''இட ஒதுக்கீட்டிற்கு ஆணையம் தான் வேண்டும்!''
தமுமுக செயற்குழு தீர்மானம்
ஒரு மாநில அரசு ஒரு சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமானால் நேரடியாக அவ்வாறு செய்ய முடியாது. அதை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை அமைத்து அந்த ஆணையம் தரும் பரிந்துரையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் தான் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன் ஆணையத்தை அமைக்குமாறு கடந்த பத்து ஆண்டுகளாக கோரி வருகிறோம். நம்முடைய முன்னாள் சகாக்களும் அப்படித்தான் கோரி வந்தனர்.
ஆனால் அவர்களே எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதா அரசு ஆணையம் அமைத்து விட்டது. அதற்கு முன்பே கருணாநிதியிடம் பேரத்தைப் பேசி முடித்து விட்டார்கள் என்பதால் அந்தர் பல்டி அடித்து தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.
அதாவது ''நேரடியாக இட ஒதுக்கீடு அளித்து ஆணைதான் பிறப்பிக்க வேண்டும். கமிஷன் அமைப்பது கண்துடைப்பு என்றும்இ நாங்கள் ஒருகாலத்திலும் கமிஷன் அமைக்கு மாறு கோரவே இல்லை என்றும் கூறி ஜெயலலிதாவை ஆதரிக்க முடியாது'' என்று மக்களிடம் கூற ஆரம்பித்தார்கள்.
இட ஒதுக்கீடு அளிக்க ஜெயலலிதா விரும்பினால் நேரடியாக சட்டம் இயற்றி இருக்க வேண்டும்! கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கண்மூடித்தனமாக கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டிற்கான கமிஷனைக் கண்டு அவர்கள் அரண்டுபோனதற்கு காரணம்இ அவர்கள் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாகவே மாறிவிட்டதால்இ எங்கே செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சினர். நம்மீது இவர்க ளுக்கு இருந்த ஆற்றாமை - இறைவன் உதவியால் நம்முடைய தீவிர முயற்சிக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி அவர்களுக்கு வேப்பிலையாக கசக்கச் செய்கிறது.
''இட ஒதுக்கீட்டிற்கு சட்டமியற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கே நம்முடைய தலைவரை(?) வானளாவப் புகழ்ந்துத் தள்ளினோம். ஆனால் இவர்கள் கமிஷன் அமைத்து அரசாணையையே வாங்கிக் கொண்டு வந்து சமுதாய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று விட்டார்களே?'' இதற்கு எப்படி வழி பண்ணுவது என்று யோசித்த கோயபல்ஸின் குருநாதர்களின் திடீர் கண்டுபிடிப்புதான்'' கமிஷன் அமைப்பது கண்துடைப்பு; வேஸ்ட் பேப்பர்; நேரடி யாக இட ஒதுக்கீடு வழங்க முடியும்'' என்ற பொறாமைப் பிரச்சாரம்.
''கேடு வரும் பின்னே; மதி கெட்டு விடும் முன்னே'' என்ற பழமொழிக்கேற்ப அவர்கள் மதிகெட்டு விட்டார்கள்; மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு கேவலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
''கேடு வரும் பின்னே; மதி கெட்டு விடும் முன்னே'' என்ற பழமொழிக்கேற்ப அவர்கள் மதிகெட்டு விட்டார்கள்; மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு கேவலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
''ஜெயலலிதாவை நம்பலமா?'' என்று தலைப்பிட்டுஇ அவர்களின் ஆதாரப்பூர்வ பத்திரிகையில் (மார்ச் 10-16இ 2006) ''தமுமுக என்றுமே ஆணையம் கோரியதில்லை!'' என்ற உள் தலைப்பில்இ ''2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் தமுமுக தலைவரும்இ பொதுச் செயலாளரும்இ அவரை சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள்.
(மார்ச் 10- 16இ 2006) மக்கள் உரிமை - கட்டுரை
அப்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான குறிப்புகளைக் கொடுத்தார்கள். அப்போதும் கூட ஜெயலலிதாவிடம்இ ''புதிதாக ஆணையம் எதுவும் அமைக்கத் தேவையில்லை'' என்று தான் விவரித்தார்கள்.
இதில் வேடிக்கை என்னவெனில்இ இன்று ஒரு பேப்பரைக் காட்டி கூத்தாடும் ஜைனுல் ஆபிதீன்இ அன்று நம்மோடு இருந்தபோது முஸ்லிம்களுக்கு தேவை இட ஒதுக்கீடு தான். ஆணையம் எல்லாம் போட்டு ஏமாற்றக் கூடாது என்றே கூறிவந்தார். இன்று அவர்களுக்கு அதிமுகவில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது சொல்லி தொண்டர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஏமாற்றி வருகிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார்கள்.
மேலே கடைசி பாராவில் ''எதையாவது சொல்லி தொண்டர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஏமாற்றி வருகிறார்கள்'' என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். இந்த வாசகம் யாருக்குப் பொருந்துகிறது என்பதற்கும்இ அவர்கள் எத்தகைய பொய்யர்கள்? எப்படிப்பட்ட புரட்டர்கள்? இவர்கள் எப்படி எல்லாம் சமுதாயத்தையும்இ தங்கள் தொண்டர்களையும் ஏமாற்றி வருகிறார்கள்? என்பதற்கு வெளியிலிருந்து நாம் ஆதாரம் தரவில்லை. அவர்களின் ஆதாரப்பூர்வ ஏட்டிலிருந்தே தருகிறோம். ஆம். அக்டோபர்-29 நவம்பர்-04இ 2004 மக்கள் உரிமையில் வெளியான அவர்களின் மாநில செயற்குழு தீர்மானத்திலிருந்தே தருகிறோம்.
2004 தமுமுக மாநில செயற்குழு தீர்மானம்
2004ம் ஆண்டு அக்டோபர் 23இ 24 ஆகிய இரு தினங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள மேலப்பத்தை கிராமத்தில் அவர்களின் ஞான சமுத்திரம்(?)இ சமுதாயத் தலைவர்(?)இ பேராசிரியர்(?) ஜவாஹிருல்லாஹ் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்த மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 5வது தீர்மானம்இ ''தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்ற தலைப்பில்இ ''ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கூடாது என்று குறிப்பிடவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம் என்றும்இ ஆனால் அதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக் கப்பட்டு அதன் பரிந்துரையை பெற வேண்டுமெனவும் தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த ஆணையம் குறுகிய காலத் திற்குள் தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்து தனது பரிந்துரையை சமர்பிக்க ஆவண செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க உடனே ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று சொல்கிறது.
2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும்இ அவரைச் சந்தித்த தமுமுக தலைவரும்இ பொதுச் செயலாளரும் ''புதிதாக ஆணையம் எதுவும் அமைக்கத் தேவையில்லை என்று தான் விவரித்தார்கள்'' என்று அண்டப்புளுகை 2006இ மார்ச் 10லி26 இதழில் எழுதுகிறார்கள். ஆனால் 2004 அக்டோபரில் நடந்த தங்களின் செயற்குழுவில் ''தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும்''என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் .
இதில் எது உண்மை?
2001-ல் ஆணையம் தேவையில்லையாம்!
2004-ல் ஆணையம் தேவையாம்!
2001-ல் ஆணையம் தேவையில்லையாம்!
2004-ல் ஆணையம் தேவையாம்!
யார் பொய்யர்கள்இ புரட்டர்கள்இ சந்தர்ப்பவாதிகள் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சான்று வேண்டுமா?
செயற்குழுவில் கலந்து கொண்ட தமுமுகவின் உறுப்பினர்களே! உங்கள் அனைவரையும் முட்டாள்களாக்கிஇ உங்களைப் பொய்யர்களாக்கி கருணாநிதி யிடம் வந்த விலைக்கு தள்ளிவிட்ட இவர்களை இனியும் நம்பப் போகிறீர்களா?
''இன்று ஒரு பேப்பரைக் காட்டி கூத்தாடும் ஜைனுல் ஆபிதீன் அன்று நம்மோடு இருந்தபோது முஸ்லிம்களுக்குத் தேவை இட ஒதுக்கீடுதான். ஆணையம் எல்லாம் போட்டு ஏமாற்றக் கூடாது என்றே கூறி வந்தார்'' என்று கொஞ்சங்கூட நா கூசாமல் பச்சைப் பொய்யை எழுதி இருக்கிறார்கள்.
''ஆணையம் தான் முதலில் அமைக்கப்பட வேண்டும்'' என்பது தான் அனைவரின் கருத்தாக இருந்தது என்பதற்கு அவர்களின் செயற்குழு தீர்மானமே ஆதாரம்.
''ஆணையம் தான் முதலில் அமைக்கப்பட வேண்டும்'' என்பது தான் அனைவரின் கருத்தாக இருந்தது என்பதற்கு அவர்களின் செயற்குழு தீர்மானமே ஆதாரம்.
திமுகவின் சிறுபான்மை பிரிவாக இவர்கள் மாறி விட்டார்கள். இவர்கள் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.
''சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; அசத்தியம் அழிந்தே போகும்!'' என்ற இறைவாக்கு பொய்யாகாது.
2 comments:
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? சொல்லுங்கள்!
முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் போராட முஸ்லிம்கள் தங்களிடையே உள்ள ஷியா, சுன்னி வேறுபாட்டை மறந்து போராட வேண்டியுள்ளது. நபிவழியை நிலை நாட்ட மத்ஹப் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியுள்ளது. இந்நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஒன்று த.மு.மு.கவாக இருக்க வேண்டும், இல்லை தவ்ஹீத் ஜமாஅத்தாக இருக்க வேண்டும் என சில அறிவீனர்கள் நினைக்கிறார்கள். த.மு.மு.கவை விமர்சிக்கும் அனைவரும் தவ்ஹீத ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அனைவரும் த.மு.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள். என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 10 விழுக்காடு பேரே த.மு.மு.க, தவ்ஹீத் ஜமாஅத், பல்வேறு லீக் கட்சிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, மனித நீதிப் பாசறை, ஜாக் போன்ற அனத்து முஸ்லிம் அமைப்புகளிலும் இருப்பர். 10 விழுக்காடு பேர் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற பல்வேறு கட்சிகளில் இருப்பர். 80 விழுக்காடு பேர் எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்கள். இந்த முஸ்லிம்கள் முஸ்லிம் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை சகோதர வாஞ்சையுடன் விமர்சிக்கக் கூடாதா?
த.மு.மு.கவுக்கு ஒரு பகிரங்கக் கேள்வி
ஆணையம் அமைப்பதை த.மு.மு.க ஒருபோதும் கோரவில்லை என கூறிவந்தது உண்மையில்லை என்பதையும், ஆணையம் அமைக்கக் கோரி த.மு.மு.க செயற்குழுவில் தீர்மாணம் நிறைவேற்றியதையும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, த.மு.மு.கவின் அதிர்காரப் பூர்வ வார இதழான 'மக்கள் உரிமை' யில் வெளியான செய்தியுடன் நிரூபித்துள்ளது. த.மு.மு.கவின் பதில் என்ன?
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரு பகிரங்க கேள்வி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் த.மு.மு.கவில் இருந்து விலகவில்லை. அப்போது, த.மு.மு.க தி.மு.க கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாத இதழான 'ஏகத்துவம்' இதழில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விமர்சித்து எழுதினீர்கள். இப்போது நீங்கள் அ.இ.அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதின் மாயம் என்ன?
அருளடியான்
http://tamilmuslim.blogspot.com/2006/04/blog-post_114528418628211105.html
அன்புள்ள அருளடியானுக்கு,
தமுமுக துவங்கப்பட்டதிலிருந்து ஓங்கி உரத்து ஒலித்து வரும் முழக்கம் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்பதாகும்.
இதனை ஏளனம் செய்தவர்கள், ஏகடியம் பேசியவர்கள் அனைவரும் இன்று ஏதாவது ஒரு வகையில் தனி இட ஒதுக்கீடு குறித்து பேசுவதிலிருந்து தமுமுகவின் பணியின் தூய்மையை அல்லாஹ் அனைவருக்கும் உணர்த்தியுள்ளான். விரைவில் இக்கோரிக்கையை அவனே வெற்றியடையவும் செய்வான் இன்ஷா அல்லாஹ்.
தனி இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் தேவையில்லை என இப்பொழுது கூறும் தமுமுக, 2004ல் களக்காட்டில் நடந்த செயற்குழுவில் ஆணையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?
இப்படி ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது உண்மைதான். இச்செயற்குழு நடைபெற்ற தினத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன் ஆந்திரா அரசு பிறப்பித்த உத்தரவை, ஆந்திரா உயர்நீதி மன்றம் ரத்து செய்த நிலையில் தீர்ப்பின் விபரம் முழுவதுமாக வெளியாகாத நிலையில் அப்படி ஒரு தீர்மானம் போடப்பட்டது உண்மை.
ஆனால், பிறகு தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்ததன் பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டோராக இனம் காணப்படாத நிலையில் உள்ளதால் தான், அந்நிலை என தெளிவான பின் தமிழகத்திற்கு ஆணையம் அவசியம் இல்லை, என்ற நிலையை தமுமுக ஊறுதிப்படுத்திக் கொண்டது.
தமுமுகவை சாராதவர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த விளக்கம்.
அன்புடன்
இறையடியான் 18.04.2006
Post a Comment