Monday, August 14, 2006

பி.ஜேவை தமுமுக வரவேற்கிறது - தமீமுல் அன்சாரி

தமீமுல் அன்சாரி


கீழக்கரை : த.மு.மு.க., மாநில செயலாளர் தமீமுல் அன்சாரி கீழக்கரையில் தெரிவித்ததாவது: தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயிலுல் ஆப்தீன் த.மு.மு.க., உடன் இணைய முன்வந்தால் ஆதரிக்க தயார். அவர் கொள்கை பிடிப்பு இல்லாதவர். எந்த அமைப்பிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒற்றுமையாக இருக்க மாட் டார். இவரால் தி.மு.க., வை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. கருணாநிதியை ஆதரிக்க முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. அப்படி தி.மு.க., வுக்கு வந்தாலும் உண்மையுடன் இருக்க மாட் டார். இவ்வாறு தெரிவித்தார். மாநில துணை செயலாளர் ஹாருன் ரஷீது, தெற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன், பொருளாளர் பாதுஷா, செயலாளர் நிஸ்பார், நகர் செயலாளர் பசானி, தலைவர் சீனி முகம்மது உடனிருந்தனர்.

நன்றி : தினமலர் 14/08/2006

No comments: