பனாஜி: கோவாவில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
கோவாவில் பனாஜி அருகே மார்கோ நகரில் கிரேஸ் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிமருந்து பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த மெல்குண்டா பாட்டீல் பலியானார். யோகேஷ் நாய்க் என்பவர் படுகாயம் அடைந்தார். வெடிமருந்து பொருள் வெடித்ததில் மூன்று வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் இந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்கள், என போலீசார் தெரிவிக்கின்றனர். ஸ்கூட்டரின் உரிமையாளர் நிஷாத் பாக்லே என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 20 கிலோ மீட்டர் தூரத்தில் மின் ஒயர்கள் சுற்றப்பட்ட பையையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மார்கோ பகுதி, கோவா முதல்வர் திகம்பர் காமத்தின் தொகுதி என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :
1) பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள் - IIPONLINE.ORG
2) மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து பயங்கரவாதிகளும்
3) மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்

1 comment:
இவங்களுக்கு 'உன்னைப் போல் ஒருவன்' பாணியில் நாம் தீர்ப்பு அளிக்க வேண்டும். அதைத் தான் உலக நாயகன் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைப் புரியாமல் முஸ்லிம்கள் அவரைப் போய் குறை சொல்கிறார்கள்
Post a Comment