பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இந்திய மக்கள் பேரவைபற்றிய விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
விடிவுக்கு வழி கேட்டால் வந்தவாசிக்கு வழி சொல்வது அறிவுடமை அன்று. எத்தனை அமைப்புகள் எத்தனை ஆண்டுகள் என்பது கேள்வி அல்ல. இயக்கம் இலக்கை அடைந்து இருக்கிறதா? என்பதுதான் கேள்வி.
நேற்று தோன்றியதா? இன்று தோன்றியதா என்பது அல்ல. எத்தனை ஆண்டுகள் பூமியில் நிலக்கரி புதைந்து இருந்தது? என்பது கேள்வி அல்ல. தங்கமாக மாறி இருக்கிறதா? என்பது தான் கேள்வி.
முஸ்லிம் லீக் சமூகத்தின் உணர்வுகளை, தேவைகளை நிறைவு செய்யத் தவறி விட்ட காரணத்தால் முஸ்லிம் சமூகம் சந்தித்த பிரச்சனைகள் கொடுமைகள் ஏராளம் ஏராளம். அந்த தேவைகளை நிறைவேற்ற, சமூகத்தின் நெருக்கடிகளுக்கு அபயம் தேட புறப்பட்டவர்கள் புல் அறுத்துக் கொண்டிருந்தால், ஆம், மெகலன் கப்பல் புறப்பட்ட இடத்திற்கே வந்ததைப்
போன்று கழகங்களும், தவ்ஹீது அமைப்புகளும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால் கனன்று கொண்டு இருக்கும் சமூகத்தின் உள்ளக் குமுறலை அடைத்து வைக்க முடியுமா?
வெடித்து விடிவுக்கான புரட்சி புறப்பாடுதான் இந்திய மக்கள் பேரவை.
தேவையா? அல்லது தேவையில்லையா என்பதை மக்கள் தாம் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல.
உங்களுக்கு கூட்டமா? எங்களுக்கு கூட்டமா? என்பது அல்ல பதில். குறத்திகூட வித்தையைக் காட்டி கூட்டத்தை கூட்டி விடுகிறாள் அதற்காக குறத்தி கூட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?
கிணற்றுக்குள் கிடக்கும் தவளை பெருமை பேசிக் கொள்ளுமாம். அப்படி பேசுவது வார்த்தைக்கு வேண்டுமானால் வசம்பு தடவலாம். வாய்மைக்கு வழி கோலாது.
போட்டி, பொறாமை நமக்குள் வேண்டாம் அன்பரே! உரிமை, உணர்வு என்று உரக்க பேசுவதை விட உண்மையை ஊடுருவிப் பாருங்கள் உண்மை புரியும். நெறி கொண்ட மார்க்கத்தின் சிற்பிகள் நீங்கள் வெறி கொண்டு பிதற்றுவது வேதனை அளிக்கிறது.
இறைவனிடம் மட்டுமே கூலியை எதிர் பார்ப்போம்.
வஸ்ஸலாம்.
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
அமீரகம்.
No comments:
Post a Comment