Showing posts with label முகவையில் தமுமுக தர்பியா முகாம். Show all posts
Showing posts with label முகவையில் தமுமுக தர்பியா முகாம். Show all posts
Tuesday, March 27, 2007
முகவையில் தமுமுக தர்பியா முகாம்
முகவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழகத்தின் சார்பாக கடந்த 25.03.2007 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகவை சின்னக்கடையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றி கிளை நிர்வாகிகளுக்கு ''தர்பியா'' எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மௌலவி அப்துல் காதிர் நூரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் துனைச் செயளாலர் கோவை சாதிக் மற்றும் மாநிலப் பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்புக்களை நடத்தினர்.
மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட சுமார் 150 சகோதரர்கள் இந்நிகழ்வில் நலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டு பெரும்பாலான சகோதரர்கள் மாவட்டும் முழுவதுமுமாக இம்மாதிரி முகாம்களை அடிக்கடி நடத்திட வேண்டும் என்று கருத்து தெறிவித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமுமுக முகவை மத்திய மாவட்ட தலைவர் சகோ. சலிமுல்லா கான் அவர்கள் திறம்பட செய்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)

