Monday, October 30, 2006

கட்டப்பஞ்சாயத்து கழகத்தின் அடாவடி?

கட்டப்பஞ்சாயத்து கழகத்தின் அடாவடி?



கோயமுத்தூர் - 1
17.10.2006


அனுப்புநர் : P.A. அப்துல் காதர்,
சிக்னல் சர்வீஸ் சென்டர்,
810, ஒப்பனக்கார வீதி,
கோவை - 1

பெறுநர் : P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
தலைவர் TNTJ
மற்றும் உணர்வு ஆசிரியர்
சென்னை - 1

பொருள் : "கோவையில் கட்டப்பஞ்சாயத்து கழகத்தின் அடாவடி" என்ற தலைப்பில் ஒரு தலை பட்சமான தங்களுடைய செய்தியை நியாயம் கோருவது சம்பந்தமாக.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

மேற்க்கண்ட விலாசத்தில் கடை வைத்திருக்குமு் நான் கடிதம் மூலம் தங்களுக்கு தெறியப்படுத்துவது என்னவென்றால் நான் இந்த வாரம் உணர்வு பத்திரிகையில் படித்தேன். அதில் கண்ட விஷயங்கள் முழுவதும் ஒரு பிரச்சினை இரன்டு போர் மத்தியில் வரும்போது இரன்டு தரப்பினரையும் வைத்து பேசிய பிறகே நிலைமையை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக தங்களின் பத்திரிகையில் என்னைப்பற்றி அவதூறாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. நான் கடந்த காலங்களில் மிகப்பெரிய அளவில் வியாபாரங்கள் செய்து என்னுடைய வருமானத்தில் இஸ்லாமிய சமூகப் பணிகளுக்காக பல உதவிகளையும் செய்து வந்துள்ளேன். ஆனால் இறைவனுடைய நாட்டம் இன்று நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளேன்.

கடந்த காலங்களில் என் நிறுவனத்திற்கு கூட தாங்கள் விஜயம் செய்து என்னோடு அறிமுகமானதை என்னி மனம் மகிழந்தவன். இந்நிலையில் இந்த நிகழ்வுகளால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இதனால் தங்களிடமிருந்து நல்ல ஒரு நியாயம் கிடைக்கும் என்றும், ஆரம்ப கால கட்டங்களில் உங்களுடைய கேசட்டுகளை அதிகமதிகமாக பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெளியிட்டவன் நான் என்பதாலும், கோவை மாவட்ட TNTJ குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் என்னுடைய இந்த பிரச்சினைக்கு தீர்வு கானாமல் ஒரு தலைப்பட்சமாக உள்ளது உள்ளத்தில் மிகப்பெறும் மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது எனவு இதற்கு TNTJ ன் மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய உங்களிடம் நியாயம் கிடைக்குமு் என்றும் எதிர் பார்க்கின்றேன்.

உங்கள் பதிலையும், முடிவையும் எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
அப்துல் காதர்
செல் நம்பர் : +91 - 9363133123

கையெழுத்து பிரதி படிக்க :

பக்கம் - 1

பக்கம் - 2

ஆசிரியர் குறிப்பு :

பொய்களை மிகைப்படுத்தி உண்மை போல வெளியிடும் சூடு சொறனை இல்லாத உணர்வில் மேற்கூறிய செய்தியை ஓவராக பில்ட்-அப் செய்து மாநிலச் செயளாலர் எஸ்.எம் பாக்கரின் செல்லில் கேட்ட அபயக்குரல் (எப்போதும் அபளைகளின் குரலை கேட்பவருக்கு ஒரு சேன்ஞ்ச்) உயிரை காப்பாற்ற சொல்லி கதறல் என்று ஒரு ஆக்சன் சினிமா பானியில் கதை கட்டி கோடாம்பாக்கத்தை மிஞ்சும் வகையில் வசனங்களோடும் ஆக்சன்களோடும் பிலிம் காட்டியிருந்தார்கள். அந்த உணர்வு வெளியான உடனேயே சம்பந்தப்பட்ட ஜமாத்தினரும், உணர்வின் உச்ச கட்ட பொய்யாட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களும் நம்மை தொடர்பு கொண்டு அந்த செய்திக்குறிய தங்களது கண்டனங்களை "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை" யில் வெளிட கோரினர். நாம் அந்த நேரத்தில் ஈத், மற்றும் நோன்பு திறப்பு குடில் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நம்மால் அப்போது அதை பிரசுரிக்க இயலவில்லை.

ஜமாத்தினரும் பாதிக்கப்பட்ட மக்களும் தற்போது நம்மை தொடர்பு கொண்டு தங்களது மறுப்புக்களையும், கண்டனங்களையும் பிரசுரிக்க வலியுருத்தியதால் இங்கு அவற்றை பதிகின்றோம்.

உணர்வின் பொய்களை பல முறை அம்பலப்படுத்தி இனைய வீதிகளில் விட்டு பலரும் பலமுறை செருப்பால் அடித்தும் அது தன்னை திருத்திக் கொள்ள முன்வரவில்லை. இனி இதை மக்கள் மேலும் புறக்கனிக்க முன்வர வேண்டும் அப்போதுதான் மலிவு விலை மதுவையும் / மாதுவையும் விட மலிவான / மோஷமான தனது சமுதாயத்தையே காட்டிக்கொடுத்தும் / பிரித்தும் கூறு போட்டு விற்கும் இதன் செய்திகள் மட்டுப்படுத்தப்படும்.

இவற்றையும் படிக்கவும் :

தமுமுக கோவை மாவட்ட செயளாலர் கண்டண அறிக்கை

பக்கம் - 1

பக்கம் - 2

பக்கம் - 3


தாருஸ் ஸலாம் சுன்னத் ஜமாத்தினரால் உணர்வுக்கு அதன் பொய்யை மறுத்து அனுப்பப்பட்ட கண்டண அறிக்கை

தாருஸ் ஸலாம் சுன்னத் ஜமாத்தினரால் மக்கள் உரிமை பத்திரிகைக்கு உணர்வின் பொய்யை மறுத்து அனுப்பப்பட்ட கண்டண அறிக்கை

உணர்வு என்ற மஞ்சல் பத்திரிகையில் வெளி வந்த பொய்

No comments: