Wednesday, April 26, 2006

பிரதிநிதித்துவத்தை பறித்த கருணாநிதி!!

சேப்பாக்கம் : முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பறித்துக் கொண்ட கருணாநிதி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியகும். குறைந்த வாக்காளர் எண்ணிக்கையை கொண்டுள்ள இந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் எளிதாக வெற்றி பெற்று விட முடியும்.

சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க விரும்பும் அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி முஸ்லிம் வேட்பாளரை சேப்பாக்கத்தில் நிறுத்துவது மரபாகும்.

1977, 1980, 1984 என 3 முறை திமுக சார்பில் ரகுமான்கானும், 1989ல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற எம். அப்துல் லத்தீப்பும், 1991ல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜீனத் சர்புதீனும் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனாக காட்டிக் கொள்ளும் திமுகவுக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை அளிக்கும் இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஒருவரே வெற்றி பெற்று வந்துள்ளார்.

இந்த நிலைக்கு மாறாக முஸ்லிம் சட்டமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்து நிறுத்தும் வஞ்சக திட்டத்துடன் 1996 தேர்தலின்போது முதன் முதலாக திமுக தலைவர் கருணாநிதி இந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

கருணாநிதியின் வஞ்சக குணத்தை அறியாத முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2001ல் தேர்தலின் போது அங்கு மறுபடியும் கருணாநிதியே போட்டியிட்டார். அப்போதும் அவரை முஸ்லிம்கள் வெற்றி பெறச் செய்தனர்.

இப்போது மறுபடியும் 2006 தேர்தலிலும் கருணாநிதி சேப்பாக்கத் தொகுதியிலேயே நிற்க முடிவெடுத்துள்ளார். ஆனால் இந்த முறை கலைஞரின் வஞ்சகத்திட்டத்தை அறிந்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினமே.

எந்த முஸ்லிம் சமுதாயம் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றிச் சிகரத்தில் வைத்து கண்டு களித்ததோ அந்த சமுதாயத்துக்கு அவர் தொடர்ந்து இழைத்த அநீதிகளால், வஞ்சகத்தால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியவர்களாய் சேப்பாக்கம் வாக்காளர்கள் உள்ளனர்.

நன்றி : உணர்வு 10:32
குறிப்பு: கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!! என்ற கட்டுரையின் தொடர்ச்சியை ஆக்டோபஸ் காலில் சிக்கிய கருணாநிதி! என்ற தலைப்பில் தமிழ் முஸ்லிம் வலைமனையில் பார்வையிடவும்.
நன்றியுடன்,
அறிவழகன்

1 comment:

Anonymous said...

KALAINGARA?!!!!!!