Saturday, September 09, 2006

ஒன்னா நம்பர் பொய்யன், அயோக்கியன் யார்? - பி.ஜே

கடந்த 25-08-2006 (ஷஃபான் முதல்நாள் ஹிஜ்ரி 1427) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் "ஜித்தா துறைமுக தஃவா அழைப்பு மையத்தின்" சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்ச்சி ஜித்தா துறைமுகம் GCT பள்ளிவாசலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நானூறுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சகோ. ஜமால் முஹம்மது மதனீ அவர்கள் திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற தலைப்பில் நீண்டதொரு அழகிய உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் :

அல்லாஹ்வின் அருள்மறையாகிய இக்குர்ஆனுக்கு இருக்கக்கூடிய மகத்துவத்தில் அது இறங்கிய வரலாறு தொகுக்கப்பட்ட விதம் ஆகியவற்றுக்குப் பெரும் பங்குண்டு. கியாமநாள் வரை மக்களால் பின்பற்றப் படும் இப்புனித வேதம் பிற வேதங்களைப் போல் மனிதகரங்களால் மாசுபடுத்தப்பட்டு இடைச்செருகல்கள் மாற்றங்கள் போன்றவற்றுக்கு ஆளாகாமல் எப்படி அருளப்பட்டதோ அது அப்படியே பாதுகாப்புடன் உள்ளது இவ்வேதத்தின் சிறப்பு.

இவ்வேதத்தை மாசு படுத்த, குறைகூற யூத, கிறிஸ்தவர்கள் செய்த முயற்சிகள் அதிகமதிகம். அவ்வேதத்தை ஏற்க மறுத்தவர்களுக்கு நிராகரித்தோர்க்கு அல்லாஹ் அருள்மறை வசனங்களில் கியாமநாள் வரைக்கும் தொடர்கின்ற சவால்களை விடுக்கிறான். அவை இவ்வேதத்தில் முரண்பாடுகளில்லை (4:82).

இவ்வேதத்தில் உள்ள அத்தியாயம் போன்ற ஏதேனும் ஒரு அத்தியாயத்தையாவது அல்லாஹ் அல்லாத படைப்பினங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும் உருவாக்கவியலாது (2:23).

இவ்வேதத்தில் எந்த மாற்றமோ மாறுதலும் செய்யவியலாத வகையில் அல்லாஹ்வே இதனைப் பாதுகாக்கிறான் (15:9).

"முந்திய நபிமார்கள் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு சில அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். அவற்றை அச்சமுதாய மக்களிடம் நிகழ்த்திக் காட்டினார்கள். மக்களில் சிலர் நபிமார்கள் போதித்தவற்றை ஏற்றனர். பலர் மறுத்தனர். ஆனால் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அற்புதம் அருள்மறைக் குர்ஆனே. உத்தம திருநபி (ஸல்) அவர்கள் இக்குர்ஆனிய வசனங்களை அன்றைய அரபுலகோர்க்கு எடுத்துரைத்த போது சிலர் ஏற்றனர். சிலர் இது சூனியம் என்றனர்.

மகத்துவங்கள் பல பெற்றுத்திகழும் அருள்மறையின் இச்சிறப்புகளை சந்தேகிக்கும் நிலையை இன்று சிலர் உருவாக்கியுள்ளனர். குர்ஆனை மொழிபெயர்க்கும் போர்வையில் குர்ஆன் மீதே அதன் தொகுக்கப் பட்ட வரலாறு என்ற தலைப்பில் ஏகப்பட்ட சுய கருத்துக்கள் இவ்வேதத்தை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு கூறப்பட்டுள்ள விஷயங்களை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் எந்த இயக்கத்தையும் அமைப்பையும் சங்கத்தையும் சார்ந்தவனல்ல. (யாருடைய தவறை சுட்டிக்காட்டுகிறேனோ அவரின் நாட்டை) அதாவது இந்திய நாட்டைச் சார்ந்தவனும் அல்ல. மார்க்கத்தின் மீது வாரி வீசப்படும் அவதூறுகளை அகற்றுவதுதான் என் நோக்கம்" என்ற அவரின் உரை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்தம் உரையினைத் தொடர்கையில்:
குர்ஆன் தொகுப்பு 4 கட்ட நிலையில் உள்ளதாகும்.

1.நபி(ஸல்) அவர்கள்காலம்.
2.அபூபக்கர் (ரலி)அவர்களின் ஆட்சிகாலம்.
3.உஸ்மான் (ரலி)அவர்கள் ஆட்சிகாலம்.
4. அதற்குப் பின் வந்த உமைய்யாக்களின் காலம்.

நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்ததும் அவ்வஹி செய்திகளை நபிகள் கூற அதனை காத்திப் வஹீ என்ற எழுத்தாளர்களாகிய நபித்தோழர்களில் சிலர், தோல்களில் ஈச்சமர மட்டைகளில் எலும்புகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர். எந்த வசனங்களளை எங்கு எந்த அத்தியாயத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதை நபிகளார் கூற அதை அப்படியே காத்திப்வஹீ எழுத்தர்கள் எழுதி வைத்திருந்தனர். இவ்வாறு அருள்மறை வசனங்கள் ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மனதில்,அருள்மறை வசனங்களை மனனமிட்டிருந்த நபித்தோழர்கள் சிலரின் உள்ளத்தில் காத்திப்வஹீ எழுத்தர்களின் ஏட்டில் என்ற நிலையில் இருந்தன. நபி(ஸல்)அவர்கள் உயிருடன் இருக்கும்போது வானவர் ஜிப்ரீல் (அலை )அவர்கள் ரமலானில் குர்ஆனை ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் (அலை) ஓதிக்காட்டுவார்கள். (புஹாரி 1902)

.நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின் கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் நபி என்று தன்னை வாதித்த முஸைலிமா என்ற பொய்யனை எதிர்த்து நிகழ்ந்த யமாமாபோரில் ஏராளமான நபித்தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். அந்நிலையைச் சுட்டிக்காட்டி உமர்(ரலி) அவர்கள் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் குர்ஆனைத் தொகுத்து முறைப்படுத்த வேண்டியதின் அவசியத்தை எடுத்துக்கூற நபி(ஸல்) அவர்கள் செய்யாத வேலையை நாம் செய்ய வேண்டுமா? என வினவ உமர்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகுக்கப்பட்டு அதன் வசனங்கள் முறையாக வருங்கால மக்களுக்குப் பயன்தரவேண்டும் என்ற ஆலோசனையை வலியுறுத்த அபூபக்கர் (ரலி) அவர்களின் உத்திரவில் நபித்தோழரும் காத்திப்வஹீ எழுத்தர்களில் ஒருவருமாகிய ஜைதுபின் ஸாபித் (ரலி) அவர்கள் தலைமையில் ஒரு நபித்தோழர்கள் குழவை அமைத்து அவர்கள் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள்.

அதன் பிரதி நபி(ஸல்) அவர்களின் மனைவி ஹப்ஸா(ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்தது. உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் ஹப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த ஒன்று திரட்டப்பட்ட குர்ஆனிய தொகுப்பு பல பிரதிகளாக ஆக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. குர்ஆன் தொகுக்கப் பட்ட வரலாறு, நபித்தோழர்களாகிய காத்திப்வஹீ என்ற எழுத்தர்கள் குர்ஆனிய வசனங்களை தோலில் ஈச்சமரமட்டைகளில் எலும்புகளில் எழுதிச் சேகரித்து வைத்த செய்திகள் ஆகியவை ஹதீஸ் நூல்களாகிய புஹாரி, திர்மிதி, அஹ்மது, இப்னுஹிப்பான் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்தும் சகோ,பீ.ஜே. அவர்கள் மொழியாக்கம் செய்துள்ள தமிழ் குர்ஆனிய மொழிபெயர்ப்பில் ஏராளமான சந்தேகங்களைக் கிளப்பும் வகையில் குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன. அத்தியாயங்களின் பெயர் சூட்டப்பட்டது, அத்தியாயங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ள வசனங்களின் எண்ணிக்கை, வசன எண்கள் இடப்பட்டதில் எழுவாய் பயனிலை எது என்பதை முறைப்படுத்தாமல் வசன எண்கள் இடப்பட்டுள்ளன, குர்ஆனிய வசனங்கள் சிலவற்றில் உள்ள எழுத்துப் பிழைகள் என பட்டியல் தொடர்கின்றது.




அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் தான் பெயரிட்டுள்ளனராம்..

இது போல் 114 அத்தியாயங்களையும் தேடினால் மிகப் பெரும் அளவிலான அத்தியாயங்களுக்கு அதில் உள்ள செய்திகளின் அடிப்படையில் பிற்காலத்தில் தான் பெயரிட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனில் எழுத்துப் பிழைகளாம் ..

உஸ்மான் (ரலி) அவர்களால் குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்ட போது எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.

அத்தியாயங்களை வரிசைப்படுத்துதலை நபிகள் நாயகம் செய்யவில்லையாம் ..

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை. - பி.ஜைனுல் ஆபிதீன்





இவைகள் எல்லாம் தவறுகள் எனச்சுட்டிக்காட்டிய சகோ.பீ.ஜே, அவர்கள் அதே தவறைத் தம் மொழிபெயர்ப்பிலும் கையாண்டிருப்பது ஏன்?

