Saturday, November 08, 2008

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்


நாட்டில் இதுவரை நிகழ்ந்த தீய செயல்கள் அனைத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூலகாரண மாக விளங்குவது சங்கும்பல் என்ற சதிகாரக்கூட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.


காந்தியாரின் படுகொலை முதல் மாலேகான் குண்டுவெடிப்பு வரை இந்த சக்திகளின் சதிகள் அம்பலமாகின.


இருப்பினும், சங்பரிவார் சக்திகளின் அரசியல் மற்றும் ஊடக பலத்தின் காரணமாக அதை சிறியதாக்கிக் காட்டு வதும், மறைப்பதும், மழுப்புவதும் அவர் களது வழக்கமான தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. காந்தியடி களைப் படுகொலை செய்துவிட்டு கொலையாளிக்கும் எங்கள் அமைப்புக் கும் தொடர்பில்லை என்று கூறிக் கொண்டே கொலையாளி கோட்சேயின் அஸ்தியை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் இவர்கள் அதனை பெருமையாகவும் கூறிக் கொள்வார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து இந்தியா வின் மாண்பை குலைத்ததோடு மட்டு மல்லாமல் பாபரி மஸ்ஜிதை இடித்ததற் காக பெருமைப்படுவதாக சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கொக்கரித்தார். இவ்வாறு தேசத் துரோக மனிதகுல விரோத தகவல் களைத் தொடர்ந்து அவர்கள் தங்களது வக்கிரப் புத்தி கலந்த பயங்கரவாதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


மாலேகானில் நோன்புப் பெரு நாளுக்கு முந்தைய நாள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆண்டின் கடைசி நோன்பினைத் துறக்கும் வேளையில் குண்டுவைத்து கொலை செய்த பாதகங்களில் முக்கியமானவர்களாக, பெண் சாமியார் பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர், மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு ராணுவ அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


நாசிக்கில் உள்ள போன்சலா ராணுவ பயிற்சிக் கூடத்தில் குண்டுகள் வைப் பதற்கும் அப்பாவி முஸ்லிம்களை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்தும் சதி பயிற்சிகள் நடைபெற்று வந்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை கூறிவரும் நிலையில் அந்த பயங்கர வாதிகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அரவணைக்க வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா வில் தலையங்கத்தில் பயங்கரவாதத் திற்கு பால் வார்க்கும் விதமாக விஷமக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பயங்கரவாதி பிரக்யாசிங் உள்ளிட்ட வகையறாக்களை யாரும் கைவிட்டு விடக் கூடாது என்றும், அவர்களின் செயல் குறித்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் பால்தாக்கரே. அதோடு பொதுநிதி கொடுத்து அந்த பயங்கர வாதிகளை வாழவைக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே கூறியுள்ளார். அவர்களை நிதி கொடுத்து காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்.ஸும் வாக்குறுதி கொடுத் தது. இதையெல்லாம் குறிப்பிட்டு, இதில் தவறு ஒன்றும் இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் தெரிவித்திருக்கிறார்.


இவர்கள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாத தடுப்புப் படையின் கட்டுப் பாட்டில்தான். என்ன செய்கிறது மத்திய அரசு?


Thanks TMMK website


No comments: