சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்."பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.
"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க.
"பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா."காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், http://www.peacetrain1.blogspot.com/ உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".
"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".
Saturday, January 03, 2009
அட!இது நம்ம ஆளு!!!
குறிச்சொற்கள்
சலீம் நானாவும்,
சுரங்கம்,
நீடூர்,
பஷீர் காக்காவும்,
மன்சூர் அலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment