மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
ஆர்ப்பாட்டத்தில் புஷ்சை கண்டித்து பதாகைகளும் பேனர்களும் ஏந்தி வரப்பட்டன
எண்ணை வளமிக்க ஈராக நாட்டின் எண்ணை வளத்தை தன் வசம் ஆக்கி கொள்வதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் சதாம் உசேன் பதுக்கி வைத்துள்ளார் என்று காரணம் கூறிக்கொண்டு ஈராக்கின் மீது போர் தொடுத்து லட்சக்கணக்கில் அப்பாவி ஈராக்கிய பொதுமக்களை கொன்று குவித்து அந்நாட்டு அதிபர் சதாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தது இந்த அமெரிக்கா என்னும் தீவிரவாத நாடு.
அமெரிக்கா என்ற அயோக்கிய நாட்டால் அடாவடியாக நீக்கப்பட்ட ஈராக்கின் அதிபர் சதாம் ஹீசேன் அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு நீதிமன்றம் என்ற பெயரில் ஒரு நாடக மேடையை அமெரிக்காவின் ஈராக்கிய கைப்பாவை அரசு அமைத்து விசாரனை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகம் சமீபத்தில் முடிவுக்க வந்தது.
ஆயிரக்கணக்கில் திரன்ட மக்கள்
1982ல் டுஜைல் என்ற இடத்தில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹீசைனை கொல்ல நடந்த ஒரு சதி முறியடிப்பின் போது தற்க்காப்பு நடவடிக்கையின் போது அரச படைகளால் சிலர் கொல்லப்பட்டனர் அந்த குற்றச் சாட்டின் அடிப்படையில் புனையப்பட்ட பொய் வழக்கில் இன்று ஈராக்கின் அதிபர் சதாம் உசேனுக்கு அமெரிக்காவின் ஈராக்கிய அடிவருடி அரசாங்கம் மரண தன்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளனர்.
இது வரை அமெிரிக்கா என்னும் தீவிரவாத நாட்டால் எந்த காரணம் கொண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டதோ அதை நிறுபிக்கும் விதமாக பேரழிவு ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க பிரித்தானிய படைகள் லட்சக்கணக்கான மக்களை இரசாயன மற்றும் சிறிய வகை அனு ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்து ஈராக்கின் சொத்துக்களை சீரழித்து ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர்.
ஓழுங்கு படுத்தும் தமுமுக வினர்
1982ல் வெறும் 148 பேரை படுகொலை செய்ய சதாம் உசேன் காரணமாக இருந்தார் என்ற குற்றத்திற்காக சதாம் உசேனை தூக்கில் போட தீர்ப்பு என்றால் ஈராக்கிலும் ஆஃப்கானிலும் மில்லியன் கணக்கான மக்களை தங்களின் இரசாயன் மற்றும் பேரழிவு ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்து வரும் தீவிரவாதிகள் ஜார்ஜ் புஷ்சையும், டேனி பிளேயர் போன்றோரையும் நூறு முறை தூக்கில் போட்டாலும் அவர்கள் செய்த குற்றத்திற்கு ஈடாகாது என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்ற வண்செயல் புறிந்து வரும் அமெரிக்க பிரித்தானிய அரசுகளை கண்டித்தும் சதாம் உசேனை தூக்கில் போட விதிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் இந்திய அரசை உடணடியாக இந்த அமெரிக்காவின் இந்த செயலை கண்டிக்க போரியும் தமிழகமெங்கும் நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரால் கண்டண ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன். இந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழகமெங்கும் ஆயிரக் கணக்கில் ஆன்களும், பென்களும, குழந்தைகளுமாக கூடி அமெரிக்காவின் அராஜக செயல்களுக்கு எதிராகவும், சதாம் உசேனுக்கு தூக்கு விதிக்கப்பட்டதை கண்டித்தும் இது சம்பந்தமாக இந்திய அரசின் கண்டனத்தை தெறிவிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
கூடடிய கூட்டத்தில் உரையாற்றும் கோவை உமர்
கோவையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை.இ.உமர் அவர்கள் தலைமை வகித்தார்கள். 2500 க்கும் மேற்ப்பட்ட மக்கள் ஆன்களும் பென்களுமாக கலந்து கொண்டனர். அத்துடன் கோவையெங்கும் உள்ள சுமார் 25 க்கும் மேற்ப்பட்ட ஜமாத்துகளின் நிர்வாகிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து அராஜக அமெரிக்காவின் ஜனாநாயகத்திற்கு எதிரான செயல்களை கண்டித்து தங்கள் எதிர்ப்புக்களை தெறிவித்தனர்.
செய்திகள் மற்றும் புகைப்படம் : கோவை தங்கப்பா
1 comment:
bismillahirrahumanirraheem
the democratic protest is no use.It is not a islamic way.
Post a Comment