இச்செய்திகள் கவனமாக தொகுக்கப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு எழுத்துப் பிழைகூட இல்லாமல் அப்படியே 1400 வருங்களாக மக்களுக்கு கிடைக்கிறது என்பதும் அறிஞர்கள் அதற்கான வழிவகைகளை செய்துள்ளார்கள் என்பதும் இன்றுவரை நாம் அறிந்த சரித்திரம். இதை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் கூட தனது உரைகளில் உறுதி படுத்தியிருக்கிறார். (Play video / Download) ஆனால் தன்னுடைய குர்ஆன் மொழிப் பெயர்ப்பில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.

சந்தேகங்களைக் கிளறிவிட்டு மக்கள் மன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சகோ.பீ.ஜே. அவர்கள் தம் உரைகளில்கூட மேற்கூறிய இக்குறைகளை மறுத்து முரணான கருத்துக்கள் கூறியிருப்பதை இத்துடன் இணைத்துள்ள வீடியோ கிளிப்புகளில் காணுங்கள். குர்ஆனின் வரிவடிவம்தான் மாறியது ஒலிவடிவம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை. குர்ஆன் தொகுக்கப் பட்ட வரலாறு குறித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள், சூரா கஹ்ஃப் முதல் 10 வசனங்களை ஓதினால் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு (அபூதாவூத்) போன்ற பல்வேறு ஹதீஸ்களை கண்டுகொள்ளாமல் தம் சுயவிளக்கங்களை முன்னிறுத்தி மொழிபெயர்ப்பில் குர்ஆனிய தொகுப்பு வரலாறு தந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.




இவரின் அல்குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் சூரா அல்ஃபாத்திஹா வசன எண்களும் அடிக்குறிப்பும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப்
(படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச்செல்லாதவர்கள்.

அடிக்குறிப்பு:

26. பொருத்தமில்லாத வசன எண்கள்

திருக்குர்ஆனின் வசன எண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலோ, நபித் தோழர்களாலோ இடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களிட்டனர். பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் இட்டாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர். அத்தகைய இடங்களில் இதுவும் ஒன்றாகும். ... - பி.ஜைனுல் ஆபிதீன்





ஆனால் மேற்கண்ட கருத்துக்கு எதிராக, அவரே பேசிய வீடியோ இதோ. (Play video / Download),

ஒவ்வொரு ரமலானின் இரவுகளிலும் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிக்காட்டியதை "அந்த வருடத்தில்" இறங்கிய வசனங்களை என்ற ஹதீஸில் இல்லாத நூதன விளக்கத்தை சகோ. பீ.ஜே. அவர்கள் (Play video / Download) தந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஏராளமான நூதன விளக்கங்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக குர்ஆனையே சந்தேகிக்க வைக்கும் போக்கு யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தைக் களங்கப் படுத்த செய்த சதிகளின் அடிப்படையை சகோ.பீ.ஜே. அவர்களும் கையாள்கின்றார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

முஸ்லிம்களை மார்க்கத்தை சொல்லி மட்டுமே வழிகெடுக்க முடியும் என்று சொன்ன பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதே வழிகெடுக்கும் வேலையை அவர் செய்வது எதற்காக என்று மக்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். பொய் சொல்பவனை இல்லையென்றால் அவரின் தற்போதைய தடுமாற்றங்களை புரிந்துக் கொண்டு, அவரின் விஷயங்களில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தமிழ் பேசும் முஸ்லிம்களின் கட்டாய கடமையாகும்.

ஒன்னா நம்பர் பொய்யன், அயோக்கியன் ஆகியோர்களை, அவர்களின் எழுத்துகளில் இருந்தே முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து உலக மக்களுக்கு இறைவன் அடையாளம் காட்டுகிறான் என்பதை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாயாலேயே (Play video / Download)கேளுங்கள். அதேபோல, தனது எழுத்துக்களிலேயே முரண்பாடுகளை கொண்டுள்ள பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எந்த வகையில் சேர்ப்பது என்பதையும் முடிவு செய்யுங்கள்.


இதுபோன்ற எண்ணற்ற வரலாற்று புரட்டுகளையும், தடுமாற்றங்களையும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பிலிருந்தும், பி.ஜேயின் வீடியோக்களிலிருந்தும் எடுத்துக்காட்டிய சகோ. ஜமால் முஹம்மது மதனீ அவர்கள், இறுதியில் சத்தியத்தை அறிந்து அதன்வழி நடக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக என்ற பிரார்த்தனையுடன் உரையை முடித்தார்.

தொகுப்பு: நெல்லை இப்னு கலாம்ரசூல்

SOURCE :ISLAMKALVI

இஸ்லாம் முஸ்லிம் இஸ்லாம் இஸ்லாமியர்கள்

No comments: