Wednesday, April 01, 2009

மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

மனிதநேய மக்கள் கட்சி
அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்



தமிழக அரசியலில் அதிர்வு களை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

குறிப்பு : மிக சமீபத்தில் ஆரம்பித்த "மனித நேய மக்கள் கட்சி" அதி விரைவாக செயல்பட்டு தேர்தல் கமிசனில் பதிவு செய்து முறைப்படி அங்கீகரமான கட்சியாக ஆகியுள்ளது. வாழ்த்துக்கள்!! "முஸ்லிம்களின் முதல் அரசியல் கட்சி" என்று தன்னை அறிவித்து கொண்ட "இந்திய தேசிய மக்கள் கட்சி" இது வரை தேர்தல் கமிசன் உட்பட எதிலும் பதிவாகவில்லை என்பதும், பதிவு செய்து அங்கீகரம் பெற்றதாக தவறான தகவலை மக்களுக்கு மத்தியில் பரப்பியதும் மிக வேதனையான செயலாகும்!! இதனை இதன் தலைவர்கள் உணர வேண்டும்!!

2 comments:

சுட்டிப் பையன் said...

நைனா! நீ அந்தக் கட்சியிலே ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் என்று அக்கட்சியின் இணையத் தளத்தில் உள்ளது. இப்போ நீயே அக்கட்சியை விமர்சித்து எழுதறே! ஒன்னுமே பிரியலே! எனக்கு மண்டையப் பிச்சுக்கிது! என்னான்னு கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.

முகவைத்தமிழன் said...

கட்சியில் இருந்தால் அதன் தவறுகளை விமர்சிக்க கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன?

பொது வாழ்வில் அனைவரும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே!!

இன்னும் சூடான விமர்சனங்களும் வரலாம்...