Thursday, July 31, 2008

இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி அகில இந்திய அளவில் போராட்டம்! முஸ்லிம் லீக் தலைவர்அறிவிப்பு!

முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு எதிரான இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதற் கட்டமாக 3 மாத காலத்திற்குள் 10 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக் கப்பட உள்ளதாகவும் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தெரி வித்துள்ளார்.

நாகை தெற்கு மாவட்ட முஸ்லிம் லீகின் செயற்குழு கூட்டமும் புதிய நிர் வாகிகள் தேர்வும் நாகூரில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது-

நாகை தெற்கு மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பில் நடைபெறும் இக்கூட்டத் தில் திரளாக பெருமளவில் நீங்கள் கலந்துகொண் டுள்ளதைக் கண்டு பெரி தும் மகிழ்ச்சி அடைகி றேன்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் காலம் தொட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணி களுக்கு நாகை மாவட்ட மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த மணி விழா மாநாட்டில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள் ளோம். முஸ்லிம் லீகிற்காக தங்களது வாழ்வை அர்ப் பணித்துக்கொண்ட பல சமுதாயப் பெருமக்கள் நமது நன்றிக்குரியவர் களாக நமது நினைவில் என்றும் உள்ளார்கள்.

மரியாதைக்குரிய கஸ்ஸாலி நானா யூசுப் நானா அடியக்கமங்கலம் ரஜாக் போன்ற பல பெரு மக்கள் முஸ்லிம் லீகிற்காக உழைத்துள்ளார்கள்.

அதே போன்று இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் காமில் மாளமார் அவர்கள் ஜின்னா சாஹிபுடனும் நமது காயிதெ மில்லத் துடனும் சிராஜுல் மில்லத் துடனும் நெருங்கிப் பழகி யவர்கள். முஸ்லிம் லீகின் ஆரம்ப காலத்தையும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நன்கறிந் தவர்கள்.

அவர்கள் தெரி வித்த நல்ல பல ஆலோ சனைகளை முஸ்லிம் லீக் செயல்படுத்தும்.

நாகை தெற்கு மாவட் டத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் 26 ஊர் களில் உள்ளனர். அதில் 20 ஊர்களில் முஸ்லிம் லீக் பிரைமரி அமைக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள 6 ஊர்களிலும் பிரைதரி களை அமைக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

முஸ்லிம் லீகின் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகி களை தேர்வு செய்து பணிகளை முடுக்கிவிட வேண்டும். முஸ்லிம் லீக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அல்லா தவர்களையும் சேர்ப்ப தற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் நவாபுகளாலும் ஜமீன் களாலும் மிட்டா மிராசு களாலும் நிர்வகிக்கப்படும் கட்சியாக இருந்தது.

ஆனால் இன்று ஏழை எளிய மக்கள் ஏராளமா னோர் முஸ்லிம் லீகில் நிர்வாகிகளாக உள்ளனர்.

காலத்திற்கேற்ப அரசியல் மாறி உள்ளது.

ஒரு காலத்தில் ஏகபோக மாக இருந்த கட்சிகளின் நிலை இன்று மாறி உள்ளது. தேசிய கட்சி களின் ஏகபோக நிலைமை மாறி மாநில கட்சிகளின் கை ஓங்கி காணப்படு கிறது. இன்று எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று தங்களது சித்தாந்த அடிப்படையில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாது. மற்ற பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கவும் வெற்றி பெறவும் முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

அந்த அடிப்படையில் கேரளாவில் முஸ்லிம் லீக் தனது பலத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அது போன்ற நிலை தமிழகத் திலும் உருவாக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

முஸ்லிம் லீக் தமிழகத் தைப் பொறுத்த அளவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் மத்தியில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த கூட்டணி முறை தொடர்ந்து கடைப்பிடிக் கப்படும்.

முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு விரோத மாக அரசியல் நடத்தும் பி.ஜே.பி.க்கு எதிரான அரசியலையே முஸ்லிம் லீக் மேற்கொள்ளும். பி.ஜே.பி. மட்டுமல்லாது அதனோடு கூட்டணி வைத்துக்கொள் ளும் மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் அவை அனைத்தும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான கட்சியாகவே கருதப்படும்.

மத சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பி.ஜே.பி. போன்ற மதவெறி அமைப்பு பல சதித் திட் டங்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.

நமது இந்தியா மதச் சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அரசா கும். அரசுக்கு மதச்சார்பு கிடையாது. அனைத்து மதங்களின் உணர்வுகளை யும் மதிப்பதுதான் நமது அரசியல் கொள்கை ஆகும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினரும் தங்கள் மதத்தின் கொள் கைப்படி வாழ முழு சுதந் திரம் அளிக்கப்பட்டுள் ளது.

அதேசமயம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 44-வது பிரிவு அனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன் றினை ஏற்படுத்த வலி யுறுத்துகிறது. இது முஸ் லிம்களின் மத சுதந்திரத் தைப் பறிக்கும் வாய்ப்பு உள்ளதால் அரசியல் அமைப்பு சட்ட விவா தத்தின்போது இந்தப் பிரிவிலிருந்து முஸ்லிம் களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என காயிதெ மில்லத் வலியுறுத்தினார்.

ஏறக்குறை 60 ஆண்டு காலம் இதனை முஸ்லிம் லீக் தொடர்ந்து வலி யுறுத்தி வந்துள்ளது.

அகில இந்திய அளவில் இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போராட்டம் நடத்தப் படும்.

அதன் முதல் கட்டமாக சுமார் 10 கோடி மக்களி டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி கையெழுத்து வாங் கும் இயக்கம் நடத்தப்படும்.

அதற்கான பணிகள் விரை வில் துவங்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்

No comments: