Showing posts with label முஹம்மது முபாரக் ஆலிம் மன்பஈ. Show all posts
Showing posts with label முஹம்மது முபாரக் ஆலிம் மன்பஈ. Show all posts

Thursday, January 03, 2008

மதினா நகரில் தமிழக பிரமுகர் மரணம்

மதினா நகரில் தமிழக பிரமுகர் மரணம்

இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் மெளலவி முஹம்மது முபாரக் ஆலிம் மன்பஈ ( வயது 67 ) சவுதி அரேபியாவின் மதினா நகரில் வியாழக்கிழமை ( 03 ஜனவரி 2008 ) நண்பகல் மரணமடைந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ).

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு மதினா நகருக்கு ஜியாரத் செய்வதற்காக முபாரக் ஆலிம் சென்றிருந்தார்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த சையது முஹம்மது பாபா அவர்களின் மகனாவார்.

அன்னாரது ஜனாஸா வியாழக்கிழமை இரவு மதினா நகரில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறைவுக்கு இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். செளக்கத் அலி, அமீரக பிரமுகர்கள் எம். அப்துல் ரஹ்மான், ஏ. லியாக்கத் அலி, மெளலவி ஜஹாங்கீர் அரூஸி,ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் துணைத்தலைவர் எஸ். சம்சுதீன், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம். என். ஏ. )