4.மனித நேய மக்கள் கட்சியை எதிர்க்க ஜமாத்துக்கள் முடிவு
உச்சிப்புளி: மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் அதை எதிர்த்து ஜமாத்துக்கள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கவுரவ ஆலோசகர் அப்துல் நாபிக் கூறுகையில், " லோக்சபா தேர்தலை குறிவைத்து த.மு.மு.க., சார்பில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டது. தி.மு.க., உடன் கூட்டணி ஏற்படுத்தி தொகுதியை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு "சீட்' தருவதை எதிர்த்து தி.மு.க., தலைமைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் ஜமாத்துக்கள் சார்பில் தந்தி அனுப்பியுள்ளோம். ஏதேனும் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் ம.நே.ம., கட்சிக்கு எதிராக முஸ்லிம் ஜமாத்துக்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் தீவிரமாக செயல்படுவர். ராமநாதபுரத்தில் அவர்களது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் எதிர்த்து ஜமாத்துகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தவும் முடுவு செய்துள்ளோம்' என்றார்.
நன்றி : தினமலர்
Thursday, March 26, 2009
மனித நேய மக்கள் கட்சியை எதிர்க்க ஜமாத்துக்கள் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
you are from DMK Jamath, MMK concern only Muslim Jamath. Not like Selfes Jmath.
Dear Mr.Rasudeen I would like to share a Message.
A person who is spreading a Message without looking of the nature of the message, He can't be True Muslim, Dont use this kind of Messages to Develope Image for you and your concern. You are sitting in Desert if you dont know anything go to india and do social service .
Thanks
சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரால் சமூக விரோதச் செயல்களைச் செய்யும் இவர்கள் கூட்டமாக பா.ஜ.கவில் சேர்ந்து, அக்கட்சிக்கு வாக்கு சேகரித்தால் கூட வியப்பில்லை. தனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற கேடு கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தானே இவர்கள்?
நடந்ததையெல்லாம் மறந்து விட்டு, அனைவரும் ஒற்றுமையோடு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்
Mr.முகவைத்தமிழன் , நமக்குள் உள்ள விரிசலை மாற்றான் பார்க்கும் போது கைக்கொட்டி சிரிக்கிறான் don;t put like this news plz Mr. Mr.முகவைத்தமிழன்
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,
ஆராயாமல் செய்திகளை பரப்ப வேண்டாம் சகோதர் முகவைத்தமிழன் அவர்களே.
இவ்வாறான செய்திகள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து விடும்.
ஏதாவது ஒரு வழியில் சமூகம் ஒன்று பட்டு விடாதா என்று நாங்களெல்லாம் ஏங்கி காத்திருக்கிறோம், பாலை வெயிலில்!!!
Post a Comment