Tuesday, September 15, 2009

திருப்பூரில் அனைத்து இயக்கம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 1500 பேர் கைது செய்யபட்டார்கள் !!










திருப்பூரில் 25-08-09 அன்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மீதும் தொழுகைக்கு வந்த முஸலிம்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை கண்டித்தும், இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும், வயதான முதியவாகளையும், இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த காவல்துறையை கண்டித்து. 14 -09 -09 அன்று மாலை 3- 30 மணிக்கு திருப்புரில் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
இதில் த மு மு க, மனிதநேயமக்கள்கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமாக்கிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமிய ஜமாத், மக்கள் ஜனநாயக கட்சி,நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்,இந்த ஆர்பாடட்த்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதானல் அனைவருரையும் கைதி செய்து. திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பிறகு மாலை 7 மணிக்கு பிறகு அனைவரையும். விடுதலை செய்யபட்டது.இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய இயக்க ஜமாத் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் த மு மு க. திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு கோவையில் இருந்து த மு மு க மாவட்ட தலைவர் முஹம்மது பஷிர், செயலாளர் ரபிக், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், கவிஞர் ஹக், இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், திருப்பூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹைதர் அலி, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி : புகைப்படம். கோவை தங்கப்பா







1 comment:

Anonymous said...

Masha Allah! Ithu polla ellathuleyum othumaya irungappa