Wednesday, June 14, 2006

சத்திய மேவ ஜயதே??-பஸ்லுல் இலாஹி

சங்கே முழங்கு !!
முதல் மெயில்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

பொய் (மெயில்)களால் சிறைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கோவை மத்திய சிறையில் உள்ள அல்-உம்மா தலைவர் சகோதரர் அன்சாரி அவர்களின் பேட்டி என்ற பெயரால் ரைசுத்தீன் அவர்களிடமிருந்து மெயில்கள் வந்துள்ளன. அவரது வலைப்பதிவிலும் அவை இடம் பெற்றுள்ளன. பேட்டி என்றதும் நேரில் சந்தித்து கேள்வி கேட்டு பதில் பெற்று இருக்கிறார்கள் என்றுதான் பலர் எண்ணியுள்ளனர். அது வெளியிடப்பட்ட முறைதான் நேரில் சந்தித்து பேட்டி கண்டது போல் உள்ளது. அது நேரில் கேட்டு பதில் பெற்ற பேட்டி அல்ல என்பதுதான் உண்மை. உண்மைகளை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.அன்சாரி அவர்களின் பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ளதில் உள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்கள் குறித்தும், இதற்கு முன்பு இதே வலைப்பதிவில் 2 சிறைவாசிகள் பெயரால் வெளியான தவறான செய்திகள் குறித்தும் உடனடியாக சம்பந்தப்பட்ட சிறைவாசிகளிடமும் தங்கப்பா அவர்களிடமும் நேரில் கேட்டேன். அவர்கள் கூறிய பதில்களால் அதிர்ச்சி அடைந்தேன்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களால் உண்டான பாதிப்புகள் யாவும் சிறைவாசிகளுக்கே ஏற்பட்டது. எனவே இது சம்பந்தமான உண்மைகளை உங்கள் கவனத்திற்கு தருகிறேன். கடந்த ஆண்டு நடக்க இருந்த பாதிப்பையும் சொல்லிக் காட்டினேன்.முதலில் சமீபத்திய செய்தியை எடுத்துக் கொள்வோம். எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள். இது அல்-உம்மா தலைவர் சகோதரர் அன்சாரி அவர்களின் பேட்டி என்ற பெரால் வந்த 2ஆவது மெயிலில் உள்ள வாசகம்.

இந்தப் பொய்யை படித்ததும் தங்கப்பாவிடம் கேட்டேன். இப்படி செய்தி வந்தே இருக்காது என்றார். அன்சாரி அவர்களிடம் கேட்டேன் இப்படி நான் எழுதி கொடுக்கவே இல்லை என்றார். இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதால் பாதிப்பு உங்களுக்குத்தான் என்றேன். கடந்த ஆண்டு நடக்க இருந்த பாதிப்பையும் சொல்லிக் காட்டினேன்.

இளைஞர் அணியின் இந்த சாதனையை? பலரிடமும் கூறி மகிழ்ந்தேன்.

கடந்த ஆண்டு சிறைவாசிகளின் குடும்ப பிள்ளைகளின் கல்விக்காக வருடக் கட்டணம் ரூ64,450.00, சீருடைச் செலவு ரூ32,950.00, புத்தகச் செலவு ரூ40,500.00 ஆக ரூ1,37,900.00 சி.டி.எம்.முக்கு தேவை என்றார்கள். எனது வேண்டுகோளுக்கிணங்க இதற்கான முயற்சிகளை ஒரு சகோதரர் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சிறைவாசிகள் பிள்ளைகளின் 2005-2006 கல்வியாண்டுக்கான உதவியை மு.லீக் இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது என்ற செய்தியை மு.லீக். சார்பான டி.வி. நிகழ்ச்சியில் கூறியுள்ளார்கள். இதைப் பார்த்த அந்த சகோதரர் ஷஷகல்வி வகைக்கு நாம அனுப்ப வேண்டியது இல்லை. மு.லீக் இளைஞர் அணி சார்பில் கொடுத்து விட்டார்கள் என்றார். இதையறிந்த நானும் மு.லீக் இளைஞர் அணியின் இந்த சாதனையை? பலரிடமும் கூறி மகிழ்ந்தேன்.

கொடுத்து விபரம் தந்தார்கள்.

சில நாட்களில் போன் செய்த தங்கப்பா நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கல்வி உதவிக்கு வழி செய்யுங்கள் என்றார். மு.லீக் இளைஞர் அணி தந்து விட்டதாக அறிந்தேன். டி.வி.யிலும ; காட்டினார்களாமே என்றேன். ஷஷஅது ஒன்னுக்கும் ஆகாதுங்க. வெறும் நோட் புக் மட்டும்தான் கொடுத்தாங்க. அதுவும் 60 ஆயிரத்துக்கு தருவதாக டி.வி.யில் சொன்னாங்க. ஆனால் 38 ஆயிரத்துக்கு மட்டும்தான் தந்தாங்க என்றார். அதன் பிறகு சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி ரூ1,50, 000.00 ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் ரூ10,000.00 சி.டி.எம். லிஸ்டில் இல்லாத இன்னொரு சிiறாவாசியின் கல்விக்கு கொடுக்கச் சொன்னோம். கொடுத்து விபரம் தந்தார்கள்.அபூ அப்துல்லாஹ் அவர்களிடமும் இந்தக் கோரிக்கையை வைத்தேன்.

இந்த ஆண்டும் கல்வி உதவி கேட்டு இருக்கிறார்கள். இது விஷயமாக கடந்த ஆண்டு ஏற்பாடு செய்து தந்தவருக்கு கடிதம் அனுப்பினேன். அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்களிடமும் சொன்னேன். கடந்த ஆண்டு ஏற்பாடு செய்து தந்தவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நேரில் சொன்னது போல் இருக்கர்து. முடிந்தால் நீங்களும் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பாருங்கள் என்றேன். ஏனென்றால் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ்;விடம் சமுதாய பிரமுகர் ஒருவர் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு சமீபத்தில பங்கிட்டுக் கொடுத்தார்.

அதனால் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்களிடமும் இந்தக் கோரிக்கையை வைத்தேன். இப்படி நாங்கள் சொல்லக் கிடையாது என்றார் தங்கப்பா.இந்த நிலையில்தான் இந்த மெயில் வந்துள்ளது. 30-05-2006 அன்று எனது வீட்டுக்கு மவுலவி ஹாமித் பக்ரி அவர்கள் வந்தார்கள். மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் இந்த மெயிலில் உள்ள பொய்களை படித்துக் காட்டினேன். உடனே அவரும் தங்கப்பாவுக்கு போன் போட்டு பேசினார். இப்படி நாங்கள் சொல்லக் கிடையாது என்றார். அந்த மெயில் அனுப்புகிறவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியுமா? அவரை முன் பின் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டேன். எதுவுமே தெரியாது. ஈ.மெயில் அனுப்புவார் அது மட்டும்தான் தெரியும் என்றார் தங்கப்பா.

இல்லாததை ஏன் எழுதுகிறீர்கள்.

முஸ்லிம் லீக்கும், காதர் மைதீன் எம்.பி.யும் இந்த ஆண்டு கல்விக்காக உதவி இருக்கிறார்களா? கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் அதற்கு முன்பும் உதவி செய்திருக்கிறார்களா? என்று கேட்டேன் இல்லை என்றார். தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்று உள்ளதே தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறார்களா? என்றும் கேட்டேன் இல்லை என்றார். கடந்த ஆண்டு மட்டும்தானே 38 ஆயிரத்துக்கு நோட் புக்குகள் தந்து விட்டு 60 ஆயிரத்துக்கு தந்தாக விளம்பரம் செய்தார்கள். அப்படி இருக்க இல்லாததை ஏன் எழுதுகிறீர்கள். சி.டி.எம்.முக்குரிய ஒன்னரை லட்சத்தை தராமல் வைத்துக் கொண்டு பெண்டிங் வைத்திருப்பதாக கூறுபவர்களுக்கு ஏன் பொய்யான விளம்பரம் செய்கிறீர்கள்.

மெயிலைச் சுட்டிக் காட்டி தர மறுத்து விட்டார்.இந்த மாதிரி மெயில்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காணாதா? என்று கேட்டேன். இனிமேல் மெயில் போடக் கூடாது என சொல்லி விட்டோம். இனி மெயில் வராது என்றார் தங்கப்பா. (அவர் இப்படி சொன்ன பிறகும் பொய்கள் நிறைந்த அந்த மெயில்களின் தொடர் வந்துள்ளது.) மேலும் கடந்த ஆண்டு கல்விக்காக உதவியவரிடம் இந்த ஆண்டும் உதவி பெற்றுத் தாருங்கள் என்றார். இதற்குப் பிறகு 3-6-2006 அன்று கடந்த ஆண்டு கல்விக்காக உதவியவரிடம் மீண்டும் தொடர்பு கொண்டேன்.

நாம் நினைத்தது போலவே ஆகி விட்டது. இன்றும் எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள். என்ற மெயிலைச் சுட்டிக் காட்டி கல்விக்காக சி.டி.எம்.முக்கு நிதி கொடுக்க மறுத்து விட்டார். மெயில்களால் சிறைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.கல்வி என்ற பெயரால் எங்களிடம் வாங்கி வேறு எதற்கோ பயன்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டே சொன்னேன். முஸ்லிம் லீக் உதவியதாக டி.வி.யில் சொன்னார்கள் என்று. நீங்கள்தான் அது முழுமையானது இல்லை என்று கூறி உதவச் செய்தீர்கள். இப்பொழுது அன்சாரியே தெளிவாக எழுதி விட்டார்.

எனவே சிறைவாசிகளின் குடும்ப பிள்ளைகளின் கல்விக்காக என்ற பெயரால் எங்களிடம் உதவியை எதிர் பார்க்காதீர்கள் என்று கூறி விட்டார். அன்புச் சகோதரர்களே! இந்த மெயில்களால் சிறைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரிகளையும் அணுகி த.மு.மு.க. உதவி வருகிறது.அலி அப்துல்லாஹ்வின் தம்பி தவ்பீக் அவர்களுக்கு வெளியான விஸா ரத்து செய்யப்பட்டுப் போனதும் ரைசுத்தீனின் மெயிலால்தான். இதைச் சுட்டிக் காட்டி சம்பந்தப்பட்ட ரைசுத்தீன் அவர்களுக்கே எழுதி இருந்தேன். இவரது மெயிலால் சிறைவாசி குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்த எடுப்பிலேயே எல்லாருக்கும் தெரியும் வண்ணம் பொதுவான மெயிலாக அனுப்பவில்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கு மட்டுமே அனுப்பினேன். சிறைவாசிகளுக்காக த.மு.மு.க.தான் உதவி வருகிறது என்ற உண்மை தெரிந்த நிலையிலும் இந்த தவறான மெயில்களுக்கு துணை நின்ற தங்கப்பாவுக்கு நகல் அனுப்பினேன். கோவை சிறைவாசிகளை பார்க்கச் சென்ற நான் தங்கப்பாவிடம் கேட்டேன்.

சிறைவாசிகளுக்காக ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரிகளையும் அணுகி த.மு.மு.க. உதவி வந்துள்ளது. நீங்கள் வைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்துள்ளது. இதையெல்லாம் சிறைவாசிகளுக்கு சொல்லவில்லையா என கேட்டேன் சொல்லவில்லை என்றார். திருத்தம் இருந்தால் திருத்தி அனுப்புங்கள்.பி.ஜெ. வெளியேறிய பின் சிறைவாசிகளுக்காக த.மு.மு.க. உதவி வந்துள்ள விபரங்களை வரிசையாக எடுத்துக் கூறினேன். அதற்குப் பிறகுதான் இனி எந்த மெயிலும் நோட்டீஸும் போட மாட்டோம். அப்படி போடுவதாக இருந்தால் உங்கள் பார்வைக்கு அனுப்பி நீங்கள் சரி கண்ட பிறகே அனுப்புவோம் என்றார்கள்.

திருச்சி சிறையில் உள்ள அலி அப்துல்லாஹ் அவர்களும் இதே வாக்குறுதி தந்தார்கள். தந்த வாக்குறுதியில் அலி அப்துல்லாஹ் உறுதியாக இருந்து வருகிறார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில iஷத்தான்கள் மொட்டை நோட்டீஸ் போட்டார்கள். அந்த சூழ்ச்சிகளை பிறகு பார்ப்போம். இந்த நிலையில்தான் புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை என்ன? என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்று தங்கப்பாவிடமிருந்து வந்தது. இதில் திருத்தம் இருந்தால் திருத்தி அனுப்புங்கள் என்றார். இன்னும் என்ன என்ன பொய்கள் அதில் உள்ளன.அதைப் படித்ததும் அதில் ஏராளமாக உள்ள தவறான தகவல்களை தங்கப்பாவிடம் சுட்டிக் காட்டினேன். அந்த விபரங்களெல்லாம் அன்சாரி அவர்களுக்குத் தெரியாது திருத்தி அனுப்புங்கள் என்றார். ஒரு சில திருத்தங்கள் மட்டும் செய்து அனுப்பி விட்டு இன்னும் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியதிரு க்கிறது என்று சொன்னேன். ஏனது திருத்தத்தையும் ரைசுத்தீனுக்கு அனுப்பி இருக்கிறார். ஏனோ அவசர அவரமாக தவறான தகவல்கள் நிறைந்த கட்டுரையை அன்சாரியுடனான பேட்டி என்ற பெயரால் ரைசுத்தீன் வெளியிட்டுள்ளார்.

இன்றும் எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் ஏன்பது போன்ற இன்னும் என்ன என்ன பொய்கள் அதில் உள்ளன என்பதை அடுத்தடுத்த மெயில்களில் பார்ப்போம்.

வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி


இரன்டாம் மெயில்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 08- 06 - 2006

தேவையற்ற மெயில்களால் சிறைவாசிகளுக்கு நன்மையா?

கண்ணியத்திற்குரிய ரைசுத்தீன் அவர்கட்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அன்சாரி அவர்களின் பேட்டி என்ற பெயரால் உங்களிடமிருந்து வந்த மெயில்களில் உள்ள பொய்யை முந்தைய வெளியீட்டில் சுட்டிக் காட்டினேன். அதை தாங்களே பலருக்கும் அனுப்பி வைத்து விட்டதாகவும் இனி அனுப்ப உள்ள மெயில்களை தங்களுக்கு அனுப்பினால் தாங்களே மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதாக எழுதி இருந்தீர்கள். சந்தோஷம் உங்கள் வலைமனையில் விமர்சன பகுதியிலும் இடம் பெறச் செய்யுங்கள்.

யுனிகோடு எழுத்துருக்கள் சரியாக ஓபன் ஆவதில்லை.

மேலும் குஷ;பு பாண்டுக்குக்குப் பதில் யுனிகோடை உபயோகப்படுத்தும்படி எழுதி இருந்தீர்கள். பெரும்பாலானவர்கள் வேர்டைத்தான் பயன்படுத்துகிறார்கள். யுனிகோடு எழுத்துருக்கள் வேர்டில் காப்பி ஆகாது. வேர்டு பேடு, எக்ஸெல்களில்தான் காப்பி ஆகும். மேலும் எக்ஸ்.பி. அல்லாதவைகளில் குறிப்பாக 98களில் யுனிகோடு எழுத்துருக்கள் சரியாக ஓபன் ஆவதில்லை. நீங்கள் யுனிகோடு எழுத்துருக்களாக மாற்றுவதற்கு வசதியாக இப்பொழுது பாமினியை பயன்படுத்தியுள்ளேன்.

விளம்பரம் வெளியிட்டுள்ளது ஏன்?

உங்கள் மெயிலின் தொடருக்கு வருவோம். சிறைவாசிகள் குடும்ப பிள்ளைகளின் இந்த ஆண்டுக்கான கல்விக்கு உதவி தேவை என 17-04-2006 அன்று சி.டி.எம்மிலிருந்து மெயில் அனுப்பியிருந்தார்கள். அந்த மெயிலை உடன் வெளியிடாமல் சுமார் 50 நாட்களுக்குப் பிறகு 06.06.2006 அன்றுதான் உங்களது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளீர்கள். ஷஷஇன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது உண்மையானால் சிறைவாசிகள் குழந்தைகளின் கல்விக்காக இன்றும் விளம்பரம் வெளியிட்டுள்ளது ஏன்?

உங்கள் மூலமே நிரூபணம் ஆகி விட்டது.

இன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்று உங்கள் மெயிலில் வந்த செய்தி பொய். இதைத்தான் 6.6.06 அன்று நீங்கள் அனுப்பிய மெயில் மூலம் நீங்களே நிரூபித்து இருக்கிறீர்கள். மு.லீக்கும் காதர் மைதீன் எம்.பி.யும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்று உங்கள் மெயிலில் வந்தது பொய் செய்தி என்பது உங்கள் மூலமே நிரூபணம் ஆகி விட்டது அல்ஹம்துலில்லாஹ். கண்கூடாக அறியக் கிடைக்கும் உண்மை.கல்விக்காக சி.டி.எம். உதவி கேட்டுள்ளதில் உள்ள
mdsafir2004@hotmail.com என்ற மெயில் முகவரி செயல்படாமல் செத்துப் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. அது உயிராக இருந்த காலத்தில் அனுப்பியதை செத்துப் போனப் பிறகு வெளியிட்டுள்ளீர்கள்.

இதிலிருந்து உங்கள் மெயிலின் நிலையை என்னவென்பது. ரைசுத்தீன் என்ற நீங்கள் முகவைத் தமிழன் என்ற பெயரில் பேட்டி கண்டது போல் எழுதியுள்ளதில் உள்ள ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறேன். ஷஷஏதோ ஒரு வகையில் சிறைவாசிகள் பெயரை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றார்கள் என்பது கண்கூடாக அறியக் கிடைக்கும் உண்மை.

இது அன்சாரி பேட்டி என்ற பெயரால் வெளியிட்ட இரண்டாம் பாகத்தில் உள்ளது. இதுதான் கண்கூடாக அறியக் கிடைக்கும் உண்மை.இது தமிழக முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்க ரைசுத்தீன் என்ற முகவைத் தமிழனாகிய நீங்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தை. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ரைசுத்தீனாகிய உங்களுக்குத்தான் பொருந்தும் என்று விமர்சிக்கலாம் அல்லவா.

ஏதோ ஒரு வகையில் சிறைவாசிகள் பெயரை பயன்படுத்தி தனக்கும் தனது வலைமனையின் விளம்பர வளர்ச்சிக்கும் ரைசுத்தீன பயன்படுத்துகின்றார். இதுதான் கண்கூடாக அறியக் கிடைக்கும் உண்மை என்று கூறலாம் அல்லவா.எதிர்பார்க்கும் நன்மை கிடைக்குமா?கல்விக்காக உதவிட வேண்டுவதில் உண்மை ஆர்வம் இருந்திருந்தால் 17-04-2006 அன்றே வெளியிட்டிருக்க வேண்டும். ஸ்கூல்கள் திறந்து விட்ட நிலையில் வெளியிட்டிருக்கிறீர்கள். சி.டி.எம். வெளியிட்ட மெயிலை சுமார் 50 நாட்களுக்குப் பிறகு வெளியிட்டிருக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். உங்களது இந்த மெயில்களால் சிறைவாசிகளுக்கும் உங்களுக்கும் விளம்பரம் கிடைக்கலாம்.

சிறைவாசிகளும் சிறைவாசிகளுக்காக இரக்கமுள்ள பொது மக்களும் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்குமா? பகிரங்கமாக மெயில் போட நான் எண்ணியதில்லை.உங்கள் மெயிலை நான் திடீரென விமர்சிக்கவில்லை. தேர்தல் நேரமாக இருந்ததால் எழுதப்படும் விஷயங்கள் ஓட்டுக்காக எழுதப்பவது போல் ஆகி விடும்.

எனவே ரைசுத்தீனாகிய உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட மெயில் அனுப்பினேன். அதன் நகலை தங்கப்பாவுக்கு அனுப்பி இருந்தேன். தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பிறகும் பாளை, மதுரை, கோவை, திருச்சி என சிறைகளுக்குச் சென்று சிறைவாசிகளை சந்தித்ததையும் சிறைவாசிகள் விடுதலைக்காக த.மு.மு.க. செய்து வரும் முயற்சிகள் பற்றியும் பகிரங்கமாக மெயில் போட நான் எண்ணியதில்லை. போலிகளையும் பொய்யர்களையும் உத்தமர்களாக காட்டி உண்மைக்குப் புறம்பான செய்திகள் மெயில்களாக வந்து விட்டதால்தான் பகிரங்கமாக எழுதுகிறேன். தங்கப்பா உட்பட மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி வந்தேன்.தேர்தலுக்குப் பிறகு தினமும் சிறைவாசிகள் குடும்பத்தவர்களில் உள்ளூரில் உள்ளவர்கள் நேரிலும் வெளியூர்வாசிகள் போனிலும் சிறைவாசிகள் விடுதலைக்காக த.மு.மு.க. அடுத்து என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கேட்ட வண்ணம் இருந்தனர். தங்கப்பாவும் கேட்ட வண்ணம் இருந்தார்.

நானும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 தடவை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி, மாநில செயலாளர் ரிபாஈ என ஒவ்வொருவருக்கும் போன் போட்டு பேசினேன். அவர்கள் செய்து வரும் முயற்சிகளையும் அவ்வப்போதைய சூழல்களையும் சொன்னார்கள். அதை தங்கப்பா உட்பட மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி வந்தேன். விளம்பரப்படுத்தி செய்யக் கூடிய செயல் அல்ல.தேர்தலுக்கு முன்பாக த.மு.மு.க. தலைமை தி.மு..க. தலைமையிடம் வைத்த கோரிக்கைகளில் இட ஒதுக்கீடுக்கு அடுத்து இரண்டாவது கோரிக்கையாக இடம் பெற்றுள்ளதே சிறைவாசிகள் விடுதலைதான். என்னதான் ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தாலும் இது 2 ரூபாய் அரிசி, இலவச கலர் டி.வி. மாதிரி விளம்பரப்படுத்தி செய்யக் கூடிய செயல் அல்ல.

இந்த நிலையில் சிறைவாசிகள் விடுதலைக்காக த.மு.மு.க. எடுத்து வரும் முயற்சிகளுக்கு ரைசுத்தீனாகிய உங்கள் மெயில்கள் தடையாக இருக்கிறது என்பதை பீல்டில் இருந்த நான் உணர்ந்தேன். வெளியிடாமல் நிறுத்தி விடுவதாகவே கூறினார்கள்.இது விஷயமாக தங்கப்பாவிடம், நெல்லை வந்த கிச்சான் புகாரி, தடா புகாரி, குட்டியப்பா ஆகியவர்களிடமும் பேசினேன். ரைசுத்தீனாகிய உங்கள் சைட்டில் உள்ள அபூ ஸைபுத்தீன், அலி அப்துல்லாஹ் கடிதங்களை எடுத்து விடுவதாகச் சொன்னார் தங்கப்பா. புதிதாக எழுதியுள்ள கட்டுரை தேவை இல்லை. அதனால் நன்மை கிடையாது. சிறைவாசிகளுக்கு விளம்பரம் கிடைக்கும் அதைவிட கூடுதலாக விவகாரம்தான் உண்டாகும் என்பதை விளக்கினேன். இதை தங்கப்பாவிடம் அதிகமாகவே விளக்கினேன். எல்லாருமே அதை வெளியிடாமல் நிறுத்தி விடுவதாகவே கூறினார்கள். இந்த நிலையில் நமது அணுகு முறை எப்படி இருக்க வேண்டும்

.நடந்து முடிந்த தேர்தலில் சென்னை உட்பட பல இடங்களில் தி.மு.க. தோற்று இருக்கிறது. ஓவ்வொரு பகுதியின் தோழ்விக்கு ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்பட்டாலும் கோவை தோழ்விக்கு தி.மு.க. தலைமையிடம் சொல்லப்பட்டுள்ள காரணம் என்ன தெரியுமா? அல்-உம்மா. ஆம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அல்-உம்மா தீவிரவாதிகள் விடுதலையாகி விடுவார்கள் என்று எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்தார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் பகுதியில் த.த.ஜ.வினரே இந்தப் பிரச்சாரத்தை செய்தார்கள். இதனால்தான் தோழ்வி என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவலை தங்கப்பாவிடமும் சொன்னேன். இந்த நிலையில் நமது அணுகு முறை எப்படி இருக்க வேண்டும். நமக்கு என்ன தேவை அதைத்தான் கேட்க வேண்டும்

.புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை என்ன? என்ற தலைப்பே சரி இல்லை. சிறைவாசிகளைப் பொறுத்தவரை கோரிக்கை வைக்கும் நிலையில் இல்லை. சிறைவாசிகளுக்காக மற்றவர்கள்தான் கோரிக்கை வைக்க வேண்டும். கோரிக்கை வைப்பது தி.மு.க. அரசிடம். அவர்கள் கொடுக்கும் நிலையில் ஆட்சியில் இருக்கிறார்கள். நாம் அவர்களிடம் வாங்கும் நிலையில் இருக்கிறோம். எனவே பொதுவானவர்கள் கூட கோரிக்கை வைக்கும்போது அவர்களை விமர்சிக்கும் விதமான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். எனவே இப்பொழுது நமக்கு என்ன தேவை அதைத்தான் கேட்க வேண்டும். தமிழக உளவுத்துறை தூங்கிக் கொண்டிருக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில்தான் அனைவரும் கைது செய்யப்பட்டோம் ஷகுண்டு வைத்தவர்கள் சம்பந்தமில்லாத அப்பாவிகள் என அனைவரையும் வாரி வளைத்து சிறையில் அடைத்த மாபெரும் தவறினை செய்திட்ட தி.மு.க போன்ற வாசகங்கள் தேவை இல்லை. ஏதோ ஒரு நோட்டீஸ் என எண்ணாதீர்கள். தமிழக உளவுத்துறை தூங்கிக் கொண்டிருக்கவில்லை. மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்கள் எனது அழைப்பை ஏற்று எனது வீட்டிற்கு வந்திருந்தார்கள். 20-05-2006 அன்று மஃரிபுக்குப் பிறகு வந்திருந்த 17 பேரும் என்னுடன் கலந்துரையாடி விட்டு இரவு 9.15 மணிக்கு கலைந்து சென்றார்கள்.

அன்று இரவு 9.45க்கே உளவுத்துறை அதிகாரி என் வீட்டுக்கு வந்து விட்டார். என்ன நடந்தது என்ன பேசினீர்கள் என்று விசாரித்து விட்டுச் சென்றார். இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்தக் கூட்டம் எந்த அளவுக்கு ரகசியமாக நடந்தது தெரியுமா? மறு நாள் காலை த.மு.மு.க. நகர செயலாளர் தேயிலை மைதீன் அவர்களிடம் உளவுத் துறை இன்ஸ்பெக்டர் போன் போட்டு கேட்டுள்ளார்.

அதற்கு ஷஷஇது பொய் அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை. நீங்கள் சொல்கிற நேரத்தில் நானும் இலாஹியும்தான் ஒன்றாக மஃரிபு தொழுது விட்டு வந்தோம். நான்தான் எனது பைக்கில் கொண்டு போய் இலாஹியை அவரது வீட்டில் விட்டேன். கூட்டம் நடப்பதாக இருந்தால் என்னிடம் கூறி இருப்பாரே என்று கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் எனது வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றவருக்கே தெரியாத அளவில்தான் கூட்டம் நடத்தினோம். அரை மணி நேரத்தில் உளவுத்துறை அதிகாரி வந்து விசாரிக்கிறார் என்றால் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.நடந்ததை எழுதிக் கொண்டே இருக்க வேண்டாம்... சம்பந்தமில்லாத அப்பாவிகள் என அனைவரையும் வாரி வளைத்து சிறையில் அடைத்த மாபெரும் தவறினை செய்திட்ட தி.மு.க. என்ற வாசகம் உளவுத்துறை மூலம் தி.மு.க. தலைமைக்குப் போனால் சிறைவாசிகள் மீது அனுதாபத்தை ஏற்படுத்துமா? ஆத்திரத்தை ஏற்படுத்துமா? இந்த வாசக அமைப்பு நமது கோரிக்கைக்கு வலு சேர்க்குமா? வம்பு சேர்க்குமா? வீம்பு பண்ண வைக்காதா? வேட்டு வைக்காதா? எனவே நடந்ததை எழுதிக் கொண்டே இருக்க வேண்டாம் என்றேன். இது நியாயமான வேண்டுகோளா இல்லையா?அன்சாரி அவர்களிடமும் சொன்னேன். அதை எழுதித்தான் ஆக வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? கலைஞர் ஆட்சியில்தான் போலீஸாரால் அனைவரும் கைது செய்யப்பட்டோம்.

குண்டு வைத்தவர்கள் சம்பந்தமில்லாத அப்பாவிகள் என அனைவரையும் வாரி வளைத்து சிறையில் அடைத்த மாபெரும் தவறினை போலீஸார் செய்தது கலைஞர் ஆட்சியில்தான். இப்படி கொஞ்சம் நளினப்படுத்தியாவது எழுதுங்கள் என்றேன். இது நியாயமான வேண்டுகோளா இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு தாங்கள் பதில் தர வேண்டும்.இது போன்ற நியாயமான வேண்டுகோள்கள் விஷயமாக தங்கப்பாவுடனும் சிறைவாசிகளுடனும் நான் பேசிக் கொண்டிருந்தேன். இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததும் அவசர அவசரமாக அந்த மெயிலை பேட்டி என்ற பெயரால் வெளியிட்டதன் நோக்கம் என்ன?

ரைசுத்தீன் அவர்களே! எனது செயல்பாடுகளை எனது முயற்சிகளை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு எழுதி இருக்கின்றேனா? இல்லையா? அதற்குப் பிறகும் சுதந்திரமான வலைப் பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோதரர் அன்சாரி அவர்களின் பேட்டி அப்படியே எவ்வித தனிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது ... என்ற பீடிகையுடன் ஏன் வெளியிட்டீர்கள். இது போன்ற கேள்விகளுக்கு தாங்கள் பதில் தர வேண்டும்.


இங்கு இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொருப்பாக மாட்டார் என்ற கூற்று எனது கேள்விகளுக்கு பொருந்தாது. நீங்கள் வெளியிட்டது பேட்டியா? அல்லது பேட்டி மாதிரி செட் பண்ணி வெளியிட்டீர்களா? ஷஷஇன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது நீங்கள் தவறாக விளங்கி எழுதிக் கொண்டதா? வேறு யாரும் எழுதி அனுப்பினார்களா? உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

வஸ்ஸலாம்
அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி


மூன்றாம் மெயில்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 12-06-2006

போலிகளுக்கும் கோழைகளுக்கும் செய்யும் விளம்பரம் சமுதாயத்திற்கு செய்யும் முதல் துரோகம் ஆகும்.

கண்ணியத்திற்குரிய ரைசுத்தீன் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 08-06-2006 அன்று அபுதாபியிலுள்ள அப்துல் ரவூப் அவர்களின்
aabdulraguf@adnoc.com என்ற ஐ.டி.யிலிருந்து இந்திய மக்கள் பேரவை ஏன்? எதற்கு?? சிந்திக்க! தெளிவு பெற! செயல் பட!! என்ற தலைப்பிலான மெயில் சாருகேசி பாண்டில் வந்தது. அப்படியே பார்வேடு செய்யாமல் யுனிகோடு எழுத்துருவாக மாற்றி 11-06-2006 அன்று நீங்கள் உங்கள் ஐ.டி.யிலிருந்து அனுப்பி இருந்தீர்கள். அதை உங்கள் சைட்டிலும் போட்டுள்ளீர்கள் சந்தோஷம்.

அடையாளம் காட்டிடும் பணியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. உங்களது மெயில்களையெல்லாம் அனுப்புங்கள் எனது சைட்டில் போடுகிறேன் என்று எழுதி இருந்தீர்கள். இன்று சைட்டுகளுக்கு பஞ்சம் இல்லை. இலவச பிளாக்குகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் தங்களுக்கு அனுப்புவதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் போட மறுத்தாலும் போலிகளையும் வீர வேடமிட்டுத்த திரியும் கோழைகளான சமுதாய துரோகிகளையும் அடையாளம் காட்டிடும் பணியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை.

நேரடி பேட்டி என்றால் அந்த விபரத்தை வெளியிட்டிருப்பீர்கள்.
உங்கள் மெயில் தொடரை நீட்டித்துக் கொண்டே போவதைவிட ஒவ்வொன்றுக்கும் விடையளித்து முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டால் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சமுதாய பணிகளுக்கு பயன் கிடைக்கும். உண்மைக்கு பொய்மை என்ற மாயையை முலாமாக பூச தேவை இல்லை. நீங்கள் வெளியிட்டது நேரடி பேட்டி என்றால் அந்த விபரத்தை வெளியிட்டிருப்பீர்கள். சவூதியில் உள்ள நீங்கள் ஆள் அனுப்பி பேட்டி கண்டீர்கள் என்றால் அதை தெளிவாக வெளியிட்டிருப்பீர்கள். நான் செய்த விமர்சனம் முடிவுக்கு வந்து விடும்.02-05-06 அன்று தாங்கள் எனக்கு மெயில் அனுப்பினீர்கள். அதற்கு நான் 03-05-2006 அன்று பதில் அனுப்பினேன். எனது இந்த பதிலுக்குப் பிறகு நீங்கள் சில கேள்விகள் கேட்டு தங்கப்பாவுக்கு மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதற்கு தங்கப்பாவிடமிருந்து பதில் வந்துள்ளது. இதுதான் நடந்த உண்மை. அதற்கு ஒரு மாயை ஏற்படுத்த பேட்டி என்ற முலாம் பூசி இருக்க வேண்டியதில்லை. கவனத்தை ஈர்ப்பதற்காக பேட்டி என போட்டிருந்தால், அதை ஈ-மெயில் பேட்டி என்று கூட வெளியிட்டிருக்கலாம். எனவே நீங்கள் மெயில் அனுப்பினீர்கள் அதற்கு பதில் வந்தது.

இந்த உண்மையை நீங்கள் எழுதி விடுங்கள். ஷபேட்டி என்ற வார்த்தைக்காக நான் செய்த விமர்சனம் முடிவுக்கு வந்து விடும். முரண்பாடாக யாரும் எழுத மாட்டார்கள். அடுத்து ஷஷஇன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் மைதீன் எம்.பி. அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறார்கள் என்று நீங்கள் எழுதியது கவனக் குறைவானதாகக் கூட இருக்கலாம். காரணம் அவர்கள் ஒரு வடிவத்தில் அனுப்பி இருந்தார்கள். அதை முன்பின் மாற்றி அமைத்தீர்கள். அவர்கள் த.மு.மு.க. பற்றி முதலில் எழுதி இருந்தார்கள். நீங்கள் அதை இரண்டாவதாக ஆக்கினீர்கள். முஸ்லிம் லீக் பற்றி இரண்டாவது எழுதி இருந்தார்கள். நீங்கள் அதை முதலாவதாக ஆக்கினீர்கள். அவர்கள் கட்டுரை வடிவில் மெயில் அனுப்பி இருந்தார்கள். நீங்கள் அதை கேள்வி பதில்களாக அமைத்து பேட்டி போல் வெளியிட்டீர்கள். இப்படி முழுமையாக மாற்றி டைப் செய்யும்பொழுது கவனக் குறைவால் தவறாக டைப் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கல்விக்காக ஒரு அமைப்பு தொடர்ந்து உதவி செய்கிறது என்று நீங்களே எழுதி விட்டு, அதே கல்விக்காக உதவுங்கள் என்று முரண்பாடாக நீங்களே எழுதுவீர்களா? எனவே அதில் ஏற்பட்டுள்ள கவனக் குறைவை எழுதி விடுங்கள். அது பற்றிய விமர்சனம் முடிவுக்கு வந்து விடும்.

தவறுகளை செய்யத்தான் செய்வார்கள்.நடுக் கடலில் தத்தளிப்பவர்கள் பார்வையில் திமிங்கலங்கள் கூட கரை சேர உதவும் மரக் கட்டைகளாகத்தான் தெரியும். இவர்களைப் போல் பலரை தின்று விட்டு மரக் கலம் போல் மிதந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமிங்கலங்கள்தான் அவை என்பது நடுக் கடலில் தத்தளிப்பவர்களின் கண்களுக்குத் தெரியாது. மரக் கலம் என எண்ணிக் கொண்டு திமிங்கலத்தைக் கூட கட்டிப் பிடித்து விடுவார்கள். சிறைவாசிகளைப் பொருத்த வரை நடுக் கடலில் தத்தளிப்பவர்களின் நிலையில் உள்ளவர்கள். அவர்கள் எதைப் பிடித்தாவது கரை சேர்ந்து விட வேண்டும் என்ற நிலையில் உள்ளார்கள். எனவே திமிங்கலங்களை கட்டிப் பிடித்தல் போன்ற தவறுகளை செய்யத்தான் செய்வார்கள்

முறையாக அணுகி இருப்பீர்கள்.03-05-2006 அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தை உங்களுக்கும் தங்கப்பாவுக்கும் தவிர வேறு யாருக்கும் அப்பொழுது நான் அனுப்பவில்லை. அது போல் 18-05-2006 அன்று காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்களுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கும் தங்கப்பாவுக்கும் தவிர அப்பொழுது வேறு யாருக்கும் நான் அனுப்பவில்லை.

பேட்டி என்ற பெயரால் உங்கள் மெயில் வந்த பிறகுதான் காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அதை படித்த நீங்கள் நிதானமுடன் சிந்தித்திருந்தால் என்னை முறையாக அணுகி இருப்பீர்கள். விளக்கம் கேட்டு இருப்பீர்கள். அதிகமான கேள்விகள் வந்த பின் எல்லா மெயில்களையும் எல்லாருக்கும் அனுப்பி வைத்தேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு அமைப்பும் பிரித்துக் கொள்ளும். 01-05-2006 அன்று உங்களுக்கும் இன்னும் சில முக்கியமானவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன். அதில், தமிழகத்திலுள்ள எல்லா வழக்குகளையும் சி.டி.எம். நிறுவனமே ஏற்று நடத்தும் என்று எழுதி இருந்தேன். அப்பொழுது அன்சாரி அவர்களும் தங்கப்பா அவர்களும் அந்த நிலைப்பாட்டில் இருந்தார்கள். 10-06-2006 அன்று தங்கப்பா போன் செய்தார்.

இப்பொழுது மில்லி கவுன்ஸிலும் நாங்களும் சமாதானம் ஆகி விட்டோம். மில்லி கவுன்ஸிலுக்கும் எங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. மில்லி கவுன்ஸில் 6 வழக்குகளையும் சி.டி.எம். 34 வழக்குகளையும் நடத்தும். வசூலாகும் பணத்தை சதவிகித அடிப்படையில் இரண்டு அமைப்பும் பிரித்துக் கொள்ளும். இவ்வாறு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று தங்கப்பா கூறினார். இதுதான் நமது சமுதாயத்தின் இன்றைய அவல நிலை.முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்துதல் என்ற ஒன்றுபட்ட நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் அதற்காகக் கூட அவர்கள் ஒரே அமைப்பாக ஆகவில்லை. அவர்கள் ஆகவில்லை என்பதைவிட அவர்களால் ஒரே அமைப்பாக ஆக முடியவில்லை. இதுதான் உண்மை. வழக்குகளை நடத்துதல் என்ற ஒன்றுபட்ட நிலையில் கூட அதற்கும் இரண்டு அமைப்பு. இதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த நிலைக்குரிய காரணத்தை அறிவுள்ளவர்கள் புரிந்திருப்பார்கள். நமது சமுதாய மக்கள் கால போக்கில்தான் புரிவார்கள். இதுதான் நமது சமுதாயத்தின் இன்றைய அவல நிலை. எதிர்ப்பு தெரிவித்து எனக்கு போன் செய்தார்.இப்பொழுது இன்னொரு பிளாஷ; பேக்கையும் பாருங்கள். கடந்த ரமழானில் இந்த மில்லி கவுன்ஸில் சார்பாக தமிழக சிறைவாசிகள் வழக்கை நடத்தப் போவதாக அறிக்கை கொடுத்தார்கள். அதை செய்தியாக மக்கள் உரிமையில் வெளியிட்டார்கள்.

அப்பொழுது துபையிலிருந்த தங்கப்பா எதிர்ப்பு தெரிவித்து எனக்கு போன் செய்தார். இதனால் துபையில் வசூல் பாதிக்கிறது என்றார். அடுத்த வார மக்கள் உரிமையில் அன்சாரி அவர்களின் அறிக்கை வந்தது. அடுத்து மில்லி கவுன்ஸில் அறிக்கை. எந்த மாதிரியான அபாண்டம் கூறப்பட்டது.பிறகு வசூலாகும் பணத்தில் இத்தனை சதவிகிதம் மில்லி கவுன்ஸிலுக்கு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2 அமைப்பும் சமாதானம் ஆகி விட்டதாக மில்லி கவுன்ஸிலைச் சார்ந்தவர்கள் சொன்னார்கள்.

ஆனால் இதில் அநியாயமாக விமர்சனத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியத்திற்குரிய அப்பாவிகள். அந்த அப்பாவிகள் யார் என்பதை அது பற்றி எழுத வேண்டி வரும்போது குறிப்பிடுவோம். அவர்கள் மீது எந்த மாதிரியான அபாண்டம் கூறப்பட்டது என்பதையும் எழுதுவோம். சேர்ந்து சேர்ந்து பிரிவதைவிட சிறந்தது..இதற்குப் பிறகு ஒப்பந்தத்தை சி.டி.எம். நிறைவேற்றவில்லை என்றார் மில்லி கவுன்ஸிலைச் சார்ந்த ஹாமித் பக்ரி அவர்கள். பக்ரி சொல்கின்ற மாதிரி எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்றார் தங்கப்பா. இதன் பிறகு 8-4-06 அன்று சி.டி.எம். மில்லி கவுன்ஸில் இணைந்து தென்காசியில் பொதுக் கூட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அந்த கூட்டத்தை ஒட்டியே மீண்டும் பிரச்சனை வந்தது. என்னை மத்தியஸ்தராக இருந்து பேசி தீர்த்து வைக்கும்படி தங்கப்பா, அன்சாரி ஆகியவர்கள் கூறினார்கள். அவர்களை சேர்த்து வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சேர்ந்து சேர்ந்து பிரிவதைவிட சிறந்தது இப்படியே இருந்து விட்டுப் போவது என்றேன். தெரிந்துதான் வரவழைத்தோம்.ஏனென்றால் இது இன்று நேற்று வந்த பிரச்சனை அல்ல. 2004இல் இருந்தே இருக்கிறது. 2004இல் தங்கப்பாவும் காயல் எஸ்.கே.யும் துபை வர விஸா கொடுத்தேன். அவர்கள் வந்ததுமே இதே மில்லி கவுன்ஸிலில் இருந்துதான் போன் செய்தார்கள். சி.டி.எம். கோவை சிறைவாசிகளில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்தான் பார்க்கிறார்கள் என்றார்கள். இதை தெரிந்துதான் வரவழைத்தோம் என்றேன். மேலப்பாளையம் வழக்குகளையும் சி.டி.எம்.மிடம் ஒப்படைத்தோம். சி.டி.எம். இப்பொழுது கஷ;டத்தில் உள்ளது. அதன் பொருளாதாரம் கோவைவாசிகளுக்கே காணாது. எனவே மேலப்பாளையத்தவர் விஷயத்தை மேலப்பாளையத்தவரே பார்த்துக் கொள்வோம். நீங்கள் சி.டி.எம்.முக்கு உதவுங்கள் என்றுதான் கிச்சான் புகாரி, தடா புகாரி ஆகியவர்கள் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். இந்த தெளிவான நிலையில்தான் மேலப்பாளையம்வாசியாகிய நான் சி.டி.எம்.முக்கு வசூல் செய்து கொடுத்தேன்.

சமீபத்தில்தான் மேலப்பாளையம் வழக்குகளையும் சி.டி.எம்.மிடம் ஒப்படைத்தோம். iஷத்தான்களை அடையாளம் காட்ட வேண்டும். தென்காசியில் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு எல்லா வழக்குகளையும் சி.டி.எம்.மே பார்க்கும் என்றார்கள். சரி என்றேன். அதற்கான பொருளாதாரத்திற்கு வழி செய்யனும் என்றார்கள். சரி என்று கூறி விட்டுத்தான் 01-05-2006 அன்று உங்களுக்கும் உங்களைப் போன்ற மெயில் தொடர்புடைய முக்கியமானவர்களுக்கும் கடிதம் அனுப்பினேன். சிறைவாசிகள் உதவி என்பது அல்லாஹ் அருளால் நான் 1981 முதல் செய்து வருகிறேன். சமுதாயம் இனி இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்றால் சமுதாயத்தை தூண்டி விடும் iஷத்தான்களை அடையாளம் காட்ட வேண்டும். இதுதான் எனது நிலை.தூண்டி விடும் iஷத்தான்களை அடையாளம் காட்டிடும் அந்தப் பணிகளை இது போன்று பாதிக்கப்பட்ட சிறைவாசிகளைக் கொண்டே செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அடுத்து வரும் இளைய சமுதாயம் பாதிக்காது என்று எண்ணுகிறேன். இந்த திட்டம் மட்டும் அவ்வப்போது நிறைவேறாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான் ஆகும் போல் உள்ளது. இறை நாட்டம் எதுவோ அதுதான் நடக்கும்.

ஓவ்வொரு கால கட்டத்திலும் மைக் மாவீரர்களாலும் எழுத்து மாவீரர்களாலும்தான் சமுதாய இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள். பிறகு பாதிப்பை அடைவது தூண்டப்பட்டவர்கள்தான். தூண்டி விட்டவர்கள் அல்ல. இன்று சிறைவாசிகளாக உள்ளவர்களாவது விடுதலையாகி இந்த iஷத்தான்களை அடையாளம் காட்ட வேண்டும். இதுதான் எனது நிலை. மார் கச்சை நிறுவனம் அமைத்து கொடுத்தது காதர் மைதீன் அல்ல. நீங்கள் வெளியிட்ட மெயில் விஷயத்திற்கு வருவோம். அதில் முஸ்லிம் லீக்கோடு என்ன தொடர்பு என்ற தலைப்பு உள்ளது. அந்த தலைப்பில் மு.லீக் தலைவர் காதர் மைதீன் செய்யாத உதவியை காதர் மைதீன் செய்தது போன்று காட்டப்பட்டுள்ளது. காதர் மைதீனுக்கு இல்லாத தகுதியை இருப்பது போல் காட்டிடும் மாயையை ஏற்படுத்திடும் வண்ணம் வாசக அமைப்புகள் உள்ளன. டீசயஉநைச குயஉவழசல மார் கச்சை நிறுவனம் அமைத்து கொடுத்தது காதர் மைதீன் அல்ல. அமைத்து கொடுத்தவர் தமிழ் நாட்டைச் சார்ந்தவரே அல்ல. ஆனால் காதர் மைதீன் அமைத்து கொடுத்தார் என்றுதான் தங்கப்பா உங்களுக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்னரை லட்சத்தை இன்னும் தரவில்லை.இல்லாததையெல்லாம் ஏன் எழுதுகிறீர்கள் என்று நான் தங்கப்பாவிடம் கேட்டேன். மார் கச்சை நிறுவனம் அமைத்து கொடுத்தவர் தன் பெயரை சொல்ல வேண்டாம் என்று சொல்லி உள்ளார். அதனால் காதர் மைதீன் பெயரை போட்டோம் என்றார். அப்படியானால் சமுதாய பிரமுகர் ஒருவர் செய்து கொடுத்தார் என போட வேண்டியதுதானே. யார் இந்த காதர் மைதீன்? கலைஞர் கருணாநிதியிடமும் மற்றுமுள்ள தி.மு.க. தலைமையினரிடமும் அல்-உம்மா தீவிரவாதிகளின் ஆதரவாளன் இலாஹி என்று சொன்னவர்தானே. அல்-உம்மாவினரை தீவிரவாதி என்று சொன்னதற்கு இந்த புகழ்ச்சியா? ஏற்கனவே சி.டி.எம். பெயரால் வாங்கிய பணம் ஒன்னரை லட்சத்தை இன்னும் தரவில்லை. தங்கள் சொந்த பணம் போல் பெண்டிங் வைத்திருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்தின் தலைவர் என்பதாலே இந்த புகழ்ச்சியா? ஒருவர் செய்யாத உதவியை செய்ததாக அவர் செய்ததாக கூறி புகழ்ந்தால் பாதிக்கப்படுவீர்கள் என்றேன்.

துபை வாழ் தமிழ் முஸ்லிம் காட்டி எதிர்ப்பு வரலாறு காணாதது.அதன் பிறகுதான் நீங்கள் அமைத்துள்ள முறைப்படி வந்திருக்கிறது. அதில் உள்ள புகழ்ச்சி எல்லாம் தமிழ்நாட்டைச் சாராத அந்த புரவலருக்குத்தான் உரியது. இந்த போலிகளுக்கு அல்ல. போலிகளுக்கும் கோழைகளுக்கும் செய்யும் விளம்பரம் சமுதாயத்திற்கு செய்யும் முதல் துரோகம் ஆகும். இவர்கள் தடாவில் இருந்தபோது அப்போதைய தலைவர் ஆ.கா.அப்துஸ்ஸமது என்பவருடன் துபை வந்தார். தடா சிறைவாசிகளுக்காக மு.லீக் குரல் கொடுக்காதது ஏன்? குண்டாஸில் உள்ள காயல் மஹ்பூபுக்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று கேட்டோம். தப்பு செய்தார்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று பதில் கூறினார்கள். இந்த பதிலை அறிந்து கொதித்து போன துபை வாழ் தமிழ் முஸ்லிம் காட்டிய எதிர்ப்பு வரலாறு காணாதது. இரண்டு கருத்து உடையவர்களும் இருப்பார்கள்.

மு.லீக்கின் நூற்றாண்டு மாநாட்டு வசூலுக்காக வந்தார்கள். அப்போதும் சிறைவாசிகள் கோரிக்கை வைத்தோம். கண்டு கொள்ளவே இல்லை. இப்படி ஒவ்வொரு முறையும் துபை வந்த மு.லீக் தலைவர்கள் இடம் இந்த சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்து வந்தோம். இறுதியாக 2002இல் வந்தபோதுதான் கடைசி முயற்சி எடுத்தோம். அப்பொழுது தெளிவாகச் சொன்னேன். முஸ்லிம் சிறைவாசிகளை ஜெயிலுக்கு சென்று பாருங்கள். சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். முஸ்லிம் லீக்கும் வளரும். சிறையில் குற்றவாளிகள் மட்டும் இல்லை. அதிமாக குற்றமற்றவர்களே இருக்கிறார்கள். குற்றவாளிகள் எனப்படுவோர் செய்தது மார்க்க ரீதியில் சரியா தவறா என்று பேச வேண்டாம். இரண்டு கருத்துக்களும் கியாம நாள் வரை இருக்கும். எனவே இப்பொழுது அந்த விவாதம் தேவை இல்லை. உங்கள் போக்கு வரத்து செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.நாம் வாழும் இந்திய சட்டப்படி குற்றம்தான். இதனால் சிறைவாசிகளும் சிறைவாசிகள் குடும்பத்தவர்களும் சமுதாயமும் அடைந்த பாதிப்புகளை எடுத்துக் கூறுங்கள்.

இனி இந்த மாதிரி செயல்களில் ஈடுபடக் கூடாது என்று உபதேசம் செய்யுங்கள். ஒவ்வொரு சிறைக்கும் சென்று பாருங்கள். உங்கள் போக்கு வரத்து செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றேன். அப்பொழுது என்னுடன் மேலப்பாளையம் கட்டை இஸ்மாயில், ரபியுத்தீன், நெல்லை பேட்டை அப்துல் கபூர், இளையான்குடி அபுதாஹிர், காயல் பட்டிணம் தாவூத் உட்பட பலர் வந்திருந்தார்கள். ஜமாஅத்களை அழைத்துப் பேசி மணிச்சுடரில் செய்தி வெளியிட்டார்.சரி சிறைவாசிகளைப் போய் பார்க்கிறேன். நானாகப் போய் பார்த்தால் பிரச்சனை வரலாம். எனவே சிறைவாசிகளை எனக்கு லட்டர் போடச் சொல்லுங்கள். முதலில் பாளை சிறையிலிருந்து துவங்குகிறேன். எனவே முதலில் அங்கிருந்து கடிதம் வரட்டும். அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சிறையாகப் போகிறேன் என்றார். உங்கள் நடவடிக்கைகளை மணிச் சுடரில் எழுத வேண்டும் என்று சொன்னோம் சரி என்றார். இந்த சந்திப்பை மணிச் சுடரில் போட்டோ எடுத்து போட்டார். இதற்குப் பிறகுதான் கோவை சென்று ஜமாஅத்களை அழைத்துப் பேசி மணிச்சுடரில் செய்தி வெளியிட்டார். பொய்ச் செய்தியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.சிறை சென்று சிறைவாசிகளை சந்தித்ததாக தகவல் தந்தார். மணிச் சுடரில் செய்தி போடவில்லை. பாளை சிறையிலிருந்து பல கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை.

கோவை சிறை சென்று சிறைவாசிகளை பார்த்தார் என்றே நம்பிக் கொண்டிருந்தோம். அது பொய் என்பது பிறகுதான் தெரிந்தது. கோவை பித்னா பசாரில் கூடுபவர்களில் பெரும்பாலானவர்கள் காதர் மைதீன் சிறை சென்று பார்தார் என்று உறுதியிட்டுக் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு பொய்ச் செய்தியை இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல கடிதங்கள் போட்டும் பதிலே இல்லை.முஸ்லிம் லீக் சட்ட பாதுகாப்பு குழு என்று ஒரு குழு அமைத்து அதை மணிச் சுடரில் விளம்பரம் செய்தார். இவர் சொன்ன சட்ட பாதுகாப்புக் குழுவுக்கு 25ஆயிரம் ரூபாய் அனுப்பிக் கொடுத்தேன். அந்தப் பணம் சிறைவாசிகளின் என்ன வகைக்கு செலவு செய்யப்பட்டது என்ற விபரம் வரவே இல்லை. முஸ்லிம் லீக்கின் அந்த சட்ட பாதுகாப்புக் குழுவுக்கு பல கடிதங்கள் போட்டும் பதிலே இல்லை. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். காதர் மைதீன் தானாக வரவில்லை. எனது முயற்சியால்தான் வந்தார் என்பதை அறிந்துள்ள தங்கப்பா இதை நான் அன்சாரிக்கு சொல்லவே இல்லை. இது அன்சாரிக்குத் தெரியாது என்று கடந்த மாதம் சொன்னார்.

கைர்.நான் கேட்டுத் தர முடியாது பிரதர். கட்சியில் பசாது வந்து விடும் பிரதர்.காதர் மைதீன் அமைத்த முஸ்லிம் லீக் சட்ட பாதுகாப்பு குழு விஷயத்திற்கு வருவோம். என்ன தலைவரே! நீங்கள் சொன்ன சட்ட பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பிய 25ஆயிரம் ரூபாய்க்கு எந்த தகவலும் இல்லையே. என்ன விபரம் என்ன செய்தார்கள் என்று கேட்டுத் தாருங்கள். அப்பொழுதுதானே அடுத்தடுத்த பணிகளுக்கு பணம் அனுப்ப முடியும் என்றேன். ஷஷஎன்ன பிரதர் செய்றது. இப்படித்தான் இருக்கிறார்கள். அந்த கணக்கெல்லாம் நான் கேட்டுத் தர முடியாது பிரதர். கட்சியில் பசாது வந்து விடும் பிரதர் என்றார். பினாயில் போட்டு கழுவினாலும் நாற்றம் போகுமா?இப்படிப்பட்ட வீர மிக்க தலைவரை? தரங்கெட்ட அரசியலிலிருந்து வித்தியாசமாகத் தெரிகிறார் என்று சொன்ன வாயை பினாயில் போட்டு கழுவினாலும் நாற்றம் போகுமா?

இப்படிப்பட்டவர் சிறைவாசிகளுக்கு செய்யாத உதவியை செய்ததாக எழுதினால் இவரை நோக்கி பணம் போகும். அல்லது இவரது கட்சியை நோக்கி பணம் போகும். போனால் என்ன ஆகும். காதர் மைதீன் அமைத்த முஸ்லிம் லீக் சட்ட பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பிய பணத்திற்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே(h) கதிதான் ஏற்படும். உண்மை நிலை என்ன?அண்ணன் இலாஹி அவர்கள் மூலம் அமீரக முஸ்லிம் லீக்குடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் மூலம் பல லட்சங்களாக கிடைத்திட்ட உதவிகள்தான் எங்களது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்தன. பல குடும்பங்களின் வறுமையை போக்க உதவிற்று என்று எழுதியுள்ளீர்கள். அந்த வாசகத்தின் உண்மை நிலை என்ன? அடுத்த இதழில். பார்ப்போம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

நான்காம் மெயில்


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 14-06-2006

விளம்பர விரும்பிகளால் ஏற்படும் விபரீதங்கள்.

சமுதாய நலனில் அக்கறையுள்ள கண்ணியத்திற்குரியவர்களுக்கு கா.அ.மு. உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பழைய ஆட்சியின் கொடுமை இவ்வாட்சியிலும் தொடரும் அவலம் என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்துள்ளதை அறிவீர்கள். 10-06-2006 அன்று எனக்கு போன் செய்த தங்கப்பா அவர்கள் இந்த மெயிலுள்ள விஷயமாகவும் என்னிடம் பேசினார். அன்சாரி நாளை பரோலில் வருகிறார் அவரிடம் பேசுங்கள் என்றும் கூறினார்.சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார். த.மு.மு.க. தலைவர்களுடன் பேசினீர்களா? என்று கேட்டேன் இல்லை என்றார் தங்கப்பா. பேசுங்கள் என்றேன், அவர் நான் பேச மாட்டேன் நீங்கள் பேசுங்கள் என்றார் தங்கப்பா. நீங்களே பேசுங்கள் என்றேன். காரணம் தங்கப்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க பல விஷயங்களை ஜவாஹிருல்லாஹ், ஹைதர் ஆகியவர்களிடம் பேசி த.மு.மு.க. மூலம் செய்து கொடுத்திருக்கிறேன். செய்து கொடுத்தும் த.மு.மு.க. சிறைவாசிகளுக்கு செய்த சேவைகளையெல்லாம் சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார். சிறைகளுக்கு சென்று நேரில் சந்தித்த போது இதனை அறிந்தேன்.

குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம்.த.மு.மு.க. செய்த உதவியை சிறைவாசிகளுக்கு மறைத்து விட்டது பெரிய விஷயமல்ல. இவரது கோரிக்கைகளையெல்லாம் செய்து கொடுத்த த.மு.மு.க.வுக்கு எதிராக பொய்யான செய்திகள் சிறைவாசிகள் பெயரால் வரவும் துணை நின்று த.மு.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டார். அலி அப்துல்லாஹ் பெயரால் உள்ள நோட்டீஸ் சைட்டில் வர வழி செய்துள்ளார். நான் கேட்டதற்கு அலி அப்துல்லாஹ் நம்ம கண்ரோலில் இல்லை. நாம சொன்னால் கேட்க மாட்டார் என்று சொன்னார். அலி அப்துல்லாஹ் அவர்களிடம் பேசிய போதுதான் உண்மை தெரிந்தது. அடுத்து அபூஸைபுத்தீன் என்ற பெயரால் சைட்டில் செய்தி போட்டார். அதில் தங்கப்பாவின் மெயில் ஐ.டி. இருந்தது. அதைப் பற்றி கேட்டதற்கு அவரிடம் சொல்லியாச்சு கேட்க மாட்டேன்கிறார் என்றார். அப்படியானால் நீங்கள் எப்படி அதை மெயிலாக அனுப்பலாம் என்று கேட்டேன் சரியான பதில் இல்லை. குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம். இதனால்தான் த.மு.மு.க. தலைமையிடம் தங்கப்பாவையே பேசுங்கள் என்று கூறினேன்.

அதே நேரம் தங்கப்பா அணியிடம் குடி கொண்டு விட்ட விளம்பர மோகத்தையும் சுட்டிக் காட்டி விமர்சித்தேன். ஆட்சி மாறினால் முந்தைய ஆட்சி அமர்த்திய அரசு வக்கீல்கள் ராஜினாமா செய்வது நடைமுறையில் உள்ளது. அதை பெரிய விவகாரமாக ஆக்கி பத்திரிக்கை மூலம் விளம்பரம் தேடியுள்ளீர்கள் என்று விமர்சித்து கண்டித்தேன். இந்த விளம்பர மோகம்தான் தமிழகத்தைச் சார்ந்த பல சிறைவாசிகள் குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம். அவர்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களும் விளம்பர விரும்பிகளால் ஏற்பட்ட விபரீதங்கள்தான். குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும். பேச்சு வார்த்தையில் எளிதாக முடிய வேண்டியதை விளம்பர நோக்கில் விவகாரமாக ஆக்கி விடுகிறார்கள். பெரும்பாலான சிறைவாசிகளின் பாதிப்புகளுக்கு காரணமே அவர்களது வாய்தான்.

இது விஷயத்தில் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதை விட எங்களது சம்பந்தியாக ஆகி விட்ட குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும். அவரோடு சம்பந்தம் செய்தது அவர் ஒரு சிறைவாசி என்பதால்தான். அதற்கு முன் குடும்ப ரீதியாக வேறு எந்த உறவும் கிடையாது. இதை மொட்டை கடித பேர்வழிகள் புரிய வேண்டும். கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது. ஓன்றுக்கு பல முறை அவரிடமும் அவரது பிள்ளைகளிடமும் நேரில் கூறி இருக்கிறேன். குணங்குடி ஹனீபா அவர்கள் சிறை சென்றதற்கு காரணம் அவர் குற்றம் செய்தார் என்பதற்காக அல்ல. அவர் எந்த குற்றமும் செய்யவே இல்லை. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அவரை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தது. இத்தனை ஆண்டு காலமாக சிறையில் தள்ளியது. அவரது மனைவியை கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது. அவரது பிள்ளைகளை தந்தை இருந்தும் அனாதைகளாக ஆக்கியது. இவற்றுக்கெல்லாம் காரணம் தேவையில்லாமல் பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டிதான். குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும்.

நான் தமிழகத்தால் இருந்தபொழுது சிறைவாசிகளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை. அதற்காக அவர்கள் எதிர்ப்பைக் காட்ட உள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே இது விஷயமாக உடனடியாக சிறைவாசிகளிடம் பேசுங்கள் என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். மேலப்பாளையம் சிறைவாசிகளிடம் பேசினேன். மதுரை சிறையில் உள்ள ராஜ உசேன் அவர்களிடம் போய் பேசுங்கள் என்றார்கள். உடனே 19-04-2006 புதன் அன்று மாலை மதுரை மத்திய சிறை சென்றேன். என்னுடன் மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றேன். ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம்.இமாம் அலி வழக்கை விசாரிக்கும் நீதிபதி சாவித்திரி சரி இல்லை. ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டியாக உள்ளார். காலையிலிருந்து மாலை வரை காக்க வைக்கிறார். ஒண்ணுக்கு கூட போக அனுமதிப்பதில்லை. தண்ணீர் கூட குடிக்க விடுவதில்லை. இப்படி கோர்ட்டில் கொடுமைப் படுத்துகிறார். தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. தலையில் புண் இருந்ததால் தொப்பி போட்டுக் கொண்டு வந்தவரை தொப்பியை கழட்டு என்றார். இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர்.

அதற்காக ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம் என்றும் ராஜ உசேன் கூறினார். த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன். இதைக் கேட்டவுடன் அப்படியே ஈ-மெயிலாக அனுப்பி விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை. நீங்கள் சிறைவாசிகளாக உள்ளீர்கள். எவ்வளவு காலம்தான் சிறையிலேயே கிடக்கப் போகிறீர்கள். உங்கள் மீது நல் எண்ணம் ஏற்பட்டு விடுதலையாக வேண்டாமமா? எனவே உங்களுக்காக நீங்கள் எதிர்ப்பு காட்டும் முறை சரி இல்லை. நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறீர்கள். அந்த அம்மா தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். வேகப்படாதீர்கள் விவேகமாக செயல்படுங்கள். உங்கள் குறைகளைச் சொல்லி விட்டீர்கள் அல்லவா. முறையாக த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் சொல்லித்தான் வந்துள்ளேன் என்றேன். மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள். சுமார் ஒரு மணி நேரம் பேசி அவர்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை கைவிடச் செய்தேன். சரி நாங்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை விட்டு விடுகிறோம். உடனே சாவித்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள்.

மதுரையில் நீங்களே தலைமை தாங்குங்கள். எங்கள் சிறைவாசிகள் குடும்பத்தாரே நிறைய வருவார்கள். அல்லது த.மு.மு.க. சார்பாக கண்டன போஸ்ட்டர் ஒட்ட அனுமதி வாங்கித் தாருங்கள். நாங்களே செலவு செய்து போஸ்ட்டர் ஒட்டிக் கொள்கிறோம். என் பெயரில் கண்டன அறிக்கையை மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள். இப்படி நிறைய சொன்னார்கள். வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால். அவர்கள் சொன்ன விஷயங்கள் யாவும் த.மு.மு.க.வுக்கும் எனக்கும் விளம்பரம் தேடித் தரக் கூடியவைதான். இதுதாண்டா சமயம் தேர்தல் நேரம் வேறு நல்ல விளம்பரம் கிடைக்கும் என பயன்படுத்திக் கொண்டோமா? மெயில் போட்டோமா? ராஜா உசேன் பெயரால் அறிக்கை வெளியிட்டு வெப் சைட்டுக்கு விளம்பரம் தேடினோமா?

வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால் இதைத்தான் செய்திருப்பார்கள். வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள். சிறைவாசிகள் சொன்னவை யாவும் மனம் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் சொன்னவை. அவர்கள் அந்த நிலையில்தான் இருப்பார்கள். நாம் தான் எது நல்லது என்று ஆய்வு செய்து செயல்பட வேண்டும். குழந்தைகள் சாக்குலேட்டுகள் கேட்டுத்தான் அடம் பிடிக்கும். அதனால் ஏற்பட்டுள்ள சலி, இருமல், காய்ச்சல், புண் மற்றுமுள்ள நோய் நீங்காது மேலும் கூடும் என்பதை குழந்தைகள் அறிய மாட்டார்கள். அன்றைக்கு தந்த சாக்குலேட்டுகள்தானே இன்றைக்கு ஏன் தர மறுக்கிறாய் என்றுதான் கேட்பார்கள். வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள் குழந்தைகளை சுற்றி சுற்றித்தான் வருவார்கள். காரணம் அவர்களுக்கு குழந்தைகள் பற்றி கவலை கிடையாது. வியாபாரம்தான் அவர்களது நோக்கம். தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை.

ராஜா உசேன் கூறிய குற்றச்சாட்டுக்களை தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியவர்களுக்கு போன் போட்டுச் சொன்னேன். அப்பொழுது அவர்களிருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்கள். இதுதான் வாய்ப்பு என அதை அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை. வெப் சைட் விளம்பர விரும்பிகள் போல் அவர்கள் இருந்திருந்தால் அதையே தேர்தல் பிரச்சாரமாக ஆக்கி இருப்பார்கள். சரி அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய முயற்சிக்கிறோம் என்றே சொன்னார்கள். நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி. அதன் பிறகு வக்கீல் ஆபீஸுக்குப் போனோம். அங்கே சீனியர் வக்கீல் இல்லை. ஜுனியர் இருந்தார். அவரிடம் (ஹாமித் பக்ரியுடன் கைதாகி இருந்த) இளையான்குடி அப்துல்லாஹ் நீங்கள் சொன்னபடி 36 தொப்பிகள் வாங்கி கொடுத்து விட்டேன்.

நாளை கோர்ட்டுக்கு வரும்போது எல்லாரும் தொப்பி போட்டுக் கொண்டு வருவார்கள் என்றார். உடனே வக்கீல் நாளை தொப்பி பற்றி ஜட்ஜ் பேசினால் நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி என்று சொல்வேன் என்றார். அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். நான் ராஜா உசேன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுதான் இளையான்குடி அப்துல்லாஹ் தொப்பி பார்சலை கொடுத்தார். அது இதுக்குத்தான் என தெரிந்திருந்தால் அப்பொழுதே இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என தடுத்து இருக்கலாமே என வருந்தினேன். இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது. மறுநாள் காலை 8 மணிக்கு த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி போன் செய்தார். மேலே பேசி விட்டோம். அவர்கள் உடனடியாக டிஸ்ரிக் ஜட்ஜு மூலம் அந்த அம்மாவிடம் பேசி விட்டார்கள். அந்த ஜட்ஜ் நான் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அப்படி நடந்திருந்தாலும் இல்லை என மறுத்து உள்ளதே நல்ல நிலைதான். இன்று தொப்பி போட்டுக் கொண்டு போகும் விஷயமும் அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. தொப்பி போட்டுக் கொண்டு போனாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தொப்பி சம்பந்தமாக அந்த அம்மாவிடம் கேட்டதற்கு, ஒரு வழக்கில் உள்ளவர்களை 2 அணிகளாக கொண்டு வருகின்றனர். அவர்களை யூனிபாமாக (ஒரே அணியாக) கொண்டு வாருங்கள் என்றேன். அதைத்தான் தவறாக புரிந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.மொத்தத்தில் இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது. அதற்கு முன் அடையாளமாக அந்த கேஸில் உள்ள ஒரு அணி வந்ததும் அடுத்த அணி வராமலே வந்ததாக இன்ற பதிந்து விடுவார்கள் என்றார். த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள். இந்த தகவலை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கச் செய்தேன். அந்த அம்மாவிடம் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் வீம்புக்கு தொப்பி போட்டு மீண்டும் விவகாரத்துக்கு வழி வகுக்க வேண்டாம் என்றும் கூறினேன். அவர்களும் வீம்பு பண்ணும் நோக்கில் தொப்பி அணிய இருந்ததை தவிர்த்தனர். அன்று மாலை மதுரை சிறைவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல். நீங்கள் சொன்ன மாதிரி ஜட்ஜ் நடந்து கொண்டார். ஒரு அணி மட்டும் ஆஜரானோம். அடுத்த அணியை வேனிலிருந்தபடியே திருப்பி அனுப்பி விட்டனர். நல்ல மாற்றம் சந்தோஷம். த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள். சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம். ஏந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இப்படி முறையாக அணுக வேண்டும். முறையாக அணுகியும் பலன் இல்லை என்றால்தான் பிரச்சனையை வெளியே கொண்டு வர வேண்டும். அதுவும் சிறைவாசிகள் பெயரால் கொண்டு வரக் கூடாது. சிறைவாசிகளும் அதை கையிலெடுக்கக் கூடாது என்று சொல்கிறோம்.

ஏன் சொல்கிறோம் சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம். அவர்களது விடுதலைக்கு தடையாக உள்ளதே அவர்களது முரட்டுத் தன்மை மாறவில்லை என்ற குற்றச்சாட்டுதான். ஆட்சி மாறி எவ்வளவு நாட்களாக ஆனாலும் எல்லா செயல்பாடுகளும் முந்தைய நடை முறைப்படியே இருக்கும். எது அரசின் கவனத்திற்கு கொண்டு போகப்படுகிறதோ அதுதான் புதிய உத்தரவுக்குள்ளாகும். ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2 நாளில் நடந்தது.nஷரீப் விஷயத்தில் போலீஸ்தான் பழைய நடைமுறையை பின்பற்றியுள்ளது. போலீஸ் செய்த செயலை புதிய அரசின் செயலாக சித்தரிப்பது சரியா? இது தேவையில்லாமல் புதிய அரசை பகைக்கும் தன்மையா இல்லையா? த.மு.மு.க.வை அணுகி அது ஈடுபட மறுத்ததா? சிறைத்துறை எஸ்றா மாற்றப்பட வேண்டும் என்றார்கள். தங்கப்பாவே என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். த.மு.மு.க. தொடர்ந்து கடுமையாக போராடி வந்தது. அவர் மாற்றப்படுவதற்கு 2 நாளுக்கு முன்பாக த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார் எஸ்றா 2 நாளில் மாற்றப்படுகிறார் என்று. இதை தங்கப்பாவிடம் சொன்னேன். ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2 நாளில் மாற்றம் நடந்தது.
http://www.tmmkonline.org/tml/archieves/others/98_711.htm

த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது. சிறையில் கடுமையாக நடக்கிறார்கள் த.மு.மு.க. தலையிட்டால்தான் முடியும். த.மு.மு.க.வில் சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. நூறாண்டு பாரம்பரியம் என சொல்லிக் கொள்ளும் கட்சியின் பெயரைச் சொல்லி அவர்களிடம் சொல்லுங்களேன் என்றேன். அவங்களுக்கு மதிப்பே இல்லைங்க. அவங்களால ஒண்ணும் ஆகாதுங்க. த.மு.மு.க.வால்தான் முடியுங்க என்றார் தங்கப்பா. த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது. இப்ப கடுமை குறைஞ்சிட்டுங்க என்றார் தங்கப்பா.த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்? ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சிறைவாசிகளுக்கு பிரியாணி செய்து கொடுக்க அனுமதி தர மறுக்கிறார்கள் த.மு.மு.க.விடம ; சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் சொன்னேன். மேலதிகாரிகளிடம் பேசி விட்டு தகவல் தந்தார். அதை தங்கப்பாவிடம் தெரிவித்தேன். எங்கள் சார்பில் நன்றி சொல்லி விடுங்கள் என்றார். எதற்கும் தங்கப்பா த.மு.மு.க. தலைமைக்கு நேரடியாக நன்றி சொன்னது கிடையாது. இப்படி பல விஷயங்களை அ.தி.மு.க. ஆட்சியிலேயே த.மு.மு.க. செய்து கொடுத்திருக்கவே ஷரீப் விஷயத்தில் மட்டும் தங்கப்பா த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்? சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு கால அளவு கிடையாது. அவர்களை விடுதலை செய்து விடும்படி சுப்ரீம் கோர்ட் கூட உத்தரவு போட முடியாது. ஆனால் ஒரு மாநில அரசு நினைத்தால் எப்பொழுதும் விடுதலை செய்யலாம். எனவே போலீஸ் செய்த நடை முறைச் செயலை புதிய அரசின் செயலாக சித்தரித்துள்ளது தேவையற்ற பகைமையைத்தான் ஏற்படுத்தும். அதற்கு துணை போகும் விளம்பர விரும்பிகளால் விபரீதங்கள்தான் ஏற்படும். இந்த தவறான செயலை சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள். விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.அ.தி.மு.க. ஆட்சியின்போது கூட தங்கப்பா நிறைய மெயில்கள் அனுப்பி இருக்கிறார் பலர் பார்வேடு செய்திருக்கிறார்கள். நான் பார்வேடு செய்தது கிடையாது. சிறைவாசிகள் பெயரால் அரசுக்கெதிராக அறிக்கைகள் வெளியிடச் செய்வது. அதை பரப்பவது அறிவுடையவர் செயல் அல்ல. சிறைவாசிகளின் விடுதலையை விரும்புவோர் செய்யும் செயலுமல்ல. இது போன்ற விளம்பர விரும்பிகளால் சிறைவாசிகளுக்கு கேடுதான் விளையும். விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

சங்கே முழங்கு !!

1 comment:

முகவைத்தமிழன் said...

அன்பின் அப்துல்லாஹ் அவர்களே,

தாங்கள் தயவு செய்து கீழே உள்ள இணைப்பில் வென்று பார்வைலயிடவும்.


நன்றி


தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இடம்பெற்ற பேட்டியில் பொய்கள் இடம்பெற்றதா?