Sunday, July 06, 2008

மக்கள் முன்னேற்றக் கழகம் (MMK) தமுமுக வின் புதிய அரசியல் கட்சி உதயம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
புதிய அரசியல் கட்சி அறிமுகம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக்கூட்டம் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஹெச். பேலசில் ஜுலை 4 அன்று நடைபெற்றது.

செயற்குழுவில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலளார் ரிபாயி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் 150 பேர் பங்குக் கொண்டார்கள்.

தமுமுகவின் கொள்கை விளக்கப்பாடலான தமுமுக தலைமையிலே என்ற ஒலிநாடா கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சைய்யது நிசார் அஹ்மது வெளியிட்டார்.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. புதிய அரசியல் கட்சி (மக்கள் முன்னேற்றக் கழகம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்குவதென்றும் இது தொடர்பாக மாநில தழுவிய மாநாட்டை நடத்தி புதிய கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் அறிவிப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது. இதற்கு மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் பெயரிடப்படுகிறது.
என்பதாக தமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

Unknown said...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்கும் முதல் கட்ட நடவடிக்கையாக தமுமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மிகவும் எச்சரிக்கையாக 'முஸ்லிம்' என்கிற பெயர் இல்லாமல் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் சூட்டியிருக்கிறது.

இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் தொடங்கும் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்காக தொடங்கும் கட்சி என்பது தெளிவாகிறது.

'முஸ்லிம் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைக்கவேண்டியதுதானே. யார்க்கு பயந்து இப்படி 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைத்திருக்கிறீர்?

உங்களின் முஸ்லிம் சமுதாயப்பற்று வெளிவந்திருக்கிறது. உங்கள் முகமூடியை நீங்களே கிழித்திருக்கிறீர்கள்.

'முஸ்லிம்' என்கிற பெயர் அரசியல் கட்சியில் சேர்க்க முடியாது என்றால் சுய கவுரவத்தை விட்டுவிட்டு சமுதாய நலனுக்காக வேண்டியும் நம்முடைய 'முஸ்லிம்' என்கிற அடையாளத்திற்காக வேண்டியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கில் சேர வேண்டியதுதானே. வரட்டு கவுரவம் ஏன்? விட்டுக்கொடுத்து போக வேண்டியதுதானே?

கட்சி பெயரிலேயே 'முஸ்லிம்' என்கிற பெயரை காட்ட முடியவில்லை. இவர்கள சொல்லிக்கொள்கிறார்கள் தனி அடையாளத்தோடு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்களுக்கு போட்டியிடுவார்களாம். அவர்கள் சொல்வது போல தனி அடையாளத்தோடு போட்டியிட்டாலும் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயர் தானே வரும். எந்த இடத்திலும் 'முஸ்லிம்' என்கிற தனி அடையாளம் வராதே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வளவோ மேலானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள் பெயரிலாவது தனி அடையாளம் "முஸ்லிம்" என்கிற அடையாளம் வைத்திருக்கிறார்கள்.

முகமது ரிபாயி

Anonymous said...

சுயமாக சிந்திக்கக்கூட இயலாத அளவிற்கு இன்றைய முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு முகமது ரிபாயி அவர்களின் கருத்துக்களே சாட்சி. இதற்கு யாரைக் குற்றஞ்சொல்வது? இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கிய தலைவர்களையா அல்லது எதையுமே சிந்திக்க தலைபடாத முகமது ரிபாயி போன்ற தனிமனிதர்களையா?

முஸ்லிம் என்று பெயர் வைத்தால் மட்டுமே முஸ்லிம்களுக்காக பாடுபடுவார்கள் என்று நினைப்பதை வேறென்ன சொல்வது? பாரதீய ஜனதா பார்ட்டி - இந்துக்களுக்காக வேண்டி, அவர்களது முன்னேற்றத்திற்காக வேண்டி மேலும் ஒரு இந்து ராஷ்டிரத்தை படைப்பதை வேண்டி மட்டுமே இருக்கின்ற கட்சி. இதில் எங்கேயாவது இந்து என்ற பெயர் வருகிறதா?

