Wednesday, August 08, 2012

சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக நிதிவேண்டி.....

ஏக இறையவனின் அளப்பரிய கருணையினால்...


உண்மையுடன்...உரிமையுடன்...உணர்வுடன்...அழைக்கிறது...
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்


ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக முஸ்லீம்கள ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என்று விட்டு விடுவது நல்ல முஸ்லீம்களின் பண்பு அல்ல. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி இந்த அநீதிக்கு எதிரான யுத்தத்தில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் மாநிலமெங்கும் மாநாடுகளையும் சட்ட போர்களையும் நடத்தி வருகின்றது.

அண்ணலார் பெருமானார் கூறியிருக்கின்றார்கள்:

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார், அவன் அடுத்தவனை (முஸ்லீமை) அமுக்கவோ அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லீமுடைய தேவையை தருபவனுக்கு அல்லாஹு உதவி செய்வான். சகோதர முஸ்லீமுடைய ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹு மறுமைநாளில் அகற்றுவான். முஸ்லீம் சகோதரருடைய குறையை மறைப்பவனுக்கு மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைத்து அருள் புரிவான் (முஸ்லிம்)

மேலும் அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்குர்ஆன்(76:8)

அநீதி சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த ஆறுமாதகாலமாக பல்வேறு சிரமங்கள் சிக்கல்கள் இவற்றுக்கு மத்தியில்... இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முன்னெடுத்து நடத்திய தொடர் பொதுக்கூட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் அரசின் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமல்லாது மாபெரும் மக்கள் எழுச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது...

இதோ நமது அறப்போராட்டம் இறுதிகட்டத்தை நோக்கி... எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் நாள் சென்னை மண்ணடியில்... "மாபெரும் அரசியல் சிறைவாசிகள் மீட்ப்பு மாநாடு"

ஆயத்தமாகுங்கள்... அணிதிரள... கருனைக்கரங்களை நீட்டுங்கள்... கொடுங்சிறையின் கதவுகள் திறந்திட...

இன்னும் அநீதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்திற்கு உதவுவது நம் மீது கடமையாகும். ஆகவே, நன்மையை கொள்ளையடிக்க வேண்டிய ரமலான் மாதத்தில் உங்களின் நிதி உதவிகளை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் நடத்தும் மாநாட்டுக்காக வாரி வழங்குவீர். அல்லாஹ்வின் தூதர் இம்மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றை விட அதிகமாக தானதர்மங்கள் செய்வார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இச்சுவனத்தைப் பின்பற்றி சிறை பட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமை ஈடேற்றம் என்ற நற்பேற்றினை அடைவீராக!.

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி  அரசியல் சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்கிட


அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 
9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

No comments: