Wednesday, September 13, 2006

மறுக்கப்பட்ட நீதியை தேடி...(VIDEOS)

மறுக்கப்பட்ட நீதியை தேடி...
கட்டாயம் காண வேண்டிய கருத்தரங்க காட்சிகள்




வீடியோவை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்

CLICK HERE TO VIEW THE VIDEO

அன்பின் சமுதாயச் சொந்தங்களே,

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருன்ட சிறையின் கொட்டடிகளில் ஜாமின் வழங்கப்படாமல் இந்திய அரசியல் சாசனம் கூறும் அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு தங்கள் குடும்பத்தை பிறிந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரர்கள் விசாரனை கைதிகளாக வாடி வருகின்றார்கள்.

இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு தண்டனை கொடுத்தால் கூட இந்நேரம் விடுதலையாகி இருப்பார்கள். இவர்களோ சிறைக்கொற்றைகளில் தங்கள் இளமையை கழிக்கிறார்கள். இவர்களின் மனைவியும் குழந்தைகளுமே கவணிக்க ஆள் இன்றி ஆதரவும் இன்றி நடுத்தெருவில். இங்கிருக்கும் புகைப்படத்தில் 'எனது தந்தையை விடுதலை செய்யுங்கள்' என்று பதாகை உயர்த்தி நிற்கும் இந்த பிஞ்சின் முகத்தில் உள்ள செய்தியை படியுங்கள் உங்கள் கண்கள் தன்னால் இரத்த கண்ணீர் வடிக்கும்.

தந்தையையும் தனையனையும் இழந்து ஆதறவற்று நிற்கின்றன நூற்றுக்கணக்காக குடும்பங்கள். தங்களை கரையேற்ற வேண்டிய தந்தையும் தனயனும் சிறைக்கொற்றைகளில் இந்த சகோதரிகளோ 30 வயது தான்டியும் முதிர் கண்ணிகளாய் வாழும் அவலம். அன்றாட சோற்றுக்கும் மாணத்தை மறைக்க உடைகளுக்கும் அறக்கட்டளைகளை கையேந்தி நிற்க வேண்டிய சூழ்நிலை. தந்தையிருந்தால் தன்னை கான்வென்டில் சேர்த்து படிக்க வைப்பார் ஆனால் தாயோ தன் இளமையை தனிமையில் கண்ணீருக்குள் கரைக்கின்றால் பாவம் இந்த மலழைகள் என்ன செய்யும் உங்களை போன்ற சில கருனை உள்ளங்கள் அளிக்கும் அருட்கொடைகளில் தங்கள் பசியை போக்கி தங்கள் கல்வியை தொடரும் நிலை.

இதுதான் நமது பார்வையில் படாமல் போன இந்த பாவப்பட்ட ஜென்மங்களின் நிலை!! இவர்களின் இந்த நிலைக்கு காரணம்? இவர்கள் முஸ்லிம்களாக பிறந்தது, இவர்களின் தந்தையரும் தனயன்மாரும் மார்க்கத்தை அதிகமாக நேசித்தது!! இது தான் இவர்கள் செய்த குற்றம்!! இவர்களின் நிலையை விளக்கி சட்ட ஆலோசகர்களும், வழக்கறிஞர்களும், சமுதாய தலைவர்களும் இனைந்து நடத்திய ஒரு கருத்தரங்கத்தை இங்கு உங்கள் பார்வைக்காக தந்துள்ளோம். இந்த வீடீயோவை பாருங்கள்...இவர்களின் நிலையை உணர்ந்து கொள்ளுங்கள்...இவர்களுக்காக பிறார்த்தியுங்கள்..இந்த ரமழானிலாவது இவர்களின் சிறகுகள் விறியட்டும்..உங்களின் ஆதரவு இந்த குடும்பங்களின் காயங்களை ஆற்ற உதவும்.

மேலும் தொடர்புகளுக்கு

சிறுபான்மையினர் நல அறக்கட்டளை

ஜனாப். கோவை தங்கப்பா அல்லது சகோ. கலீல்

தொலைபேசி : +91 944 365 4473 / +91 422 435 6336

வீடியோவை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்

CLICK HERE TO VIEW THE VIDEO


நன்றி
முகவைத்தமிழன்

இஸ்லாம் முஸ்லிம் இஸ்லாமியர்கள் கோவை சிறைவாசிகள் காரைக்குடி முஸ்லிம்கள்

No comments: