Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Tuesday, April 07, 2009

இனமானம் இல்லாத தமிழனுக்கு சீக்கியன் கொடுத்த சன்மானம்

" இனமானம் இல்லாத தமிழனுக்கு சீக்கியன் கொடுத்த சன்மானம் " "சிதம்பரத்திற்கு விழுந்த செருப்படி காங்கரஸ்க்கு இனிமே தரும அடி " - தோழர் கார்த்திக்




டெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.

ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம்.

ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.

மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார்.

Sunday, October 19, 2008

சிங்கள பேரினவாதிகளின் அரச பயங்கரவாதத்தை முறியடிக்க போராடுவோம்

இது ஒரு மீழ் பதிவு. தமிழ் இனப்படுகொலைகளை நடத்தி வரும் சிங்கள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாரி வழங்கும் இந்திய அரசின் மானங்கெட்ட வெளியுரவுக் கொள்கையை வண்மையாக கண்டிக்கின்றேன்!! - முகவைத்தமிழன்
சிங்கள தீவிரவாதிகளின் அரச பயங்கரவாதம்
பாகிஸ்தான் வழங்கும் ஆயுதங்களால் கொல்லப்படும் எம் சிசுக்கள்
சிங்கள இனவெறியர்கள் நடத்திய படுகொலைகளை பாரீர் !!
கொல்லப்பட்ட தமிழ் இன சிசுக்கள் !!
இந்திய அரசே சிங்கள தீவிரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்து !!





பரந்தன் - முல்லைத்தீவு சாலையில் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் வானூர்திகள் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் 59 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 163பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 42 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறியமுடிகிறது. செஞ்சோலை வளாகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த முதல் - உதவி பயிற்சி நெறியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் இவர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள் நடத்தி கொலை வெறித்தாக்குதலில் 50 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் அகப்பட்ட அனைவரும் 13 வயது 14 வயது 15 வயதுச் சிறுமிகள் என அறியமுடிகிறது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி 59பேர் இறந்ததாகவும் 200பேர்வரை காயமடைந்ததாகவும் அறியமுடிந்தது எனினும் சில பிரபலமான ஊடகங்கள் இந்த உண்மை தொகையினை குறைத்து முரன்பாடான தகவல்களை வெளியிடுவதாக அறியமுடிகிறது. தற்போது சார்வதேச தொலைக்காட்சி ரி.ரி.என்கு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தபடி 163 படுகாயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆகவே இறப்புகளும் காயமடைந்த சிறுமிகளின் எண்னிக்கையும் அதிகரிக்கும் என்று அறியமுடிகிறது.

நன்றி : நிதர்சனம்




சிதறடிக்கப்பட்ட எம் இன மொட்டுக்கள்



தமிழக முதல்வர் அவர்களே!!

சிதறடிக்கப்பட்டு கிடக்கும் உம் இனப்பிஞ்சுகளின் குருதி உம் மனதை உருக்கவில்லையா ?

உத்தரவிடுங்கள் ஐயா உம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு !!

இவ்வினப்படுகொலையை வன்மையாக கண்டிக்க சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிடுங்களய்யா!!

இச்சிங்கள பேரினவாதிகளின் தீவிரவாதத்திற்கு துனை நிற்கும் மத்திய அரசின் அனைத்து போக்குகளையும் வன்மையாக கண்டியுங்களய்யா!!

இதை நீர் செய்யாவிட்டால் ...வேறு யாரும் செய்வதற்கில்லை !!

தமிழினத் தலைவனான நீர் ஆட்சியிலிருக்கும் போது நம் இனம் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றதய்யா !!

இதை நீர் கேட்காவிட்டால், யார் கேட்பது??

தமிழினமே பொங்கி எழு ...சிங்கள பேரினவாதிகளின் அரச பயங்கரவாதத்தை முறியடிக்க போராடு!!



நன்றி
முகவைத்தமிழன்

யாழ் மட்டக்களப்பு மூதூர் வெருகல்