தேர்வு எழுதிய மாணவர்கள் மீது தாக்குதல், மஹாராஸ்ட்ரா நவநிர்மன் சேனா அமைப்பி்ன் இனவெறி செயல்களுக்கு USF யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் கண்டனம்.
மஹாராஸ்ட்ராவில் இன்று (19.10.2008) ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட் தேர்வு நடைபெற்றது இதில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். ராஜ் தாக்கரேயின் மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெறிவித்தது.இந்த இனவெறி அமைப்பின் இடையூருகளுக்கு மத்தியிலும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை திட்டமிட்டபடி நடத்த ஆரம்பித்தது மத்திய ரயில்வே துறை.
இதில் ஆத்திரமடைந்த மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பினர் மஹாராஸ்ட்டிராவை சேர்ந்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாரே தேர்வெழுதிய மாணவர்கள் மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். மும்பை , தானே, அந்தேரி, டொம்பிவ்லி, நல்ல கோப்ரா, ஸோலாப்பூர் ஆகிய மையங்களில் தேர்வெழுதிக் கொண்டிருந்த வ்ட இந்திய மாணவர்கள் மீது மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பினர் தாக்குதல் நடத்தி கேள்வித்தாள்களை கிழித்தெறிந்து ஓட, ஓட விரட்யுள்ளனர்.
இனவெறிகொண்டு மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி தேர்வை நிறுத்திய ராஜ்தாக்கரேயின் மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் இந்த ஈனச் செயலை யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் வண்மையாக கண்டிக்கிறது. மாணவர்களின் எதிர்கால வாழ்வை பாழடிக்கும் வகையிலும், மாணவர் சமுதாயத்திற்கு எதிராகவும் அன்று சிவசேனா செயல்பட்டது. 2003ம் ஆன்டு நவம்பரில் ராஜ்தாக்கரே என்ற இனவெறியன்தான் அதை முன்னின்று நடத்தஜச் சென்றான். இன்று மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் பெயரில் அதை தொடர்கின்றான்.
மாணவர்களுக்கு எதிரான இந்த இனவெறிப்போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். RRB Group IV தேர்வை மீண்டும் நடத்தி பாதிக்கப் பட்ட மாணவர்கள் பயன்பெற உடன் ஆவன செய்யுமாறு USF கேட்டுக்கொள்கின்றது.
இந்தியக் கலாச்சாரத்திற்கும் , பன்முகத் தன்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேச ஒற்றுமைக்கும், எதிராக செயல்பட்டு வரும் ராஜ்தாக்கரே மீதும் , மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து இவர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என USF கேட்டுக் கொள்கின்றது. இனவெறி சக்திகளுக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பலியாகிவிடக் கூடாது என்று USF கேட்டுக் கொள்கிறது.
இவன்
யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF)
No comments:
Post a Comment