Tuesday, May 30, 2006

தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்!

بسم الله الرحمن الرحيم

தவ்ஹீத் என்னும் பெயரால் தக்லீத் செய்யாதீர்!
மு. அப்துல்காதிர் தஸ்தகீர்

அன்புடன் ஷிஹாபுத்தீனுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. நலமாக உள்ளீர்களா? நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நீங்கள் நினைப்பது போன்று காழ்ப்புணர்ச்சியில் எழுதிய கடிதமல்ல அது. உண்மையை அல்லாஹ் அறிவான். அதற்கு பதிலாக இக்கடிதம் எழுதவில்லை. அதற்குரிய நேரம் எனக்குப் போதவில்லை. இக்கடிதம் கூட தாமதமான இரவு வேளையிலேயே எழுதுகின்றேன். பி.ஜே மீது நாம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ளவேண்டும். அவருக்கும் நமக்கும் என்ன சொத்துத் தகராறா? இல்லை. இன்று பல இஸ்லாமிய அறிஞர்களும் அவரது நிலைபாட்டை எதிர்ப்பதேன்? தமிழகத்தில் மடடுமல்ல பிற நாடுகளில், பிற மாநிலங்களில் உள்ள அறிஞர்களும் அவரது நிலைபாட்டை எதிர்க்கின்றார்களே. ஏன்?


நீங்கள் அனுப்பிய கடிதத்துக்கு முடிந்தால் நேரம் எடுத்து விரிவாக பதில் எழுதுகின்றேன். இக்கடிதம் சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு உணர்த்தவே எழுதுகின்றேன்.


1. நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்ற கருத்தை பி.ஜெ கூறியதாக நான் சுயமாக எழுதவில்லை. செப்டம்பர் 2005 ஏகத்துவ இதழில் இடம் பெற்ற நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற கட்டுரையை நடு நிலையுடன் முழுமையாகப் பார்வையிடுங்கள். (இது குறித்து ஒரு கட்டுரை நான் எழுதியுள்ளேன். உங்களுக்கு அனுப்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்)

2. அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்பதை அல்லாஹ் இறங்குவதாகவே வேறு வியாக்கியானம் செய்யாமல் நம்ப வேண்டும். அது எவ்வாறு என்று விளக்க இயலாது. நமக்கு அல்லாஹ் கொடுத்த அறிவு சொற்பமானது. இதுவே குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் மூத்த அறிஞர்களின் நிலைபாடு. ஆனால் இது குறித்த பி.ஜே அவர்களின் நிலைபாடு அல்லாஹ் இறங்கவில்லை. அவனது ரஹ்மத் இறங்குகின்றது என்பதாகும். இதற்கு என்ன ஆதாரம்?

3. சூனியத்திற்கு ஸலஃபிகள் தரும் விளக்கத்தை விட குராஃபிகளின் விளக்கம் பரவாயில்லை! (இங்குதான் ஸலஃபிகள் குராஃபிகளிடம் அதிகம் தொப்பி போடுவது) என்று எழுதியுள்ளீர்கள்? அவ்வாறு என்றால் இது விஷயமாக இது வரை உள்ள முந்தைய மூத்த அறிஞர்கள் (குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள்)அனைவரும் குராபிகளை விட மோசமானவர்கள் என்று கூறுகின்றீர்களா? இப்படிக்கூறுவதிலிருந்து அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

4. திருக்குர்ஆன் விளக்கத்தில் புதிய கருத்து : இது குறித்து விபரமான பதில்வேண்டுமன்றால் சகோ அப்துர் ரஹ்மான் ஷிப்லி பேசிய மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும் என்ற உரையைச் செவிமடுக்கவும். அது www.islamkalvi.com என்ற வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5. உங்களது ஜந்தாவது கேள்விக்கும் நான்காவது பதிலே.

6. ஸக்காத் சம்மந்தமாக பி.ஜே அவர்களின் வாதங்கள் தவறானது மடடுமல்ல அதற்காக ஹதீஸையே தனக்கு சாதகமாக அவர் வளைத்தது இப்போது உலகமே அறிந்த விஷயம். மேலும் விரிவான விபரங்கள்
http://www.islamkalvi.com/fiqh/zakath/reply_to_ehathuvam_jan2006.htm

7. ஆடைகுறித்து: http://www.islamkalvi.com/fiqh/prayer/women_dress.htm

நான் கேட்ட கேள்விகளுக்கு எதற்கு இணைய முகவரியைத் தரவேண்டும் என்று நீங்கள் கருதலாம். காரணத்தை முதலிலேயே கூறிவிட்டேன். விரிவாக எழுத நேரம்போதவில்லை. மட்டுமல்ல இது விஷயமாக நான்மேல் கொடுத்த விபரங்கள் நம்மை விட மூதிர்ந்த அறிஞர்களிடமிருந்துள்ளது என்பதாலும்தான்.


மாங்காவை சுவைத்துவிட்டு புளி புளிக்கிறது என்று கூறவில்லை. சுவையான மாம்பழம் என்று நினைத்து உண்டதில் புழு இருந்தது எனவே துப்பிவிட்டோம் அவ்ளவுதான்.


யாரையும் தக்லீத் செய்யக்கூடாது என்று கூறிக்கொண்டே சிலரை தக்லீத் செய்யும் போக்கு தங்களின் எழுத்தில் தெளிவாகத் தெரிகிறது. என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதனை எழுதிய நீங்களே சகோதரர் பி.ஜே யை தக்லீத் செய்துள்ளது தெரிகின்றது. நீங்கள் குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் மொழி பெயர்ப்பு அதற்கு சாட்சி. நீங்கள் எழுதியது.

இறைவன் கூறுவதை கவனியுங்கள் : நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரை புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல் குர்ஆன் 49:12) பார்க்க : 49:9-12


மேற்குறிப்பிட்ட 49:12 வசனம் அரபியில்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلا تَجَسَّسُوا وَلا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ
أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ


அடிக்கோடிட்ட வாக்கியத்தின் உண்மைப் பொருளில் إِنَّ என்பதை பி.ஜே மொழி பெயர்க்கவில்லை. உலகத்தில் உள்ள எல்லா மொழிபெயர்ப்பிலும் அதற்கு பரிபூரணமாக மொழிபெயர்ப்பைக் காணமுடியும். ஆனால் தாங்களோ அவற்றை விட்டுவிட்டு பி.ஜே யின் மொழிபெயர்ப்பை எடுத்துள்ளீர்கள். இது தக்லீத் இல்லையா? إِنَّ என்பது அவசியமற்ற வார்த்தை என்ற பி.ஜே யின் புதிய கண்டுபிடிப்பைத் தாங்களும் கண்மூடிப்பின்பற்றுகின்றீர்களா? நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று எழுதவேண்டியதுதானே?



ஆரம்ப காலத்தில் நான்; தமுமுக - வில் இருந்ததாக எழுதியுள்ளீர்கள்? தமுமுக வில் நான் என்றைக்குமே இருந்ததில்லை. நாம் இருவரும் விடியலில் இருந்தது உண்மை. பிறகு ஏன் யூகம் செய்து எழுதியுள்ளீர்கள்? ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும் (49:12)


ஸலஃபிகள் அன்றைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியை ஸலஃபி ஸம்மேளனத்திற்காக புத்தரிக் கண்டம் மைதானத்தில் மேடையேற்றி, அவருக்காக எழுந்து நின்று மரியாதை செய்ததாக எழுதினீர்கள். அதனை நீங்கள் பார்த்தீர்களா? அவ்வாறாயின் அவ்வாறு எழுந்திருந்தவர்களிடம் நீங்கள் அதனைச் சுட்டிக்காட்டினீர்களா? அவர்கள் என்ன பதில் அளித்தனர்? ஓ.கே. தமிழகமெங்கும் அம்மாவுக்காக ததஜ வினர் கொடிபிடித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தது, அவர்கள் ஆட்சியில் வருவதற்காக துஆ செய்தது இதனை எந்த பட்டியலில் சேர்ப்பதாம்?

எது எப்படியோ ஆகட்டும், உங்கள் கருத்தின் படி பி.ஜெ. வின் அரசியல் நிலைபாடு மொத்தத்தில் தவறு என்றாலும் அதை ஒப்புக்கொள்ள நாம் தயார்! என்று எழுதினீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இந்த விஷத்திலாவது அல்லாஹ் உங்களுக்கு தெளிவைத் தந்தானே! அவரது மார்க்க நிலைபாடும் தவறே என்பதிலும் அல்லாஹ் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்துவானாக.


புதில்கள் தொடரும்

அன்புடன்

மு. அப்துல்காதிர் தஸ்தகீர்
thasthahir_ma@hotmail.com

4 comments:

Anonymous said...

Dear brother,
Yes we understood that you've written in a half-sleep. please do re-check before posting.

Riaz Ahmed Saleem H.
hriazsaleem@aim.com

Anonymous said...

//பிற மாநிலங்களில் உள்ள அறிஞர்களும் அவரது நிலைபாட்டை எதிர்க்கின்றார்களே //

I think this is about scholar zakir naik, I dont know how many of them has followed his lectures regularly. There is difference in his views on certain issues, I think recently he started concentrating more on Quran & Sunnah (People should look for his lectures late eighty & early ninty). He is more good on comparative religion, Even today some of his views are not accepted by some scholars from other parts of the world.

//நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்ற கருத்தை பி.ஜெ கூறியதாக நான் சுயமாக எழுதவில்லை. செப்டம்பர் 2005 ஏகத்துவ இதழில் இடம் பெற்ற நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற கட்டுரையை நடு நிலையுடன் முழுமையாகப் பார்வையிடுங்கள். (இது குறித்து ஒரு கட்டுரை நான் எழுதியுள்ளேன். உங்களுக்கு அனுப்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்)//
This is a slander similar to supporters of Madhab & Tariqas.

//
சூனியத்திற்கு ஸலஃபிகள் தரும் விளக்கத்தை விட குராஃபிகளின் விளக்கம் பரவாயில்லை! (இங்குதான் ஸலஃபிகள் குராஃபிகளிடம் அதிகம் தொப்பி போடுவது) என்று எழுதியுள்ளீர்கள்? அவ்வாறு என்றால் இது விஷயமாக இது வரை உள்ள முந்தைய மூத்த அறிஞர்கள் (குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள்)அனைவரும் குராபிகளை விட மோசமானவர்கள் என்று கூறுகின்றீர்களா? இப்படிக்கூறுவதிலிருந்து அல்லாஹ் பாதுகாக்கட்டும்//
There are scholars with both views and it is no PJ has given this first time.

//திருக்குர்ஆன் விளக்கத்தில் புதிய கருத்து : இது குறித்து விபரமான பதில்வேண்டுமன்றால் சகோ அப்துர் ரஹ்மான் ஷிப்லி பேசிய மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும் என்ற உரையைச் செவிமடுக்கவும். அது www.islamkalvi.com என்ற வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.//

Every translation has some issues and it is known every scholar trnslates based on his knowledge and every one has made it clear thier translation is an attemt and not complete as it is in ARABIC except "Rashad Khalifa".
If your view is that only PJ has done wrong translation in 1400 centures and all others are correct. The I dont see any difference between your view and "Rashad Khalifa"

Unknown said...

//Yes we understood that you've written in a half-sleep. please do re-check before posting.//
தூக்கத்திலேயே மூழ்கியிருப்பவர்களுக்கு மற்றவர்கள் சொல்லும் உண்மைகள் தூக்க உளறலாகத் தெரிவதில் வியப்பில்லை.

//People should look for his lectures late eighty & early ninty//
என்பது தொன்னூறுகளில் அவர் இஹ்லாஸேர்டு செய்தவற்றை யாரும் குறை காணவில்லை.
அதற்காக அவர் தற்போது செய்கின்ற தவறுகளை சுட்டக் கூடாதா?
அவரை தக்லீது செய்பவர்களுக்குத்தான் கோபம் வரவேண்டும். அவரிடம் தவறே நிகழாதா?
இன்ஷா அல்லாஹ் உங்களைப் போன்றவர்களும் திருந்தி தக்லீதிலிருந்து தவ்ஹீதுக்கு வர துஆ செய்வோம்.

Anonymous said...

/* People should look for his lectures late eighty & early ninty//
Above comment was for Zakir Naik lecture (there is a visible change in his lecture and aproach) dont understand how come people generalize him as international scholor.

I too disagree with PJ on zakath and some more issues but that doesnt mean i should accept all that his coming from has junk.

Lot of people who post to this site or similar site has taken extreme views and it is intelligently exploited by some.

Here every attempt his being made to prove something as wrong and then generalize everything from one particular scholar is wrong, I see similar hypocracy from many people here.

Mohamed Yasin