Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, September 18, 2012

அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் - சென்னை ஸ்தம்பித்தது



சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.

Thursday, January 22, 2009

அமெரிக்க புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!

அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவி ஏற்றுள்ளார்.முதல் கறுப்பின அதிபர் என்பதால் உலகமே வியக்கிறது.இனி வரும் காலங்களில் அவருடைய செயற்பாடுகளை வைத்தே அவரின் ஆட்சி பற்றி கணிக்கமுடியும் என்ற போதிலும்,அவரின் சில நேர்மையான வாதங்கள்,எல்லா மத மக்களின்,எல்லா நாடுகளின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்பட உறுதி பூண்டுள்ளமை விளங்குகிறது.இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாட்டின் அதிபர் ஆவதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும்,ஆச்சரியமும்,அதிசயமும் கலந்து நோக்கப்படுகிறது.அதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அதிபர் ஆனபோதும் இவ்வாறே பேசப்பட்டது.இவைகள் நடப்பது இந்த 21ம் நூற்றாண்டில் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால்,சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,கறுப்பின மக்களை மிக மிக கேவலமாகவும்,அடிமைகளாகவும் நடத்தி வந்த அந்த தருணத்தில்தான்,பிலால் என்ற ஒரு கருப்பரை,அடிமையாக இருந்தவரை,அடிமை தளையிலிருந்து மீட்டு,இஸ்லாத்தின் மிக உயர்ந்த பதவியாக விளங்கும்(மு அத்தின்)தொழுகைக்கு அழைக்கும் ஒரு மிக உயர்ந்த பணியை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அளித்தார்கள்.காட்டு மிராண்டிகள் நிறைந்த அக்காலத்தில் இப்படியானதொரு மாபெரும் புரட்சி நடத்திக்காட்டினார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.இந்த வகையிலும் அது ஒபாமாவானாலும்,நெல்சன் மண்டேலாவானாலும் சரி,நபிகள் நாயகம் அவர்களே முன்மாதிரி.அந்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் இறுதி உரையாக ஆற்றிய அவ்வுரை எல்லா நாட்டு தலைவர்கள்,எல்லா தரப்பு மக்கள் அனைவருக்கும்,எல்லா பெண்கள் சமுதாயத்துக்கும் ஒரு சிறந்த,சம உரிமை பெற்றுத்தரும் அரு மருந்து என்பதில் ஐயமில்லை.உலகம் போற்றும் அவ்வுரை இதோ.................. இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.இறைத்தூதர் முஹம்மது அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189) தொடக்க துதி மொழிகள்நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)பிரிவின் முன்னறிவிப்புஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)தலமைக்குக் கீழ்ப்படிவீர்!ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)பிறர் உடமையைப் பேணுவீர்!ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.அராஜகம் செய்யாதீர்கள்!அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)பணியாளர்களைப் பேணுவீர்!ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)மறுமைக்கு அஞ்சுவீர்!ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)அநீதம் அழிப்பீர்!அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)முறைதவறி நடக்காதீர்!அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) உரிமைகளை மீறாதீர்!ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565) ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது) இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)பெண்களை மதிப்பீர்!கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)இரண்டைப் பின்பற்றுவீர்!மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)எச்சரிக்கையாக இருப்பீர்!மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செயவதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)சகோதரம் பேணுவீர்!ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, ஃபிக்ஹுஸ் ஸீரா 456)சொர்க்கம் செல்ல இதுதான் வழி!ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)குற்றவாளியே தண்டிக்கபடுவார்!ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)இஸ்லாம் முழுமையாகி விட்டது!ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
http://peacetrain1.blogspot.com/

Saturday, June 07, 2008

இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE





நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ 'கோல்'களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த 'கோல்' மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.

இந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.

கடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.



ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.
மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.



இந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது? இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார்? அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.

அண்மையில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.





1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.




மேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.



இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.


அமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம்மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.

நன்றி : ஜீனியர் விகடன்

http://www.vikatan.com/jv/2008/jun/01062008/jv0503.asp

Received by Mail

Sunday, April 27, 2008

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.

இரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா..? சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்..? அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.

உலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்..? மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்..? இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..?

போர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.

ஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..

தகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்