Tuesday, May 30, 2006

விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி

விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி


அன்புச் சகோதரர் திரு மு. அப்துல் காதிர் தஸ்தகீர் அவர்களுக்கு....

அஸ்ஸலாமு அலைக்கும்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் (அதாவது இருண்டதெல்லாம் பொய்) என்பார்கள். ஆனால் வெளிச்சமாக - தெளிவாகத் தெரிவதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. யாரையும் தக்லீத் செய்யக்கூடாது என்று கூறிக்கொண்டே சிலரை தக்லீத் செய்யும் போக்கு தங்களின் எழுத்தில் தெளிவாகத் தெரிகிறது. கண்மூடித்தனமாக ஒருவரை விமர்சிப்பதற்கு ஒரு வரம்பை யாரும் சொன்னதில்லை என்பதற்காக வரம்பு இல்லை என்று ஆகிவிடாது. இறைவன் கூறுவதை கவனியுங்கள் : நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரை புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல் குர்ஆன் 49:12) பார்க்க : 49:9-12


குற்றஞ்சாட்டுவதற்கு முன் குற்றஞ்சாட்டிகள் செய்ய மறுத்துவரும் ஒன்றை உங்களிடமும் வினவுகிறேன். அதாவது தாம் பின்பற்றும் கொள்கை மற்றும் தனது செயல்பாடுகள் குறித்து எந்நேரமும் கலந்துரையாட காத்திருக்கும் பி.ஜெ.- விடம் இது பற்றி வினவினீர்களா? பொதுமக்களுக்கு பி.ஜெ.- வை ஜீரோவாக அல்லது மார்க்கத்தை கொஞ்சம் கூட சரியாக விளங்காதவராக சித்தரிக்க முயற்ச்சிக்கும் முன் ஏன் இதுபற்றி அவரிடமே நேரடியாக ஒரு கடிதம் கூட எழுதவில்லை?. சில வருடங்களுக்கு முன்னால் பக்கம் பக்கமாக அபூ அப்தில்லாவிடம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தவர்தானே நீங்கள்? நேரடியாக கேட்பதை விடுத்து நீங்களாகவே இதற்கெல்லாம் பி.ஜெ. விடம் அற்புதமான பதில் இருக்கும் என்று ஜோசியம் கூறியுள்ளீர்களே? மேற்குறிப்பிட்ட உங்களது ஜோசியத்திலிருந்தே பி.ஜெ. சொல்வது உண்மையாக இருந்தாலும் அதை நான் கண்டு கொள்வதாக இல்லை என்ற உங்கள் மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளீர்களே! இது மகாபாவம்; இல்லையா?
எதற்கெடுத்தாலும் விவாதம் என்று மெல்ல நழுவவேண்டாம்.
எதற்கெடுத்தாலும் விவாதம் என்று இதுவரையிலும் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்கள் கூடச் சொன்னதில்லையே? தவ்ஹீதுதான் எங்களுடையதும் என்று பிதற்றுபவர்கள் ஓடி ஒளிந்து விடுவதன் சூட்சுமம் என்ன? சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய இவர்கள் எத்தனை முறை முன் வந்தார்கள்?

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான் :-
சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்கள் (அறியாமையால்) தூங்குபவர்கள்.
இந்த குற்றஞ்சாட்டிகள் (அறிந்திருந்தும்)தூங்குவதாக நடிப்பவர்கள்.

ஆரம்ப காலத்தில் தாங்கள் தமுமுக - வில் இருந்ததனாலோ என்னவோ தமுமுக வினர் மீது சற்று பரிவு காட்டியுள்ளீர்கள். தேவை தான் ஆனால் சிலர் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக அவர்களுக்கு நீதி செலுத்துவதை விட்டும் பாராமுகமாக இருந்து விடாதீர்கள் என்ற குர்ஆன் வசனத்தை தாங்கள் கடைபிடிக்க மறுப்பது அல்லது மறப்பது தவறிலும் மிகப்பெரிய தவறு.

எதுவாக இருந்தாலும் உரக்கக் கூறுங்கள் ஆனால் ஒத்து ஊதாதீர்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜெ. நமக்கு கற்றுத் தந்தார். அதை தாங்கள் மறுப்பதாக இல்லை. எனவே அதன் படி நீங்களும் செயல் படுங்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.

