Tuesday, June 10, 2008

தமிழகத்தில் முஸ்லிம்களின் வீரமிகு சுதந்திர தின அணிவகுப்பு - PFI அறிவிப்பு

ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் சுதந்திர தின அணிவகுப்பு
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு


MNP யினர் நடத்தப் போகும் சுதந்திர தின அணிவகுப்பை பற்றி பலரும் பலவாறு விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள், ஃபாசிச பத்திரிகைகளான தினமலர் போன்றவை ஒரு படி மேலே போய் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி என்ற அளவிற்கு செய்தி வெளியிட்டு மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றார்கள் இந்த நிலையில் MNP யின் மாநில தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தங்கள் அமைப்பு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தவிருக்கும் சுதந்நதிர தின அணிவகுப்ப குறித்து ஒரு பத்திரிகை அறிக்கை ஒன்றினை இன்று (10-06-2008) வெளியட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு (Freedom Parade) நடத்த திட்டமிட்டுள்ளோம். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த அணிவகுப்பு நடக்கின்றது. தமிழகத்தில் மதுரையிலும், கேரளாவில் கொச்சி, வயநாடு ஆகிய இர இடங்களிலும் கர்நாடகத்தில் மங்களுரிலும் இந்த அணிவகுப்புகு நடக்கின்றது.

நாம் பெற்ற சுதந்திரம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றினைந்து போராடிப்பெற்ற சுதந்திரம். இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவித பாகுபாடும் இன்றி போராடி இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். நமது தேசம் விடுதலை அடைந்தபோது, அப்போது இருந்த முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு முஸ்லிம்கள் சுதந்திரப் போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திரக்கின்றார்கள். நூற்றான்டுகால ஒற்றுமைப் போராட்டத்தின் வெற்றிக்கனிதான் நாம் இப்போது சுவாசித்து கொண்டிருக்கும் சுதந்திரக் காற்று.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திரக்கின்றார்கள். தேசத்தின் நச்சுக்கிருமிகளாகவும் புற்றுநோயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் சங் பரிவார ஃபாசிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய சதிச்செளல்களின் ஒரு பகுதிதான் இந்த அந்நிய மயமாக்கல் திட்டம்.

நாம் நடத்திவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பு சுதந்திர தின வஜழாவை கெளரவிக்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் நினைவலைகளை எல்லோர் மனதிலும் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும், குறைந்த சதவிகிதமே இருந்தாலும் தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிரை தியாகம் செய்த முஸ்லிம்களின் தியாகத்தை பெருமைப்படுத்தும் விதமாகவும், இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சுதந்திரததின் பாதுகாவலர்களாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் செயல்பட வேண்டும் என்பதை வலியுருத்தும் விதமாகவும் இருக்கும்.

ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தின அணிவகுப்பை மதுரையில் நடத்த திட்டமிட:டுள்ளோம். இந்த அணிவகுப்பிற்காக மாவட்டந்தோறும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆங்காங்கே பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அணிவகுப்பிற்கான ஒத்திகைகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. அணிவகுப்ப பயிற்சி மற்றும் ஒத்திகை குறித்த முறைப்படி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்த அணிவகுப்பிற்காக மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்து வருகின்றோம்.

இந்த அணிவகுப்பில் சுமார் 1000 ம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அணிவகுப்பின் ஆரம்ப நிகழ்ச்சியாக தேசியக்கொடி ஏற்றப்படும். அணிவகுப்பின் முடிவில் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் திரளாக இதில் கலந்து கொள்வார்கள் என மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளார்.

No comments: