கோவையில் கூடிய ஜம்மியத்துன்னிஸா மகளிரணியினரின் ஒருபகுதி
கோவை 05, ஆகஸ்ட் : நேற்று 04-08-2006 வெள்ளி அன்று மாலை 5.00 மணிக்கு MNP ளின் மகளிரணியான ஜம்மியத்துன்னிஸா சார்பில் "லெபனானை தாக்கும் யூத பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை மனித நீதிப் பாசறை மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் MNP ஜம்மியத்துன்னிஸா வை சேர்ந்த சகோதரி. ஹபீப் நிஸா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்கள்.
இஸ்ரேலின் அத்து மீறல்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஐநா சபையின் தீர்மானங்களுக்கு கட்டுப்படாத இஸ்ரேலை கண்டித்தும் பேசப்பட்டன. மற்றும் இக்கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லெபனான் மற்றும் ஃபலஸ்த்தீன் மீத இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரவாத தாக்குதல்களை இக்கூட்டம் வண்மையாக கண்டிக்கின்றது.
யூதர்களும், அமெரிக்கர்களும் போட்ட "புதிய மத்திய கிழக்கு" என்ற திட்டத்தின் கீழ் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இது அகண்ட இஸ்ரேல் என்ற திட்டத்தின் கீழ் தனது எல்லைகளை விரிவு படுத்தும் திட்டமாகும்.
ஐநா சபை உடனடியாக பன்னாட்டு படைகளை அனுப்பி இவ்வாக்கிரமிப்பையும் படுகொலைகளையும் தடுக்க வேண்டும்.
தற்போது லெபனானில் உள்ள ஐநா சபையின் அமைதி காக்கும் படையினரது மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை இக்கூட்டம் கண்டிக்கின்றது.
உலக நாடுகள் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு தந்திருக்கும் அங்கிகரத்தை ரத்து செய்ய வேண்டும்.
எந்த நிலையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய படைகளான நேட்டோ படைகளை லெபனானுக்குள் அனுமதிக்க கூடாது.ஏனெனில் அது யூதர்களின் இராணுவமாகவே செயல்படும்.
அழிக்கப்பட்ட லெபனானை கட்டியெழுப்ப உலக நாடுகள் முன்வர வேண்டும்.
லெபனான் மற்றும் ஃபலஸ்த்தீனுக்கு உதவ முன்வந்துள்ள பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இந்த கூட்டம் பாராட்டுகின்றது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. இக்கூட்டத்திற்கு பென்கள் திரளாக வருகை தந்திருந்தது இதை கண்டோருக்கு ஆச்சர்யத்தை எழுப்பியது.
டவுன்லோட் செய்வதற்கு :
கூட்டத்தில் போடப்பட்ட தீர்மான நகல்
கூட்டத்திற்கான அழைப்பிதழ்
செய்திகள் மற்றும் புகைப்படம் : நமது கோவை வாசகர்கள்
No comments:
Post a Comment