இந்த தேர்தலோடு இந்த தேர்தல் நிலைபாடு முடிந்துவிட்டது என்று பி.ஜெ. மற்றும் அவரது தலைமையை ஏற்று நடக்கும் த.த.ஜ வினர்களும் அறிவித்து விட்டார்கள். அத்துடன் தேர்தல் முடிவை சற்று அலசும் வண்ணமாக tntj.net நான்கு Vedio Clip ம் பதிவு செய்துள்ளார்கள். அதை நானும் பார்வையிட்டேன். ஆனால் இந்த முடிவு தமிழகத்தின் இறுதி முடிவு அல்ல. தற்காலிகம் தான் என்று இப்போதைய முதல்மைச்சர் கருணாநிதியே உணர்ந்திருக்கும் போது இன்னும் இவ்விசயத்தில் தங்களது பொன்னான வார்த்தைகளை வீணடிப்பதில் என்னதான் பேரின்பம் அடைகிறார்களோ? அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களிடம் எடுபடாமல் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார் என்று யாரோ கூறியதை தாங்கள் கூறுவது முஸ்லிம்கள் தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாயின் ஒப்புக்கொள்ளலாம்.

(பெருகிவரும் முஸ்லிம் சமுதாயம் தான் இனிவரும் காலங்களில் நிர்ணய சக்தி என புரிந்து கொண்டதால் தான் சில பீடைகள் இப்போதே அரசியலில் குதித்துவிட்டால் எதிர்காலம் பிரகாசிக்கும் என்று குதித்துக் கொண்டிருக்கின்றார்கள். டிசம்பரில் திருடவேண்டாம், சுனாமிக்காக காத்திருக்கவேண்டாம். இதற்கு பி.ஜெ. ஒரு முட்டுக்கட்டை என்பதும் அவதூறு பரப்புவதற்கான காரணங்களில் புதியது.)

உங்கள் கருத்தின்படி பி.ஜெ. மற்றும் அவரது தலைமையை ஏற்று நடக்கும் த.த.ஜ வினர் எடுத்த தேர்தல் நிலைபாடுகள் அத்தனையும் தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக பெருவாரியான முஸ்லிம்களும் ஜெயலலிதாவுக்குத் தான் வாக்களித்தார்கள் என்ற பி.ஜெ. வின் கருத்தை மறுக்க முடியாது. முஸ்லிம்கள் ஜெயலலிதாவை எதிர்த்ததனால் தான் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதிக வாக்குகளை அளித்தார்களா? இல்லை முஸ்லிம்கள் ஜெயலலிதாவுக்கு பெருவாரியாக வாக்களித்ததை மடமை என்று சாடுகிறீர்களா?. சுருக்கமாக சொல்வதென்றால் தேர்தல்-ஜெயலலிதா-ஆதரவு என்பதைப் பற்றியெல்லாம் தாங்கள் எழுதியதை விரிவாக அலசினால், தாங்கள் எழுதியதைப் போன்று விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ஏன் என்றால் நான் க்ளீன் ஷேவ் செய்திருந்தேன் என்று கூறும் பலரை அடையாளம் காண்பிக்க முடியும். ஆனால் அது நம் வேலை அல்ல!

தாங்கள் ஆதரிக்கக்கூடிய (அதாவது தவ்ஹீத் என்று சொல்லிக்கொண்டே குராஃபிகளின் சில செயல்பாடுகளை தாங்களும் செயல்படுத்தி செல்லுமிடமெல்லாம் தவ்ஹீதை தலைகுனிய வைக்கும்) ஸலஃபிகள் அன்றைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியை ஸலஃபி ஸம்மேளனத்திற்காக புத்தரிக் கண்டம் மைதானத்தில் மேடையேற்றி, அவருக்காக எழுந்து நின்று மரியாதை செய்ததை நிங்கள் மறுக்க மாட்டீர்கள். அவர்களும் தவ்ஹீத் என்றுதான் உங்களையும் தக்லீத் செய்ய வைத்திருக்கின்றார்கள்.

எது எப்படியோ ஆகட்டும், உங்கள் கருத்தின் படி பி.ஜெ. வின் அரசியல் நிலைபாடு மொத்தத்தில் தவறு என்றாலும் அதை ஒப்புக்கொள்ள நாம் தயார்! ஆனால் மார்க்க விசயத்தில் விழிப்புணர்ச்சி என்ற பெயரில் தாங்கள் எழுதியிருக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்காக சில கேள்விகளுக்கு உரிய பதிலைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

(இதற்கு முன் About PJ என்ற Iduthan Islam.com என்ற வெப் சைட்டுடன் நடுநிலையாளர்கள் நாங்கள் என்று நா கூசாமல் கூறிவரும் சிலரது உலகப் புகழ்பெற்ற ஒரு கேள்வி-பதிலுக்கான எனது கருத்தை உங்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதற்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பதிலை எதிர்பார்த்திருந்தேன். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் கலந்துரையாட யாரும் முன் வரவில்லை. ஏமாற்றம் தான் மிச்சம். அதுவும் உங்களிடமிருந்து வந்த பி.ஜெ. வை கண்மூடிப் பின்பற்றுவதை எச்சரிக்கிறேன் இப்போது அவர் பெரிய அரசியல் வாதி - என்ற பூசணிக்காய் பதிலால் மிகவும் அதிர்ச்சியுற்றேன். தங்களுக்கு சாதகமாக இப்படியே தேர்தல் முடிவு வந்தபின் எழுதலாம் என்று காத்திருந்தீர்களோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது.

எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற இறைச் செய்தியை மறந்து ஆர்ப்பரிக்கும் கூட்டத்தாருடன் கலந்து விடாதீர்கள். அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்)

1. நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று எங்கு எப்போது பி.ஜெ.கூறினார்?

2. அல்லாஹ் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியிருந்தால் அதன் சரியான பொருள் என்ன?

3. சூனியதிதற்கு ஸலஃபிகள் தரும் விளக்கத்தை விட குராஃபிகளின் விளக்கம் பரவாயில்லை! (இங்குதான் ஸலஃபிகள் குராஃபிகளிடம் அதிகம் தொப்பி போடுவது)

4. திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது என்றீர்கள். கருத்து என்பதன் பொருளை சரியாக புரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள். ஆனால் பொருளை மாற்றியது என்று துணிந்து சொல்கிறீர்களே இதை விவாதிப்பதற்கு முன் வராதது ஏன்?. (பொருளை மாற்றுவது என்பது நரகத்திற்கான நேரடிப் பாதை. அது போல்தான் பொருளை மாற்றியது என்று ஆதாரமில்லாமல் கூறுவதும்)

5. ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்று எந்த ஹதீஸை குறிப்பிட்டு கூறினார் என்பதையும் பட்டியலிடவும்.

6. செல்வங்களுக்கான ஸகாத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது. (முதல் ஐந்தும் ஆதரமில்லாத குற்றச்சாட்டுகள் எனக் கருதுவதால் அதன் நடையை இறந்தகாலத்தில் எழுதியிருப்பதை விட்டுவிட்டேன். ஸகாத் விசயத்தில் வாதிட்டது என்று எழுதி ஏதோ ஸலஃபிகளும் இவர்களின் உலகளாவிய அறிஞர்களும் விவாதித்து வருடம் ஒருமுறை கொடுத்து விட வேண்டும் என்று தீர்மானம் ஏற்படுத்திவிட்டதைப் போன்று எழுதியுள்ளீர்களே? இது விசயத்தில் மக்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள். எதை அடிப்படையாக வைத்து நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் வருடத்திற்கு ஒருமுறை ஸகாத் கொடுத்து வருகிறீர்கள்? நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் தக்லீத் வாதிகள் என்பதற்கான ஆதாரம் இது மட்டும் போதாதா? ஸகாத் மற்றும் சூனியம் சம்பந்தமாக (விரிவாக) விவாதிப்பதற்கு ஆயனநநயெ ருniஎநசளவைல - யிலிருந்து பி.ஜெ. விற்கு அழைப்பு வந்திருப்பது உலகளாவிய என்ற தங்கள் கூற்று உலகளாவிய புரட்டு என்பதை புலப்படுத்துகிறதே? இன்னும் சொன்னால் திருவனந்தபுரத்தில் ஸலஃபி சென்டரில் ஸாதிக் பாய் சொன்னதை வைத்தே வித்ரு தொழுகையின் முறைகளை இரண்டு வருடம் மாற்றி மாற்றி அமைத்தார்களே அதை தக்லீத் என்று சொல்ல மறுப்பது ஏன்?

7. ஆண்களுக்கான ஆடை விசயத்தில் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவு படுத்திவிட்டு வேண்டுமானால் பி.ஜெ ஃபத்வா கொடுத்து விட்டார் என்று அங்கலாய்த்திருக்கலாம்

மாங்காவை சுவைத்துவிட்டு புளி புளிக்கிறது என்று கூறுவது போலல்லவா இருக்கிறது உங்கள் குற்றச்சாட்டு. (மனோ இச்சையை பின்பற்றுவதை மார்க்கம் ஆக்கிவிடாதீர்கள்). இமாம்களை திட்டுகிறார்கள், அவுலியாக்களை பழிக்கிறார்கள், அண்ணலாரை ஏசுகிறார்கள். சவுதியிலிருந்த சம்பளம் என்றெல்லாம் வசைபாடிக் கொண்டிருந்த குராஃபிகள் உங்களிடம் தோற்றுவிட்டார்கள் போங்கள்.

மார்க்கத்தின் பெயரால் அரசியல் நடத்தும் போலிகளை இனம் காட்டுவோம் என்று பன்மைப்படுத்தியுள்ளீர்கள். (பி.ஜெ. - வும் த.த.ஜ ஆலிம்கள் என்று நழுவ வேண்டாம். ஏனென்றால் நாளைக்கே த.த.ஜ ஆலிம்களில் ஒருவர் தனியாகிவிட்டால் (அவர் காணாமல் போகும் வரை) அவரோடு அணிசேர்ந்து அவரைக் கெடுக்கும் அவலங்களை காண்கிறோம்.) அரசியல் நடத்தாமல் மார்க்கத்தில் மட்டுமே போலித்தனம் செய்யும் போலிகளை என்வென்கிறீர்கள்? பகிரங்கப் போலிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் இல்லையா? இவர்களை ஒடுக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

எங்கெல்லாம் த.த.ஜ வினர் பெரும்பான்மையாக இருக்கின்றார்களோ அங்கு சென்று நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டே அவர்கள் குறைவாக இருக்கும் பகுதியில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்குவது போன்ற வஞ்சகத் தனங்களை நீங்கள் கண்டதில்லையா? அல்லது அவர்களுடன் நீங்களும் அணிசேர்ந்து விட்டீர்களா? நீதியை நிலை நாட்டுவதில் பாரபட்சம் ஏன்? துயுஞர்இ வுNவுதுஇ வுஆஆமு அல்லது நஜாத் வாசகர்களாகட்டும். யாராக இருந்தால் என்ன? அத்தனை பேரும் ஆதமின் மக்கள் தான்! நம் சகோதர சகோதரிகள் தான்!! அனைவருக்கும் நாம் கண்ட சத்தியத்தை எடுத்துரைப்போம்;. அசத்தியத்திற்கு எதிராக அண்ணலார் வழியில் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதை விடுத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு குறிப்பிட்ட ஒருவர் மீது சாடுவதன் மூலமாக எந்த சமுதாயத்தையும் நீங்கள் திருத்தியமைக்கவோ விழிப்புணர்வடையச் செய்யவோ முடியாது.

மொத்தத்தில் தங்களின் இவ்வாறான கூற்றுக்களால் பி.ஜெ. யை போலி என்று தங்களுக்குள் எண்ணி மகிழலாமேயன்றி பலன் ஏதும் விளைவதாக தெரியவில்லை!!

ஆகவே, மேலே கூறப்பட்ட அனைத்திற்கும் ஒரே கடிதத்தில் பதிலுரைக்க இயலாது என்பது நானும் இக்கடிதங்கள் கிடைக்கப் பெற்றிருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று. குறைந்த பட்சம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் தருவீர்கள் என எதிர் பார்த்த வண்ணம்..............

