இணையதளங்களை பயன்படுத்தும் போது வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க Anti-virus மென்பொருட்கள் பல இருந்தாலும், அவற்றை அனைவரும் பயன்படுத்துவது இல்லை.
வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தும் பலரும் அதனை அவ்வப்போது மேம்படுத்தாமல் பழைய பதிப்பையே உபயோகித்து வருவதால், வைரஸ் தாக்குதல்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.
இது இப்படி இருக்க, அதிக ஆபத்தான இணையதளங்கள் எவை என்று மெக்கஃபீ (McAfee) நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த இணையங்கள் முன்னணியில் உள்ளன.
.hk (ஹாங்காங்) மற்றும் .cn (சீனா) என்ற டொமைன் பெயருடைய இணையதளங்கள் முறையே 19.2 மற்றும் 11.8 சதவீதம் ஆபத்தானவை என மெக்கஃபீ கண்டறிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக .info எனப்படும் தகவல் இணையதளங்களில் 11.7 சதவீதம் ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது.இதில் சீனா மற்றும் ஹாங்காங் இணையங்களை பயன்படுத்துபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழி தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் .info எனப்படும் தகவல் இணையதளங்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லாததால், இதனை பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமான இணைய பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.உலகளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள .com இணையதளங்களில் 5 சதவீதம் மட்டுமே ஆபத்தானவை என்பது ஆறுதலான விஷயம்.
http://www.lalpet.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment