Friday, December 04, 2009

அறிஞர் ஜைனுல்ஆபிதீன் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அறிஞர் ஜைனுல்ஆபிதீன் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்!

அறிஞர் பீ.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் எடுத்து வைக்கும் மார்க்க முரணான கருத்துக்களை அவ்விரண்டின் வழி நடக்கும் நல்லறிஞர்கள் சுட்டிக் காட்டி தெளிவுபடுத்துகின்றனர்.ஆனால் அவர்களெல்லாம் காசுக்காகவும் காழ்ப்புணர்ச்சியாலும் அவ்வாறு செய்வதாக கூறி திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்.அந்த நல்லறிஞர்களோடு ஒன்றுபட்டிருந்த இவர்தான் தன் மனோ இச்சைப்படி புதிய கருத்துக்களையும் பழைய வழிகேடர்களின் கூற்றுக்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை சிந்தித்தாலே இவர் தடம் புரண்டவர் என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

இது மட்டுமின்றி இவர் தன் கருத்தை திணிப்பதற்காக ஹதீஸிலும் கூட இடைச் செறுகள் செய்பவர் என்பதை முன்பு தெளிவு படுத்தியிருந்தேன்.அதற்கு பதில் எழுதுவதாக கூறி ஏதேதோ எழுதி சமாளித்துள்ளார்.அதோடு இத்தகைய தவறை விவாதத்தின் போது சுட்டிக் காட்டிய முஜீபுர்ரஹ்மானையும் என்னையும் விளங்கத் தெரியாதவர்கள்இசிந்தனை குறைந்தவர்கள் என்று பரிகாசம் செய்துள்ளார்.அவரது மகா தவறு வெளிப்படுத்தப்பட்டது அவருக்கு நன்றாக தெரிந்தாலும் ஆடு மாடுகள் மாதிரி என்று அவர் துணிச்சலாக சொல்லும் அவரது கட்சிக் காரர்கள்இ மாற்றுக் கருத்துடையவர்களை அலட்சியமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதியிருக்கிறார்.

இவர் தனது தர்ஜமாவில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற பகுதியில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதிச் செல்லும் ஹதீஸில்,அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி உள்ளார். இது அவர் பின்னால் சொல்லயிருக்கிற, சூராக்களின் வரிசை நபியால் காட்டித்தரப்படவில்லை என்ற கருத்தை வாசகர் மனதில் முன்கூட்டியே பதிய வைப்பதற்கான சதி.

இதனை விவாதத்தில் முஜீபுர்ரஹ்மான் உமரீ எடுத்து வைத்த போது தன் தவறை மறுப்பதற்காக பேசி சமாளித்தார்.விவாதத்தில் தானே வென்றதாக பீ.ஜைனு பரையடித்துக் கொண்ட போது நாம் இந்த ஹதீஸ் பற்றி நடந்த வாதத்தை முன் வைத்தும் அவரது தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தோம்.இதற்கும் சமாளிப்புகளை எழுதி அனைவரும் எழிதாக புரியக்கூடிய ஹதீஸுக்கு சம்பந்தமில்லாத உதாரணத்தை எழுதி தப்பிக்கப் பார்த்திருக்கிறார்.

அவர் இடைச்செறுகல் செய்த அந்த ஹதீஸ்: இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப் பட்ட வசனங்களை... இவ்வாறு தனது தர்ஜமாவின் முந்தைய பதிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.(பார்க்க ஏழாம் பதிப்பு பக்கம் 35-36)

ஆனால் முஜீபுர்ரஹ்மானுடனான விவாதத்திற்குப் பின் வெளியிட்ட எட்டாம் பதிப்பில்: இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை... என்று எழுதியுள்ளார்.(8ம் பதிப்பு பக்கம் 41)

அந்த வருடத்தில் என்ற வாசகத்தை நீக்கியிருப்பது அவரது தவறு வெளிப்பட்டதால் செய்த மாற்றம் என்பதைத் தெளிவு படுத்தினோம். இதற்கும் சமாளிக்க வந்த பீ.ஜைனுலாபிதீன் அந்த வருடத்தில் என்ற வாசகத்தை வைத்தாலும் எடுத்தாலும் ஒரே கருத்துத்தான் வரும் என்கிறார்.

நிச்சயமாக ஒரே கருத்து வராது மாறுபட்ட கருத்துத்தான் வரும் என்பதை எல்லோருமே தெரிந்து கொள்ளலாம். அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்கள் என்றால் அந்த ஒரு வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை மட்டுமே குறிக்கிறது.அதே நேரம் அருளப்பட்ட வசனங்கள் என்று பொதுவாகச் சொன்னால் குர்ஆனில் ஆரம்பத்திலிருந்து அந்த ரமளான் வரை இறங்கிய வசனங்களைக் குறிக்கும்.

ஆனாலும் அவர் நம்மை பார்த்து ஒன்று கிடக்க ஒன்றை விளங்குபவர்கள் எனறும் எழுதி வைத்துள்ளார்.தானே ஒன்று கிடக்க ஒன்றை எழுதி வைத்து விட்டு நம்மை பார்த்து இப்படி துணிச்சலாக பழிக்கிறார் என்றால் அவரது தவறிலிருந்து மக்கள் கவனத்தை திருப்புவதற்காகத்தான். அவரது தவறு ஹதீஸில் பித்தலாட்டம் செய்ததாகும்! இது மிக மோசமான தவறாகும். அதிலிருந்து தப்பிக்க ஒன்று கிடக்க ஒன்றை தொடர்ந்து எழுதிக் கொண்டுமிருக்கிறார்.அதனால்தான் எந்தப்பாமரனும் இலகுவாக புரியக்கூடிய ஹதீஸுக்கு கருத்து எழுதுகிறேன் அந்தக் கருத்துக்கு உதாரணம் எழுதுகிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது எழுதி பக்கங்களை நிறப்பிக்கொண்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட ஹதீஸின் அர்த்தத்தை பார்ப்போம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள்.அதிலும் (குறிப்பாக) ரமளான் மாதத்தில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனெனில் ஜிப்ரீல்(அலை)அவர்கள் ரமளானில் ஒவ்வொரு இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை எடுத்தோதுவார்கள்.

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)

நூல்:புகாரி 6இ 1902இ3220இ3554இ4997

இந்த மொழி பெயர்ப்பு இதே ஜைனுலாபிதீன் எழுதியுள்ள திருமறையின் தோற்றுவாய் என்ற நூலில் பக்கம் 23-24ல் (6ம் பதிப்பு) இடம் பெற்றுள்ளதாகும்.

இந்த ஹதீஸை சுருக்கி கருத்தை மட்டும் எழுதினால் கூட(இவர் இப்போது சமாளிப்பது போல்) அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை ஓதுவதாகக் கூறுவது தவறாகும். இந்த ஹதீஸின் செய்திக்கு எதிரானதுமாகும். ஆகவேஇ தான் பின்னால் எழுதப்போகும் ஒரு கருத்தை ஹதீஸுக்குள் திணிக்கிற மோசடிச் செயல்தான் இது.

இன்னொரு ஹதீஸில் பித்தலாட்டம்:

தனது தவறான வாதத்தை நிலை நாட்ட பல ஹதீஸ்களில் பித்தலாட்டம் செய்துள்ளவர்தான் பீ;ஜைனுலாபிதீன். அதை அறிந்து கொள்ள அவர் எழுதியுள்ள இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்.குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து இவர் மறுக்கும் ஹதீஸ்களில் ஒன்று ஸாலிம்(ரலி) அவர்களின் பால்குடி ஹதீஸ். அதை இவர் எழுதுகிறார்:

'ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக்கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச சங்கடத்தை ஏற்படுத்தியது. ...'(பீ.ஜைனுலாபிதீன் தர்ஜமா 4- 7ம் பதிப்பு பக்:1309)

இதே ஹதீஸ் 8ம் பதிப்பில்:

'அபூஹுதைபா(ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க்கொணடிருந்தார். ...'(பக்:1446)

முந்தைய பதிப்புகளில் ஸாலிம் எனற சம்பந்தமில்லாத ஒரு இளைஞர் அபூஹுதைபாவின் மனைவியிடம் திடீரென பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்ததாக பதிந்துள்ளார். இறுதியாக வந்த எட்டாம் பதிப்பில் ஸாலிம்(ரலி) அவர்கள் வளர்ப்பு மகனாயிருந்ததை எழுதியுள்ளார்.

பழைய பதிப்புகளிலும் இப்போதய புதிய பதிப்பிலும் அவர் ஆதாரமாக கொடுத்துள்ள ஹதீஸ் எண்களிலுள்ள ஹதீஸ்களை நாம் எடுத்துப் பார்த்தால் ஸாலிம்(ரலி) அபூஹதைபா(ரலி)வின் வளர்ப்பு மகனாயிருந்த செய்தியை காணலாம். அந்த ஹதீஸ் எண்கள்:2636இ2638இ2639இ2640.எண் 2367 ஐயும் பார்க்க.

இந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதற்காக கொச்சைப் படுத்திக் காட்டுவதற்காக முந்தைய பதிப்புகளில் அவ்வாறு எழுதியிருந்தார்.கடந்த மார்ச்(2009) மாதம் நடந்த விவாதத்தில் பீ.ஜைனு தரப்பு முஜீபுர்ரஹ்மானுக்கு எதிராக எடுத்துக் காட்டிய அவரது முந்தைய பேச்சு கிளிப்புகளில்இ ஒழுக்கமுள்ள ஸஹாபியப் பெண்ணின் குடும்பத்தை கொச்சைப் படுத்துகிற விதத்திலே இந்த ஹதீஸை சித்தரித்துள்ளார் என முஜீபுர்ரஹ்மான் கூறுவது வருகிறது. இது பீ.ஜைனு தரப்பு விரும்பாத நிலையில் அவர்கள் மூலமாகவே வெளிப்பட்டது. ஹதீஸ்களில் அவர் செயதுள்ள பித்தளாட்டம் வெளிப்பட்டதும் திருத்தம் செய்துவிட்டு ஒரு தப்பும் செய்யாதது பொல் இருந்து கொண்டிருக்கிறார்.

இது மனிதன் என்ற அடிப்படையில் ஏறபட்ட தவறல்ல. மாறாக தான் திமிர்ப்பிடித்து மறுக்கிற ஸஹீஹான ஹதீஸை அசிங்கமாகச் சித்தரிக்கிற அசிங்கமான பித்தலாட்டச் செயல். இதை ஆடு மாடுகள் மாதிரியானவர்கள் என்று பீ;.ஜைனுலாபிதீனால் கூறப்படும் அவரது கட்சிக்காரர்களும் அறிந்து கொள்வார்கள்.

தன் கருத்தை நியாயப்படுத்துவதற்காக ஹதீஸ்களில் திரிப்பு வேலை செய்யும் இவரது தவறை இலங்கையைச் சேர்ந்த இஸ்மாயீல் ஸலஃபியும் சுட்டிக்காட்டியிருக்கிறார். பீ.ஜைனு மறுக்கும் மலக்குல் மவ்த் மூஸா நபி சம்பந்தப்பட்ட ஹதீஸுக்கான விளக்கத்தில் இவர் ஹதீஸில் திரிப்பவர் என்பதை ஆதாரத்துடன் எழுதியிருப்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.பார்க்க இஸ்லாம்கல்வி.காம்.

இது வரை பீ.ஜைனுலாபிதீன் என்னைத் தாக்கியும் தன் தவறுகளை நியாயப்படுத்தியும் ஆவேசத்தோடும் ஆணவத்தோடும் அவரது இணைய தளத்தில் எழுதியவற்றுக்கு முறையான பதில்களை இணைய தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளேன்.அவை அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பவும் படுகிறது. ஆவேசமும் ஆணவமும் கொண்ட அவரது எழுத்துக்களுக்கு நான் கொடுக்கும் பதில்களைப் படித்த பின் அமைதியாகி விடுகிறார்.

அது மட்டும் போதாது.இது வரை தான் செய்துள்ள மார்க்கப் பித்தலாட்டங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வதாக அறிவிப்பதுடன் மார்க்கப் பணியிலும் சமுதாயப் பணியிலும் ஈடுபடும் சகோதரர்களுக்கு எதிராக அவர் கூறியிருக்கும் அவதூறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும் அறிவிக்க வேண்டும். அது வரை இந்த நமது அறப் போராட்டம் தொடரும் இன்ஷhஅல்லாஹ்.

எனக்கும் பிறருக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம்: ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நாளை(மறுமை)க்காக எதை முற்படுத்தி வைக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீஙகள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்!(59:18)

ஆ.அப்துர்ரஹ்மான் மன்பஈ

4 comments:

Anonymous said...

dear brothers

assalaamu alaikum

how i can send the news to tmpolitics.blogspot.com

can i have the mail id for this site.

podakkudi-tntj said...

தமிழகத்தில் மார்க்கத்தை பேசும் அனைவரும் (அப்துல் ரஹ்மான் மன்பஈ) உள்பட திருடர்களே, உண்மையான மார்க்கத்தை நாங்கதான் பேசுகிறோம் என்று சொல்லி ஓவ்வோருதவனும் கல்லா நிரப்பிக்கொண்டு இருக்கிறான்.

முஹம்மது பதுருதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

ஹதீஸ்கலையின் உசூல் படி ஒரு நபி மொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் பொய்யர் அல்லது நபி(ஸல்) கூறாததை நபி(ஸல்) கூறியதாக இட்டுக்கட்டக் கூடியவர் இடம்பெற்றால் நபி(ஸல்) அவர்களின் கூற்றையே பலவீனம் எனக்கூறி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் இக் குழப்பமான காலகட்டத்தில் வாழும் பீ.செ. எனும் சாதாரன ஒரு நபர் குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு வெறுமனே விளக்கம் சொல்லும் இந்நபர் தனது மனோஇச்சையை மார்க்கமாக்க வேண்டி குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை நீக்கியும் இடைச்செருகள் செய்தும் அதன் உண்மையான பொருளை உல்டா பண்ணும் இந்த உல்டா உலவி பீ.செ. மிகப் பெரிய பொய்யராகவும், இட்டுக்கட்டராகவும் உள்ளார். மேலும் நான் சொல்லாத ஒன்றை நான் சொன்னதாக எவன் கூறுவானோ அவன் செல்லுமிடம் நரகம் என கருத்துப்பட வரும் ஹதீஸிற்கு இவர் நெருக்கமானவர் என்றால் அது மிகையாகாது.

நம் கண்ணுக்கு தெரியாத ஒரு பொய்யரோ அல்லது இட்டுக்கட்டரோ ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுவிட்டால் நபி(ஸல்) அவர்களின் கூற்றையே பலவீனம் எனக்கூறி ஒதுக்கி வைக்கும் நாம். நம் கண்களுக்கு தெரியும் பீ.செ.என்பவர் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் செய்யும் வார்த்தை மற்றும் கருத்து பித்தலாட்டங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவர் சொல்வதே வேதவாக்காக ஆக்கி கொண்டால் நாம் பின்பற்றுவது நபியையா அல்லது பீ.செ.யையா என்பதை பீ.செ.யின் கணிப்புப்படியுள்ள ஆடு,மாடுகள் போன்றோர் சிந்திக்க கடமைபட்டுள்ளார்கள்.

குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்வளவு மொல்லமாரித்தனம் செய்த பீ.செ.யை அதனை நிரூபித்த அப்துர் ரஹ்மான் மன்பஈ போன்றவர்கள் இன்னமும் அவரை அறிஞர் எனக்கூறுவது அறிவுடைமையாகாது.வஸ்ஸலாம்

அப்துர்ரஷீத் said...

முதலில் பீஜே யின் மொழிபெயர்ப்பையே அங்கீகரிக்கக்கூடாது இறை வேதத்தை மொழிபெயர்க்க நல்ல கல்வியறிவு இறையச்சம்,தன்னடக்கம்,நற்பண்பு இவை அனைத்தும் தேவை. இவற்றில் ஒன்று கூட இல்லாதவன் தான் பீஜே என்கிற இந்த அயோக்கியன். இவன் முளையிலேயே வெட்டி எறிந்திருக்க வேண்டிய விஷ செடி. இப்போது மரமாக வளர்ந்து நிற்கிறான்.