Tuesday, January 16, 2007

வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்(PFI)

வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கின்றது!!
ஒடுக்கப்படும் சமூகங்களின் சமத்துவ, சுதந்திர முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு தென்னிந்திய பிரதேசங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற பெயரில் ஒரு அமைப்பு பெங்களுரில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஜனாப் E.அபுபக்கர் அவர்கள் இருந்து வருகின்றார்.

சமீப காலமாக இந்த அமைப்பு தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தெனினிந்தியாவில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து போராடி வரும் அமைப்புக்களான கேரளாவின் என்.டி.எஃப் , தமிழகத்தின் எம்.என்.பி, கர்நாடகத்தின் கே.எஃப்.டி போன்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்துள்ளது.

எல்லா சமூக மக்களுக்கும் பாரபட்சமில்லாத சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், சம உரிமையை நடைமுறைப்படுத்தும் இந்தியாவை உருவாக்குவதை PFI குறிக்கோளாக வைக்கிறது.இடஒதுக்கீடு உட்பட சமூக நீதி விஷயங்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகல்லாக உள்ள இந்துத்துவ பாஸிசத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டே இருக்கும். தலித்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச்சிறுபான்மையினர் முதலிய புறக்கணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒருங்கினைத்து வரக்கூடிய 15 மற்றும் 16 பிப்ரவரி 2007 தேதிகளில் பெங்களுரில் அமைந்துள்ள ஷஹீத் திப்பு சுல்த்தான்நகர் அரன்மனை மைதானத்தில் "வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்" என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கவும், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக இடஒதுக்கீட்டை வலியுருத்தியும், இந்து வெறியர்களிடம் இருந்தும், ஃபாசிச பயங்கரவாதிகளிடம் இருந்தும் நாடடையும் நமது மக்களைம் தற்காத்து கொள்ள சட்ட ரீதியான தற்காப்பு ஏற்பாடுகளை அமைக்கவும் பாரதமெங்கும் நமது சமுதாயத்தை பலமானதாகவும், இந்து தீவிரவாதிகளிடம் இருந்தும் ஃபாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து சட்ட ரீதியாக தற்காத்து கொள்ளக்கூடியவர்களாக மாற்றிடவும் "வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்" என்ற இந்த மாபெரும் மாநாடும் பேரணியும் நடைபெற உள்ளது.

இதன் நிகழ்ச்சி நிரல் :

15ம் தேதி பிப்ரவரி 2007 அன்று கீழ்க்கண்ட தலைப்புக்களில் விவாத அரங்கம் நடைபெறும்:


1. மனித உரிமை
2.சட்ட ரீதியான பாதுகாப்பு
3.இட ஒதுக்கீடு
4.ஊடகவியல்

16ம் தேதி பிப்ரவரி 2007 அன்று தென்னிந்தியாவெங்கும் இருந்து வந்திருக்கும் மாபெரும் மக்கள் திரளை ஒருங்கினைத்து ஒரு மாபெரும் பேரணியும் அதன் இறுதியில் ஒரு மாபெரும் மாநாடும் நடைபெரும்.ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரிமைகளை வென்றெடுக்கவும், தாழத்தப்பட்டவர்கள் என்ற பெயரில் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களுக்காகவும், மக்கியமாக ஹிந்துத்துவ தீவரவாதத்திலிருந்து மக்களை எப்படி சட்ட ரீதியாக பாதுகாப்பது என்பது குறித்து விவாதிகக்வும் மக்களை ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடியவர்களாக உருவாக்கவும் இந்த மாநாடு உதவும் என்று நம்பப்படுகின்றது.


"வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் " அறிமுக நிகழச்சியாக பெங்களுரில் நடைபெற்ற மாபெரும் பைக் ஊர்வளம்


இந்த மாநாட்டில் பங்கெடுத்து கொள்ள வேண்டி பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மற்றும் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிலும் முதல் நாள் நடக்கும் விவாத அரங்கத்திலும் இவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த நிகழச்சியில் பங்கெடுக்க வேண்டி தென்னிந்தியாவை சாந்த உணர்வுள்ள அணைத்து இஸ்லாமியர்களையும் மற்றுமுள்ள பிற்படுத்தப்பட்டவர்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அமைப்பு அழைக்கின்றது.

முகவை எம்.என்.பி யினரால் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்


தமிழகத்தில் மனித நீதிப் பாசறை (MNP or VIDIYAL) இதற்காக மக்களை திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்களும் விளக்க கையேடுகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதை மனித நீதிப் பாசறை சகோதரர்கள் ஏதோ இது விடியல் காரர்களுக்கு மட்டும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்ற ரீதியில் பிரச்சாரத்தில் உள்ளார்கள. இன்னும் விடியலை சேர்ந்த
சில சகோதரர்களுக்கு இந்த நிகழச்சி குறித்த தெளிவான ஒரு அறிவு இல்லை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இது குறித்து தங்களது மாவட்ட தலைமைகளுக்கும் தொண்டர்களுக்கும்
அறிவித்து மக்களுக்கு விளக்க சொல்வது இந்நிகழ்சி குறித்த விழிப்புணர்வையும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் அணைத்து தரப்பு மக்களிடையேயும் ஏற்படுத்தும்.


முகவை எம்.என்.பி யினரால் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்


தமிழகத்தில் மனித நீதிப் பாசறை மட்டுமல்லாது அணைத்து இசுலாமிய அமைப்புகளும் இதில் தங்களை இணைத்து ஒன்றிணைந்து செயல்பட்டால் இறைவன் நாடினால் உண்மையில் நாம் ஃபாசிச பயங்கரவாதிகளற்ற, இந்து தீவிரவாதிகளற்ற ஒரு வலிமையான இந்தியாவை பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க இயலும். இதை சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் தங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்போடு இணைத்து கொள்ள முன்வர வேண்டும்.


தமிழ் முஸ்லிம்களே அணி திரள்வீர், தமிழக தலித்துகளே, பிற்படுத்தப்பட்ட மக்களே ஒன்றினைவீர்!! நமது அணைத்து பாதைகளும் இம்மன்னில் விதைக்கப்பட்ட தீரர் திப்பு சுல்த்தான் நகர் பெங்களுரை நோக்கியதாக இருக்கட்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) அழைக்கின்றது.இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: