Tuesday, June 13, 2006

சிறையில் கொடுமை, முதல்வர் கவனிப்பாரா?

சிறையில் கொடுமை - பழைய ஆட்சியின் கொடுமை
இவ்வாட்சியிலும் தொடரும் அவலம்..
இறைவன் திருப்பெயரால்
வேதனையோ வேதனை மரண வேதனை சிறைவாசிகளுக்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழக இஸ்லாமிய தலைமைகளே!

அன்புடையீர் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் அறிய. கோவை சிறையில் இருந்து எம். முகமது அன்சாரி எழுதிக்கொள்வது எட்டாண்டுகளுக்கும் மேலாக சிறைபட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளுக்காக அவர்களின் விடுதலைக்காக தாங்கள் முயற்வி செய்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம், எதிர்ப்பார்க்கின்றோம்.

இது குறித்து (விடுதலை) தங்களிடம் இருந்து தொடர் தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சிறைவாசிகளின் சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்தே ஆகவேண்டும். கடந்த ஆட்சியில் சிறைவாசிகளுக்கு ஜாமீன் மறுப்பு, சிகிச்சை மறுப்பு, சிறைக்கொடுமை என பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது. முஸ்லிம்களின் விஷயத்தில் என்பது போல் சில நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 103-வது எதிரியாக உள்ள ஷெரீப் (வயது 26) என்பவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயங்களால் கடந்த எட்டு வருடங்களாக துன்பப்பட்டு வருகின்றார். சிறையில் சரியான சிகிச்சை இல்லை. இதனால் கடந்த 2006 மார்ச் மாதம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் தனயார் மருத்துவமனையில் (கங்கா மருத்துவமனை) பரிசோதனை மேற்கொண்டபோது மருத்துவர்கள் அவருக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து கால் அழுகி காலை இழக்க வேண்டும் என எச்சரித்தனர்.

உடனடியாக மறுபடியும் அறுவை சிகிச்சைக்கு மனு தாக்கல் செய்த போது நீதிமன்றத்தில் கடந்த அரசு கடுமையாக ஆட்சேபணை தெரிவித்ததால் நீதிமன்றம் சிகிச்சைக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. தற்போது மீண்டும் ஷெரீப்பின் காலின் நிலை மோசமானதாலும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை இல்லை என்பதாலும் கடந்த 29.05.2006 அன்று நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்த போது நிலையின் விபரீதம் உணர்ந்த விசாரணை நீதிமன்றம் (தனிகோர்ட், கோவை) 'கங்கா மருத்துவமனை'யில் சிகிச்சை பெற 31.05.2006 அன்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போது இவ்வரசு உயர்நீதிமன்றத்தில் சிகிச்சைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுள்ளது. சிறைவாசிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறைவாசிகளும் அவர்களது குடும்பத்தார்களும் விடுதலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில் கடந்த ஆட்சியின் அதே மனோபாவத்தோடு வெளியில்
செல்லவும் விடமாட்டோம், சிறையிலும் வாழ அனுமதிக்க மாட்டோம் என்பது போல் ஷெரீப்பின் சிகிச்சைக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டில்' தடை உத்தரவு பெற்றுள்ளது நிரூபணம் செய்கின்றது. ஏற்கனவே கடந்த 2002-ல் ஒருவரை இழந்து விட்டோம். மற்றொருவர் மரணநோய்க்கு உள்ளாகி உள்ளார். தற்போது ஷெரீப் காலை இழக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே, தங்களின் விடுதலை போன்ற முயற்சிகள் ஒருபுறம் இருப்பினும், அது காலதாமதம் ஆவதையும் பொறுத்திருக்கிறோம். ஆனால், ஷஷெரீப்' உடைய நிலைகள் போன்ற விஷயங்களை தாங்கள் உடன் கவனத்தில் கொண்டு காலதாமதம் இன்றி தீர்க்கவேண்டும். இல்லையெனில், சகோதரனின் காலை இழக்க வேண்டி வரும். இவ்விஷயத்தில் நீதிமன்றத்தை காரணம் காட்டி அரசு தப்பிக்க இயலாது. கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராகவே அரசு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளது. எனவே, சிகிச்சை மறுப்பிற்கும் சகோதரனின் நிலைக்கும் அரசே முழு முதற்காரணம். எனவே, தாங்கள் இது விஷயத்தில் கவனம் கொண்டு சிறைவாசிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்ட நடவடிக்கை எடுக்கவும். ஷெரீப் ஷகங்கா மருத்துவமனை'யில் சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யவும்.
மேலும் வரும் 13.06.2006 அன்று சர்தார் எதிரி 123 என்பவரின் ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை வர இருக்கிறது. இவருக்கு எதிராக ஒரு சாட்சியும், குற்றச்சாட்டும் இல்லை என்பது தாங்கள் அறிந்ததே.
மேலும் மேலப்பாளையம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சிறைவாசிகளுக்கு நீதிமன்றம் (தனிக்கோர்ட், கோவை) அவர்களது குடும்பத்தார்களை சந்திக்க ஏதுவாக அவரவர் ஊரில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு (பாளையங்கோட்டை, திருசு;சி) மாற்றல் உத்தரவு அளித்ததற்கு எதிராகவும் இவ்வரசு ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ளது.


மேலும் இவ்வழக்கில் எதிரி 82 பஷீர் (கே.கே.நகர்) என்பவருக்கு முதுகுதண்டுவட பிரச்சனைக்கு கோவை அரவு மருத்துவமனையில் MRI SCAN பரிசோதனை இல்லை. அதனால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அதனடிப்படையில் விசாரணை நீதிமன்றம் (தனிக்கோர்ட், கோவை) சென்னைக்கு சிகிச்சைக்கு செல்ல பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் இவ்வரசு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளது.


எனவே, இதுபோன்ற மனிதாபிமானமாக சிகிச்சைகள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட அரசே தடையாக இருப்பது அடக்குமுறை போக்காகும். இதனை நீக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சிறைவாசிகள் அவர்களின் குடும்பத்தவர்களின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
எம் முஹம்மது அன்சாரி
விசாரணை சிறைவாசி
கோவை மத்திய சிறைகோவை - 18
கோவை12.06.2006

நகல்:

பேராசிரியர். கே. எம். காதர் மைதீன் எம்.ஏ., எம்.பி.
மாநில தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
சென்னை - 600 001

ஜனாப். பேராசிரியர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சென்னை - 600 001

ஜனாப். எம். குலாம் முஹம்மது.
எம்.ஏ.மாநிலத் தலைவர்
மனித நீதி பாசறை
சென்னை - 600 003

1 comment:

ஆத்தூர்வாசி said...

We request all the organisations (especially TMMK - a DMK ally and other factions) to do the needful. To acheive a basic humanitarian needs, to acheive juridicially allowed -- ordered basic humanitarian needs to the prisoners.