அல்லாவின் திருப்பெயரால்..
அரசியல் களத்தில் - த.த.ஜ மற்றும் த.மு.மு.க
அரசியல் களத்தில் - த.த.ஜ மற்றும் த.மு.மு.க
இடஒதுக்கீட்டின் உட்சகட்டம்.
சகோ.பிஜெ அவர்களை தலைவராக கொண்ட த.த.ஜ தனது உதயத்தில் தங்கள் மார்க்க பிரச்சாரம்தான் த.மு.மு.க வளர்சிக்கு தடையாக இருக்கிறது என்று அவர்கள் கருதுவதால் தாங்கள் தனி இயக்கம் காண்பதாக கூறினார்கள். மார்க்க பணியுடன் சமுதாய பணிகளையும் ஒருமித்து செய்யப்போவதாக தங்கள் பத்திரிக்கையில் கூறினார்கள். ஆரம்பித்த இரண்டு வருடத்தில் பல விதத்தில் அவர்களின் சமுதாய பணிகள் சிறப்பாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக குடந்தையில் பல லட்சம் மக்களை அழைத்து இடஒதுக்கீடு கோரிக்கை வைத்ததுதான் இந்த தேர்தலில் அது இந்த அளவுக்கு முக்கியதுவம் பெருவதற்க்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
கருனாநிதி, ஜெயலலிதாவை அடையாளம் காட்டிய சமுதாய இயக்கங்கள்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில்; திமுக மத்திய ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு பெற்றுத்தருவதாக அறிவித்ததை தொடர்ந்து அந்த கூட்டணியின் வெற்றிக்காக த.த.ஜவும், தமுமுகவும் பிரச்சாரம் செய்தனர். இரண்டு பெரிய இயக்கங்கள் ஒத்த கருத்தில் ஒரே அணியை ஆதரித்ததால் கருனாநிதி மற்றும் ஜெயலலிதாவின் கொடுர முகங்கள் பாமர முஸ்லிம் மக்களுக்கு தெரியாமல் போனது. ஆனால் இந்த முஸ்லிம் அமைப்புகள் இரண்டும் இன்று எதிர் எதிர் முகாமில் இருப்பதால் கருனாநிதி மற்றும் ஜெயலலிதா இந்த சமுதாயத்திற்க்கு செய்த துரோகங்கள் அக்குவேர் ஆணிவேராக பிரித்து வெளியிடப்பட்டுளளது. இனி கருனாநிதி, ஜெயலலிதாவை பற்றி தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்தகாலத்தை நினைத்தால்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய காலத்தை கணக்கில் எடுத்து கொண்டால் யாருக்கும் வாக்களிக்காமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றும். ஆனால் தற்போது நமக்கு இடஒதுக்கீடு தரக்கூடிய ஒருவரை கடந்த கால கசப்புகளை மறந்து தேர்தெடுக்க கூடிய கட்டயத்தில் நாமிருக்கிறோம். ஜெயலலிதா ஆனையம் அமைத்தார் அவர் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தருவார் எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று த.த.ஜ வினரும், திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கருனாநிதி இடஒதுக்கீடு தருவார் என்று த.மு.மு.க வும் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்கள்.
இடஒதுக்கீடுதான் அணியை முடிவெடுக்கும் அளவுகோள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் நமது சமுதாய இயக்கங்கள் முதன் முதலாக இடஒதுக்கீட்டை தேர்தல் முடிவெடுப்பதற்க்கு அளவுகோளாக வைத்து களத்தில் இறங்கின. அதற்க்கு முந்தைய தேர்தலில் இடஒதுக்கீடு என்பது கோரிக்கையளவில் இருந்தாலும் அது தேர்தல் முடிவெடுக்கும் அளவுகோளக இல்லை. எனவே தற்போது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சரியாக எடைபோட்டால்தான் நாம் ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்.
இடஒதுக்கீடும் திமுகவும்.
கடந்த 2 ஆண்டுக்கு முந்தைய தேர்தலில் திமுக வென்றால் மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்று கூறி நமது முழுமையான வாக்குகளை பெற்று திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்னும் பரிசிலனை, ஆனையம் விசாரனை என்று காலத்தை கழித்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு ஆனையத்திற்காக எடுத்து கொண்ட காலம் மிக கூடுதலாகும். நம்மை ஏமாற்றவே முடிவில்லாமல் அதன் கால அளவு நீண்டு கொண்டே இருக்கிறது. தனது கண் அசைவில் மத்திய அரசை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் கருனாநிதி நினைத்திருந்தால் நமது மத்திய இடஒதுக்கீடை பெற்றுத்தந்திருக்க முடியும். நம்மை ஏமாற்றவே தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதமருக்கு இடஒதுக்கீடு கடிதம் என்ற கதையெல்லாம். எனவே இடஒதுக்கீடு விசயத்தில் திமுக கூட்டனி நம்மை ஏமாற்றுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நமக்கு இடஒதுக்கீடு கிடைப்பது கடினமே.
இடஒதுக்கீடும் அதிமுகவும்.
ஆனால் ஜெயலலிதா ஆனையமும் அமைத்து அதற்க்கு ஒரு வருடம் என்று கால நிர்ணயமும் செய்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவை 100 சதவீதம் த.த.ஜ வினர் நம்புவது போல் நாம் அவரை நம்ப முடியாது. அதே வேளை அவர் துணிச்சலான முடிவுக்கு சொந்தக்காரர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதற்க்கு தன் ஆன்மீக குரு சக்காராச்சாரியாரை கைது செய்ததை உதாரணமாக கூறலாம். ஆக ஜெயலலிதா வந்தால் 50 சதவுPதம் இட ஒதுக்கீடுக்கு வாய்பும் இருக்கிறது 50 சதவீதம் கொடுக்காமல் இருப்பதற்க்கும் வாய்ப்பு இருக்கறது.
சிறைவாசிகள் விடுதலை:
அதே போல் திமுக கோவை சிறைவாசிகளின் விசயத்தில் உண்மையிலேயே அக்கரை கொண்டு இருந்தால் 5 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளாக இருப்பவர்களை ஜாமினில் விடுதலை செய்யவேண்டும் என்று மத்தியில் சட்டம் கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி கொண்டு வந்து இருந்தால் இன்று நமது சகோதரர்கள ஜாமினில் வெளிவந்து இருக்க முடியும். ஆனால் இதற்காக எதையுமே கருனாநிதி செய்யவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று கூட திமுக தற்போது அறிவிக்க தயாரில்லை. ஆனால் ஜெயலலிதாவோ தான் அவர்களின் விடுதலைக்காக முழு முயற்சி எடுப்பதாக கூறி இருக்கிறார். எனவே இந்த விசயத்திலும் கருனாநிதியை காட்டிலும் ஜெயலலிதா சற்று நம்பிக்கைக்கு உரியவர்.
மானம், மரியாதை:
அதிமுக தேசிய லீக்கிற்க்கு 2 தொகுதியும், கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் பேரன் மியான் கானுக்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் முஸ்லிம் லீக்கிற்க்கு 3 தொகுதிகள் என்று வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் அறிவித்து விட்டு பிறகு அதில் ஒன்றை பிடிங்கி கொண்டது. அது மட்டும் இல்லாமல் முஸ்லிம் லீக்கிற்க்கு சீட்டையும் கொடுத்து தேர்தலில் நிற்பதற்க்கு ஆள்களையும் அல்லவா நாங்கள் கொடுக்க வேண்டும் என்று நையான்டி செய்தது கருனாநிதியின் உண்மை சுயருபம் வெட்ட வெளிச்சமானது. முஸ்லிம் லீக் அளவுக்கு கூட தொண்டர்கள் இல்லாத இந்திய கம்யூனிஸ்டுக்கு திமுக கொடுத்த தொகுதியில் ஒன்றை பிடுங்க முடியுமா?. முஸ்லிம்கள் என்றாலே கருனாநிதிக்கு கிள்ளுகீரைதான். இப்படி எந்த வித அவமானமும் ஜெயலலிதா செய்யவில்லை. இது மட்டும் இல்லாமல் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்யும் ஜாமங்களின் கதை புகழ் கவிஞர் சல்மாவுக்கு தேர்தலில் சீட்டு கொடுத்து நமது சமுதாயத்தை மிகவும் மட்டமாக எடைபோட்டுள்ளார். இப்படி எதை எடுத்து கொண்டாலும் கருனாநிதியை விட ஜெயலலிதாவை சற்று கூடுதல் நம்பக தண்மை உள்ளவராகவே தோன்றுகிறார்.
எமது நிலைபாடு:
எங்கெல்லாம் நமது முஸ்லிம் வேட்பாளர்கள் அதிமுக, திமுகவில் நிற்கிறார்களோ அவர்களை கட்சி பேதம் பாரக்காமல் கண்டிப்பாக நாம் ஆதரித்து ஓட்டு போட வேண்டும்(சல்மாவை தவிர்த்து). மற்ற தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதுதான் இன்றைய சூழ்நிலையில் நமக்கு சிறந்தது என்பதே எனது கருத்து.
இப்படிக்கு,
சைதை அஹமது அலி.
சென்னை.
No comments:
Post a Comment