Showing posts with label புதிய நிலா. Show all posts
Showing posts with label புதிய நிலா. Show all posts

Saturday, August 11, 2007

புதிய நிலா வெளியீட்டு விழா



சிங்கப்பூரில் புதிய நிலா பத்தாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீடு

சிங்கப்பூரில் புதிய நிலா மாத இதழ் பத்தாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 19 ஆகஸ்ட் 2007 »¡ யிற்றுக்கிழமை ( Sunday ) எண் 3 மஸ்கட் தெருவில் ( அரபு தெரு அருகில் ) அமையப்பெற்றுள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும்.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச்செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக் , மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார் .

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன் , பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளின் நெறியாளர்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜஹாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

தமிழக முதல்வர் தனது வாழ்த்துரையில் : இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.



இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி :

புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

செய்தி தொகுப்பு : முதுவை இதாயத்