் தொண்டர்களை தமுமுக வின் டெல்லி பேரணிக்கு அனுப்பி தங்கள் ஆதரவைத் தெறிவித்திருந்தன.
இப்பேரணியில் கேரளம், கர்நாடகம், மும்பை உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அமைப்புக்களும் முஸ்லிம் மானவர் அமைப்புக்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களின் உரிமைக்காக தமுமுக நடத்தும் இப்பேரணியின் அவசியத்தை உணர்ந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்தார்கள். நிகழச்சியின் இறுதியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் தலைவர்கள் அடங்கிய குழு பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தது.
முஸ்லிம்களின் பொது நலனில் சிறிதும் அக்கறை இல்லாத குடந்தை மாநாடு புகழ் ஏமாற்று பேர்வழிகளான தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதினும் அதன் ஏனைய தலைவர்களும் இப்பேரணியை நடக்க விடாமல் தடுக்கவும் இதற்கு ஏனைய மாநிலங்களில் இருந்து முஸ்லிம்கள் கலந்து கொள்ளாமல் இருக்கவும் தங்களாளான பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். தமுமுக பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமெனவும் அந்த இயக்கம் தவறானது எனவும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைப்பு்ககளுக்கும், சங்கங்களுக்கும் கடிதம் எழுதினர் ஆனாலும் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாளல் இவர்களின் சதி முறியடிக்கப்பட்டு, இவர்களின் சுய முகங்களை அடையாளங்கண்டு கொண்ட முஸ்லிம்கள் பெருந்திரளாக வந்திருந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்திருந்தனர்.
தமுமுக டெல்லியல் முஸ்லிம்களின் உரிமைக்காக முழங்கிய முழக்கம் உலகெங்கும் எதிரொழித்ததை பல்வேறு பட்ட உலக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிந்தது. ஈரான், இத்தாலி, பாகிஸ்தான்,சவுதி அரேபியா என பல்வேறு பட்ட வெளிநாட்டு ஊடகங்களும் இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டிருந்ததன் மூலம் தமுமுக வின் இந்த பேரணி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினை அறிய இயன்றது.
இன்சா அல்லாஹ் தமுமுக இத்து்ன் விட்டுவிடாது இன்னும் பல போராட்டங்களை நடத்தி நமது உரிமைகளை மீட்டெடுக்கும் என்று நம்புவோமாக.
இந்தியாவெங்கும் இருந்து பல்வேறு அமைப்ப்கக்ள் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்த தமுமுக வின் டெல்லி பேரணி பற்றிய புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.
1 comment:
Good post.
Post a Comment