(மிர்ஸா குலாம் என்ற இன்னொருவரின் கண்டு பிடிப்பு : அப்துல் காதிர் தஸ்தகீர் அவர்களின் சில குற்றச்சாட்டுகளை அப்படியே எழுதியுள்ளார். ஸகாத் மற்றும் குர்ஆன் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் பி.ஜெ. தமுமுக வில் இருந்த போது இல்லையே? அவர் எழுதிய திருக்குர்ஆன் மொழி பெயர்புக்கு கூடுதல் வாங்கவேண்டும் என விலை நிர்ணயம் செய்துவிட்டு பின்னர் அற்ப விலைக்கு குர்ஆனை விற்கின்றார் என்றெல்லாம் பிதற்றுபவர்களிடமிருந்து அற்புதமான புதுப் புது குற்றச்சாட்டுகளுடன் இனிவரும் காலங்களில் சில இ-மெயில்களை படிக்க வேண்டிய அவல நிலை, முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படலாம்! வெளிநாடுகளுக்குச் சென்று வெள்ளோட்டம் பார்த்து இறுதியாக பி.ஜெ.- வை குற்றம் சாட்டுவதை விட தவ்ஹீதை குற்றம் சாட்டினால் எளிதில் இவர்களை ஓரங்கட்டி விடலாம் என்பதை கண்டுபிடித்து அதன்படி செயல்பட்டு தமக்குத் தாமே நாசம் ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் பிரிந்துவிட்ட போதும் பி.ஜெ.- வை அண்ணன் அண்ணன் என்று சொல்லி தமிழக மக்களை வளைக்க முயன்றார்கள். பரிதாபம்! பலன் ஒன்றும் கிடைக்கவில்லையா, உடனே கூறினார்கள் அபூ ஜஹ்ல் என்றும் இப்போது மிர்ஸா குலாம் அஹ்மது என்றும். வேடிக்கை என்னவென்றால் தனது மனைவிக்கோ குழந்தைகளுக்கோ கடிதம் எழுதவில்லை என்றாலும் தவறாமல் பி.ஜெ.- வை நாலு பக்கத்தில் குற்றம் சாட்டும் சில சமுதாயச் செம்மல்கள் கொஞ்சம் ஓய்வில் உள்ளார்கள்.

சிக்கன் சில்லி - மட்டன் கபாப் போன்றவற்றின் சுவை பி.ஜெ.- வின் மாமிசத்தில் இருக்காது என்பது இவர்களுக்குத் தெரியாது போலும்.


இறைவா! சில அற்ப ஆதாயக்காரர்களால் எங்கள் சமுதாயததில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை நீ தீர்த்துவைப்பாயாக.

இறைவா! தமிழ் மக்களுக்காக ஓய்வின்றி பிரச்சாரம் செய்துவரும் பி.ஜெ. மற்றும் அவரைப் போன்ற மார்க்க அறிஞர்களையும் இன்னும் எங்கள் அனைவரையும் இறுதிவரை நேர்வழியில் செலுத்துவாயாக.

இறைவா! எங்களை மனோ இச்சைக்கு அடிபணியாமல் உண்மையை ஒப்புக் கொள்ளும் மக்களாக ஆக்கியருள்வாயாக.


அன்புச் சகோதரன்.

ஷிஹாபுத்தீன்

shihabi50@yahoo.co.in

2 comments:

Anonymous said...

I concur with the views of Shihabudding(Disagree with some),

Some of the critism of anti-PJ views clearly indicates most of the people havent even tried to check is there any people who agree with PJ on some issues and what is the sanity of these anti-PJ groups.
e.g
1. Regarding Black magic even brothers on www.idhuthanislam.com has different views.
2. The person claiming to give clarification on zakath and half-trouser prayer, I seriously doubt these person's intention, No articles appear/get criculated from his side on non-tawhid topics like shirk or bidha which are taught in major islamic school in TAMIL Nadu.

The internet is good mean to propogate our relegion and also lot of scholors available to answer queries. Please dont use these to slander people.

Regards
Mohamed Yasin

Anonymous said...

மேற்கண்ட பதிவிற்கான பதிலை படிக்க
இங்கு
கிளிக் செய்யவும்.