அவர்கள் இவ்வாறு தெளிவாக இருக்கின்ற போது நாம் மீண்டும் மீண்டும் அடிமுட்டாள்களாகி வருகின்றோம், நமது தலைவர்களின் உதவியினால். தயவு செய்து பரந்த மனப்பான்மையுடன் சிந்திக்க வாருங்கள்.

மேலும், முஸ்லிம் என்று பெயர் வைத்து விட்டால் முஸ்லிம் சமுதாயப்பற்று வந்துவிடுமா? ச்சே... சிந்திக்கவே மாட்டீர்களா?

முஸ்லிம்களின் ஓட்டுக்களை முஸ்லிம் கட்சிக்கும், இந்துக்களின் ஓட்டுக்களை இந்து கட்சிக்கும், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே போடுவார்களானால் நமது நாடு சிதறி சின்னாப்பின்னமாகி விடும்.

முஸ்லிம்களே ஒற்றுமையாக இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில், முஸ்லிம்களின் ஓட்டுக்களை ஒன்றிணைத்து அதை மட்டுமே சேர்த்து ஓட்டு வாங்கினால்... எத்தனை சீட்டுக்களை பெறமுடியும்? இப்படியெல்லாம் இவர்களிடம் கேட்கக்கூடாது.

முகமது ரிபாயி அவர்களே... முஸ்லிம் என்ற பெயர் மட்டும் சேர்த்துக்கொண்டால், தமிழகத்தில் எல்லா சட்ட மன்ற தொகுதிகளும் நமக்கே கிடைத்து நாளையே தனி பெரும்பான்மையுடன் எதிர்கட்சிக்கு யாருமே இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்.. அப்படித்தானே? தலைவரிடம் விளக்கம் அருமையாக கிடைக்கும், கேட்டால்...

நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாப்பா?

குறிப்பு : நான் தமுமுக காரன் கிடையாது. இயக்கம் ஆரம்பித்தது முதல் இன்றுவரை அதன் செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறவன். ஒருநாள் கூட அதன் இயக்க உறுப்பினராகவோ அல்லது உறுப்பினர் அட்டையை வைத்திருந்ததோ கிடையாது. அவர்களின் பல செயல்பாடுகளை கடுமையாக அவர்களிடமே நேரிடையாக விமர்சித்தவன். அவர்களது செயல்பாடுகளின் முழு திருப்தி அடையாதவன். இதற்கு இறைவனே சாட்சி. அவர்களது புதிய கட்சி தொடர்பாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும், ரிபாயி போன்ற இப்படிப்பட்டவர்களின் மனநிலையை கருதியே இந்த விமர்சனத்தை எழுதியுள்ளேன்.

Unknown said...

அனானிமொஸ் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த விளக்கங்கள் வெளிப்பட வேண்டும் என்பதற்காகத்தான் விமர்சனம் பதிந்தேன், உங்கள் விமர்சனத்திற்கு என் பதிலை பதிகிறேன் இதோ!

முஸ்லிம் என்று பெயர் வைத்தால் மட்டுமே முஸ்லிம்களுக்காக பாடுபடுவார்கள் என்று நினைப்பதை வேறென்ன சொல்வது? பாரதீய ஜனதா பார்ட்டி - இந்துக்களுக்காக வேண்டி, அவர்களது முன்னேற்றத்திற்காக வேண்டி மேலும் ஒரு இந்து ராஷ்டிரத்தை படைப்பதை வேண்டி மட்டுமே இருக்கின்ற கட்சி. இதில் எங்கேயாவது இந்து என்ற பெயர் வருகிறதா? என்று சொல்லும் அனானிமொஸ் அவர்களே இதை நீங்கள் சுய அடையாளத்தோடு போட்டியிடவேண்டும் என்று கோமாளித்தனமாக கூக்குரலிடுபவர்களிடம் கேட்க வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுய அடையாளத்தோடுதான் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டது. திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு அந்த கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுத்தான் போட்டியிட்டார்களே தவிர சுய அடையாளத்தை இழந்து அல்ல என்பது அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சுயமாக சிந்திக்க தலைப்படவேண்டும் (அந்த திறன் இருந்தால்). ஒப்பந்தம் போடப்பட்டது அனைத்துப்பத்திரிக்கையிலும் போட்டோவுடன் செய்தி வெளியானதே. திராவிட முன்னேற்ற கழகமும் பொதுவான கட்சித்தானே. அந்த கட்சி சார்பில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

அனானிமொஸ் அவர்களே திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்குப்போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து 'வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' (வெளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்றத்திற்குள் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரா?) என்று நீதி மன்றத்தில் வழக்குப்போட்டார்கள் சட்டம் தெரியாதவர்கள் எதையுமே சுயமாக சிந்திக்க தலைபடாதவர்கள். அனானிமொஸ் அவர்களே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க இயலாது என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம்.

நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்றவை அங்கீகரிக்கிறது. புதிதாக கட்சி ஆரம்பிக்கும் அரைவேக்காடுகள் சுய அடையாளத்தோடு போட்டியிட வேண்டும் என்கிறார்கள். சுய அடையாளத்தோடு கட்சிக்கூட ஆரம்பிக்க வக்கில்லை. 'மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பில் பேட்டியிட்டு வென்றாலும் நம்முடைய சுய அடையாளம் பாராளுமன்றத்திற்குள்ளும் சரி சட்டமன்றத்திற்குள்ளும் சரி வெளியிலும் சரி இல்லை. கட்சியிலேயே 'முஸலிம்' என்ற பெயர் இல்லையே, அதுக்கெல்லாம் தைரியம் வேண்டும். வாய்க்கொழுப்பேறி பேசும் முன்பு இவற்றையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.

அனானிமொஸ் அவர்களே 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற இந்த புதிய அரசியல் கட்சிக்கு கூட்டணியில் 8 சட்டமன்றத்தொகுதிகள் (அவ்வளவு எல்லாம் கிடைக்காது) கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம் இதில் எவ்வாறு மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும்? உங்களின் இந்த {முஸ்லிம்களே ஒற்றுமையாக இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில், முஸ்லிம்களின் ஓட்டுக்களை ஒன்றிணைத்து அதை மட்டுமே சேர்த்து ஓட்டு வாங்கினால்... எத்தனை சீட்டுக்களை பெறமுடியும்? முஸ்லிம் என்ற பெயர் மட்டும் சேர்த்துக்கொண்டால், தமிழகத்தில் எல்லா சட்ட மன்ற தொகுதிகளும் நமக்கே கிடைத்து நாளையே தனி பெரும்பான்மையுடன் எதிர்கட்சிக்கு யாருமே இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்.. அப்படித்தானே?) என்ற உங்களின் கூற்றுப்படி கிடைத்த 8 தொகுதிகளில் 4 தொகுதி முஸ்லிம்களுக்கு, 2 தொகுதி கிறிஸ்தவர்களுக்கு மீதமுள்ள 2 தொகுதி இந்துக்களுக்கு என்று பிரித்துக்கொள்வீர்களா?

இல்லை நாங்கள் பெயருக்குத்தான் தாழத்தப்பட்டவர்கள் மிகவும் தாழத்தப்பட்டவர்கள் பிற்படத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் போன்ற அனைவருக்கும் பொதுவான கட்சி 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயருக்குத்தான் சொன்னோமே தவிர கிடைக்கும் தொகுதிகளை பிரித்துக்கொள்வதற்கு அல்ல கிடைக்கின்ற தொகுதி எத்தனையானாலும் முஸ்லிம்கள்தான் போட்டியிடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

உங்களின் இந்த (முஸ்லிம் என்று பெயர் வைத்தால் மட்டுமே முஸ்லிம்களுக்காக பாடுபடுவார்கள் என்று நினைப்பதை வேறென்ன சொல்வது? பாரதீய ஜனதா பார்ட்டி - இந்துக்களுக்காக வேண்டி, அவர்களது முன்னேற்றத்திற்காக வேண்டி மேலும் ஒரு இந்து ராஷ்டிரத்தை படைப்பதை வேண்டி மட்டுமே இருக்கின்ற கட்சி. இதில் எங்கேயாவது இந்து என்ற பெயர் வருகிறதா?) என்ற உங்களின் கூற்றுப்படி இந்த 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சி 'முஸ்லிம்' என்ற பெயரில்லாத மதவாத கட்சியா? சுயமாக எதையுமே சிந்திக்க தலைபடுங்கள்.

முகமது ரிபாயி