Tuesday, March 02, 2010

விக்கிப்பீடியாவில் ஹிபாயத்துல்லா

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறந்த முறையில் தொடர்ந்து பங்களித்து வருவோரை அறிமுகப்படுத்தும் வகையில் பங்களிப்பாளர் அறிமுகம் என்ற தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியா முதற் பக்கத்தில் ஹிபாயத்துல்லாவைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது.
ஆங்கில விக்கிப்பீடியாவில் இன்று 30 லட்சம் கட்டுரைகள் உள்ளன. சில மொழிகளில் லட்சத்துக்கும் மேலான கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகள் உள்ளன. விக்கிபீடியா எந்த தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. "விக்கிமீடியா" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக்கமைவாக) நன்கொடைகளுக்கான வரிவிலக்குச் சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ உள்ளடக்கப்பட முடியாது.

அனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

No comments: