Sunday, November 05, 2006

தீர்ப்பு!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ததஜ தாயிகளும் தீர்மானங்களும்

இவர்கள் எப்படிப்பட்ட உத்தமர்கள் என்பதற்கு இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 2003ல் அ.த.ஜ.கூ. என்ற பி.ஜே. ஜமாஅத் கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில் பேசிய ஒரு மவுலவி, "சுருட்டு குடித்துக் கொண்டு தாஇகளாக இருக்கிறார்கள். தாஇகளாக இருப்பவர்கள் புகை பிடிக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார். இவர் எந்த மவுலவியை குறி வைத்து பேசினாரோ அந்த மவுலவி அடுத்து எழுந்தார். "தாஇகளாக இருப்பவர்கள் இரவு 11 மணிக்கு மேல் புளு பிலிம் பார்க்கலாமா? பள்ளி வாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா? எனவே இதற்கும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று பேசினார். அவ்வளவுதான் சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த மவுலவி. இந்த இரண்டு மவுலவிகளின் பெயரைக் குறிப்பிட்டு எழுதாவிட்டாலும் இதைப் படித்ததும் அந்த மவுலவிகள் யார் என்பதை அனைவரும் எளிதில் அறிவார்கள். அந்த இரண்டு தீர்மானத்தையும் மானமிகு அன்றைய தலைவரும் இன்றைய தலைவரும் இன்று வரை கண்டு கொள்ளவே இல்லை. இதுதான் அந்த தீர்மானத்தில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சிறப்பம்சம்.

அண்ணன் பி.ஜே. அளித்த மகாத்தான அந்த தீர்ப்பு.

அதே அமர்வில், பி.ஜே. ஜமாஅத்தில் ஷதாஇயாக இருக்கும் ஒரு மவுலவி பெண்கள் மதரஸாவில் உள்ள அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார் என்பது நிரூபணமானது. விசாரணைக் குழுவிடம் அந்த மவுலவியும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே என்ன தீர்ப்பு என்று கேட்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பி.ஜே. அளித்த தீர்ப்புதான் இன்றும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. பி.ஜே. அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா?

"இந்த தாஇ ஹாமித் பக்ரியை போய் சந்தித்து அவருடன் நட்பாக இருப்பதாக தெரிந்தால், அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார். அதனால் நீக்கப்பட்டார் என அறிவித்து செய்தி வெளியிடுவோம். ஹாமித் பக்ரியை போய் சந்திக்காமல் அவருடன் நட்பு வைக்காமல் ஒதுங்கி விட்டால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்."


இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் அண்ணன் பி.ஜே. அளித்த மகாத்தான அந்த தீர்ப்பு? 2003ல் இந்த தீர்ப்பைப் பெற்ற அந்த மவுலவிக்கு 2004ல் அண்ணன் துவங்கிய புதிய கட்சியான த.த.ஜ.வில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. பெண்கள் மதரஸாவில் விஷம விளையாட்டு பண்ணியவர்களை ரமழான் மாதத்தில் அழைத்து கவுரவிக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட அமைப்பு ஒன்று வளைகுடாவில் புதிய பெயரில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பு சார்பில் 3வது ஆண்டில் இந்த மவுலவி.யும் அழைத்து கவுரவிக்கப்பட்டார்.

இதுதான் இவர்களின் நிலை !!

தீர்ப்புக்கள் தொடரும் ....

அன்புடன்
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி

No comments: