Monday, March 16, 2009

இலாஹி இல்ல இலட்சியத் திருமணம்


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி கா..அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணம் சிறப்பாக நடைபெற்றது திருமணத்திற்கு வந்த மாண்புமிகு வக்ஃபு வாரிய தலைவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான S. ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சி. பொதுச் செயலாளர் P. அப்துஸ் ஸமது, மாண்புமிகு சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர். T.P.M. மைதீன் கான் மற்றும் பிரமுகர்கள் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஒண்ணேகால் மணி நேரம் தாமதமாக வந்தது. காலை 8.30க்கு நெல்லை வந்து சேர வேண்டிய ரயில் மழையின் காரணமாக 9.45க்கு வந்து சேர்ந்தது. எனவே 10.30க்கு நடைபெற வேண்டிய திருமண நிகழ்ச்சி 11.30க்கு துவங்கியது.



திருமண நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில துணைத் தலைவர் S.கோதர் மைதீன் Ex. M.L.A. மற்றும் L.K.S மீரான் மைதீன், ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் M.C. மற்றும் மு.லீக் தொண்டர்கள்,



தக்வா பள்ளி சார்பில் தலைவர் இனாயதுல்லாஹ், பொருளாளர் அன்வர், செய்யது அலி, சாகுல்ஹமீது மற்றும் நிர்வாகிகள்.



மேலப்பாளையம் மஜ்லிஸீல் உலமா செயலாளர் மவுலவி இல்யாஸ் உஸ்மானி, K.F. ஜலீல் அஹ்மது உஸ்மானி, கதீப் ரஹ்மதுல்லாஹ், மற்றும் மவுலவிகள். நல்லாசிரியர் செய்யது முஹம்மது, கலாம் ரசூல், இப்னு கலாம் ரசூல்.



காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில துணைத் தலைவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான M.A.S. அபுபக்கர் ஸாஹிப், மண்டல தலைவர் லியாவுதீன், E.O முஹம்மது அலி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்.



அ.இ.அ.திமு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் A. மஹ்பூப் ஜான், சிறுபான்மைப் பிரிவு தலைவர் S. ஷாஜஹான், பகுதிச் செயலாளர் S.S. ஹயாத், பகுதி துணைச் செயலாளர் O.M. அப்துல்ரஸ்ஸாக், பகுதி சிறுபான்மைப் பிரிவு செயலாளர் புலவர் சாகுல் ஹமீது, பகுதி இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ரிபாஈ, K.N. சேக் மைதீன், K.N. ரசூல் மைதீன், மற்றும் அ.இ.அ.திமு.க. தொண்டர்கள். தேசிய கவிஞர் த.மு.சா.



ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் K.M.A. நிஜாம் மற்றும் பிரமுகர்கள். பாளை சதக் கல்லூரி மாணவர்கள்.



தி.மு.க. சார்பில் மண்டல தலைவர் எஸ்.எஸ். மைதீன், கே.எஸ். செய்யது மைதீன்.



திருநெல்வேலி டவுண் ஸாலியா தெரு மஹ்மூதிய்யா ஜமுஆ பள்ளி நிர்வாகிகள், நெய்னா முஹம்மது மூப்பன் ஜமுஆ பள்ளி ஜமாஅத்தார்கள் மற்றும் ஜமாஅத் பிரமுகர்கள் சரியாக 10.30க்குள் வந்திருந்தனர்.



மாண்புமிகு வக்ஃபு வாரிய தலைவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான S. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் மவுலவி J.S. ரிபாஈ பாஸி ரஸாதி, மனித நேய மக்கள் கட்சி. பொதுச் செயலாளர் P. அப்துஸ் ஸமது ஆகியவர்கள் 11.30க்கு வந்தனர்.



அவர்களுடன் த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட் கான், மாவட்ட தலைவர் பாளை பாரூக், மாவட்ட செயலாளர் ஐ. உஸ்மான் கான், மாவட்ட துணைச் செயலாளர் K.S. ரசூல் மைதீன், நகர தலைவர் மைதீன் பாட்சா, செயலாளர் காசிம் பிர்தவ்ஸி. பொருளாளர் காஜர், அப்பாஸ் ஹில்மி, அஜீஸ் போன்ற பிரமுகர்களும் ஏராளமான த.மு.மு.க. தொண்டர்கள். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாளை ரபீக், மாவட்ட பொருளாளர் புளியங்குடி செய்யது அலி மற்றும் மு.லீக் தொண்டர்கள் வந்தனர்.



கா..அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி வரவேற்புரையும் உபதேச உரையும் ஆற்றினார். எனது மகள் K.M. ரஜாவுக்கு 12.கிராம் 300மிலி தங்க நகையை மஹராக பெற்றுக் கொண்டு உங்களுக்கு மணமுடித்துத் தந்தேன் ஒப்புக் கொண்டீர்களா என்று கேட்டார். மணமகன் H. அபுபக்கர் சித்தீக்.B.A. ஒப்புக் கொண்டேன் என்றார். உடன் பாரக்கல்லாஹ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர் என்ற வாழ்த்து கூறப்பட்டது.



மனித நேய மக்கள் கட்சி. பொதுச் செயலாளர் P. அப்துஸ் ஸமது, த.மு.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ பாஸி ரஷாதி ஆகியவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இங்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், அ.இ.அ.திமு.க, திமு.க, ம.தி.மு.க. என பல அமைப்புகளின் சமுதாய பிரமுகர்கள் நிறைய உள்ளனர். அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க நேரம் இல்லை. வக்பு வாரியம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் சொந்தமானது. எனவே அனைவரின் சார்பாக மாண்புமிகு வக்ஃபு வாரிய தலைவர் எஸ். ஹைதர் அலி வாழ்த்துரை வழங்குவது பொருத்தமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.



சமுதாய பிரமுகர்கள் அனைவரின் சார்பாக மாண்புமிகு வக்ஃபு வாரிய தலைவர் எஸ். ஹைதர் அலி வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர் குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



அமைச்சர். T.P.M. மைதீன் கான் திடீர் உடல் நலக் குறைவால் அவசர சிகிச்சைக்கு சென்று விட்டு மதியம் 2மணிக்கு மணமகன் இல்லம் வாழ்த்துக் கூறி விட்டுச் சென்றார். அவருடன். தி.மு.க. நகர நிர்வாகிகளும் பிரமுகர்களும் வந்தனர்.

No comments: