Sunday, April 16, 2006

முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அமராதது உண்மையே!

ஜித்தாவில் நடந்த த.த.ஜ நிகழ்ச்சியில் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் அமராதது உண்மையே!
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் பாக்கர் அவர்களின் சவுதி வருகையை முன்னிட்டு சவுதி அரேபியாவிலுள்ள ஜித்தா, சவுதி தலைநார் ரியாத், புரைதா, போன்ற பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் சிறப்பு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரைதாவில் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தில் அர்ப்பணித்திருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர்களால் அழகிய முறையில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. சில இடங்களில் அரசின் அனுமதி இல்லாததால் சகோதரர் பாக்கர் அவர்கள் பேச இயலாமல் போனது. இருப்பினும் சவுதி அரேபியாவில் பணிபுரியும் தமிழ் மக்களை நேரில் சந்திக்க முயற்சித்தபோதும், திரளான மக்கள் கூடிக்கொண்டே இருந்ததாலும், ரியாத்தில் அஜீசியா, அல்-ஜமய்யா, மற்றும் பத்ஹா அருகாமையிலுள்ள சில இடங்களில் மக்கள் அமர்வதற்கே சிரமப்பட்ட நிலையில் இடங்களை அடைத்துக் கொண்டு சகோதரர் பாக்கர் அவர்களின் சொற்பொழிவைக் கேட்டது காண்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இன்னும் பல இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளார் பாக்கர் அவர்களை மக்கள் எதிர்பார்த்த வண்ணமிருப்பதால் இன்னும் இதுபோல் பல இடங்களில் கூட்டங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் சவுதியிலுள்ள தமிழ் இஸ்லாமிய மக்கள் உள்ளனர்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடந்த வாரம் ஜித்தாவில் சகோதரர் பாக்கர் அவர்களின் 1,500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நடத்தப்பட்ட கூட்டத்தை, தமுமுகவும், விடியல் வெள்ளியும் சேர்ந்து சகோதர் பாக்கர் அவர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், ஃபித்னாக்களில் தந்தை இளையவனின் தலைமையில் தமுமுக குழந்தைகள் ஃபித்னாக்கள் செய்வதை இண்டர்நெட்டை நற்செயல்களுக்கு பயன்படுத்தி வரும் மக்களை முகம் சுளிக்க செய்து வருவதை அறிவீர்கள்.

இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தில் பணிபுரிந்து வரும் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ததஜவுடன் பல கருத்துவேறுபாடுகளை அன்னார் கொண்டிருந்தாலும், ஜித்தாவில் நடந்த கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக வந்திருந்தார்;. அவர் மேடைக்கு வந்து பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கருத்து வேறுபாட்டைக் காட்டுவதற்காக போஸ் கொடுத்து விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை. உம்ரா சென்று மொட்டைத்தலையுடன் காட்சியளித்த சகோதரர் பாக்கர் அவர்களை பித்னாக்களை பரப்பிவரும் இளையவன் அண்ட் கோ, அவர் தலைமுடி ஸ்டைலுக்காக அவரை ததஜவின்; சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார்கள் என்ற கேவலமான பொய்யையும் அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அமராதது உண்மையே! கடந்த மாதங்களில் இளையவன் அண்ட் கோவின் அமைப்பான தமுமுக, முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ரோபார்ட்டாக நடத்தி வந்தாலும், நான் அவர்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக, வந்தார் அர்ந்தார் கேமாரா மின்னியது சென்றார். என்று எழுதிவிட்டேன். அவர் அமராதது அவர் இன்னும் கருத்து வேறுபாட்டில்தான் உள்ளார் என்ற காரணத்தை காட்டுவதாகவோ அல்லது மேடையில் தோன்றிய சகோதரர் பாக்கர் அவர்களை அல்லாஹ் அவரது கண்களுக்கு உண்மையில் புலிபோல் காட்டியிருக்கலாம் என்ற காரணமாகவோ இருக்கலாம். ஆனால் எடுத்த ஃபோட்டோவை வைத்து தமுமுக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்ற வடிகட்டிய பொய்யை,(அதாவது தஞ்சை மாநாட்டு படங்களில் இருப்பவார்கள் இன்னும் தமுமுவினர் என்று படம் காட்டுவது போல) போட்டோ மூலம் பரப்பிவிடலாம் என்ற குறுக்கு புத்திக்கு நாம் எழுதிய வரிகள் செருப்பால் அடித்து விட்டன என்பதுதான் உண்மை. ஆனால் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் எதிர்த்து வருவதால்; நாம் அவரை எதிரியாக ஒரு போதும் எண்ணவில்லை காலச்சூழ்நிலைக்காக தம்மை மாற்றிக் கொள்ள முயற்சித்த குற்றத்திற்காக ஒருபோதும் எதிரியாக எண்ணமாட்டோம்.

சமுதாயப் பணியில் தங்களை அர்ப்பணித்து வரும் மார்க்க அறிஞர்களையும், சமுதாயப்பணியே தம் கடமையாகக் கொண்ட சகோதரர் பாக்கர் அவர்களையும், நாக்கூசாமால் விமர்சித்த, இளையவன் அண்ட் கோவும், இளையவனின் பித்னா பரப்பும் கள்ளவெப்சைட்டை பயன்படுத்தி, இஸ்லாமிய வழியை விட்டு குறுக்கு வழியைப் பயன்படுத்தும் மேலப்பாளைய மக்களால் செருப்படிபட்ட டிசம்பர் திருடனையும், கண்டிக்க வக்கில்லாமல் கூத்தடிக்கும் தமுமுகவில் இருந்து கொண்டு, நாம் என்னவோ, ஹைதர்அலி சைட் அடித்தார், ஜவாஹிருல்லரஹ் லாட்ஜில் விபச்சாரம் செய்தார் என்று எழுதியதைப் போல் தீன் முஹம்மதை ததஜ கண்டிக்காதா? ஆஹா....இது எந்தவகையான அரிப்போ?????

வந்தார் அமர்ந்தார் சென்றார் என்பதற்காக ததஜ கண்டிக்காதா? என ஃபித்னா பரப்பும் கெடியவர்களுக்கு அரிப்பெடுப்பதில் என்ன நியாயமோ அவர்களின் தலைமைக்கே வெளிச்சம்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் பல இடங்களில் சகோதரர் பாக்கர் அவர்களின் நேர்முக சந்திப்பும், கூட்டங்களும் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு இன்னும் பல பித்னாக்களை நம்மை எதிரிகளாகக் காணும் தமுமுகவின் இளையவன் அண்ட் கோவினால் மேலும் எதிர்பார்க்கலாம்.

என்றென்றும் அன்புடன்
தீன் முஹம்மது.