கடந்த 2 வாரங்களாக கேரள மாநிலத்தில் தொலைக்காட்சிகளும் செய்திகளும் குறும்படம் போல அங்குள்ள போலி ஆண் பெண் போலி சாமியார்களைப்பற்றிய செய்திகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது.
ஒருவரே ஆண்மீக போர்வையில் ஒரு பெயரும் கடவுச்சீட்டுக்கு ஒரு பெயரும் ஆவணப்பதிப்புகளுக்கு வேறு பெயரும் வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததும் பெண் பக்தர்களோடு தவறான உறவில் சல்லாபித்ததும் அவை அனைத்தையும் விடியோ சிடிக்களாக்கப்பட்டு வைத்திருந்ததும் செய்திகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமாக உயர் பதவிகளில் இருக்கின்றவர்களின் மனைவிமார்களும் பிள்ளைகளும் இருப்பதாக தெரிவிக்கிறது.
படைத்த ஒருவனை தவிர மற்றவைகள் போலிகள் என்பதை உணர ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இப்படி ஆகிறது.
கேரள அரசாங்கம் இப்படி எவ்வளவு பேர் கேரளாவில் இருக்கிறார்கள் இவர்களுக்கு பணம் எப்படி வருகிறது என்று ஆய்வை இப்போது ஆரம்பித்திருக்கிறது.தினம் தினம் புது புது தகவல்களோடு தொலைக்காட்சிகள் செய்திகளை தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.23-05-2008 அன்று செய்தியில் கழிந்த ஒரு வருடம் மட்டும் இந்த மாதிரி இந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு 7584 கோடி ரூபாய்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டும் வந்ததாக மத்திய வெளிவிவகாரத்துறை ஆய்வு கூறுகிறதாம். அதில் ஒரிஸாவிற்கு மிக அதிகமாகவும் அடுத்தபடியாக கேரளாவிற்கு வந்துள்ளது. முன்பு மயிலாடுதுறையில் இருந்து பிறகு கேரளாவில் ஆண்மீகத்தை செய்து வருகிற ஒரு மூத்த பெண் சாமியாரின் மடத்திற்கு 85 கோடிகளும் 2-வது ஒரு கிறிஸ்தவ அமைப்பிற்கு 78.5 கோடிகளும் கொஸபல் கிறிஸ்தவ அமைப்பிற்கு 52.5 கோடிகளும் ஒரு வருடம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறது.
இவ்வளவு தொகை வந்தும் எந்த கண்காணிப்பும் இல்லை. இஸ்லாமிய அமைப்புகளுக்கு சில லட்சங்கள் வந்தாலே துருவி துருவி அரசாங்கம் ஆராய்கிறது. கழிந்த அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் கேரள பீஜேபி யின் முக்கிய தலைவருமானவர் கொஞ்சம் கட்சிக்காரர்களுடன் ஒரு மிக இளவயது பெண் சாமியாரின் மடத்திற்கு போய் அவர் முன்பு இரு கால்களையும் முட்டிபோட்டு நீண்ட நேரம் வணங்குவதையும் பல கிரியைகள் செய்வதையும் தினவிட்னஸ் நிகழ்ச்சி தொடர்ந்து குறும்படம் போல் காட்டுகிறது.இன்னும் பல பல ஆண் பெண் போலி சாமியார்களையும் அவர்கள் மடம் வருமானம் அங்கே பெண்கள் வணங்குகிற முறை பெண்களுடன் ஆண் சாமியார்கள் கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்வது இப்படி காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள.
கேரள சட்டசபையில் இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நடந்து மந்திரிகள் கொண்ட தனிகுழு அமைத்து என்ன செய்யலாம் என்று வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.வேடிக்கை என்னவெனில் முன்பு இந்திய கள்ளரூபாய் அடித்து ஜெயிலில் தண்டனை பெற்ற ஒருவர் இப்போது குருவாயுரில் சாமியாராக இருப்பதையும் காட்டுகிறது.விரிவஞ்சி யாரையும் புண்படுத்தக் கூடாது என்று நீட்டவில்லை.நீங்கள் கேரள தொலைக்காட்சியை பார்க்கவும்.
இதில் கவனிக்கவும் இங்கு பதியவும் தூண்டியது கேரளாவில் எல்லா சேனல்களும் வாரக்கணக்கில் இதைகாட்டிக்கொண்டிருக்க தமிழகத்தில் மற்றும் இந்திய முழுவதும் உள்ள தொலைக்காட்சிகள் இதை செய்தியாக கூட சொல்லவில்லை.இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளையே மிக பெரிதாக்கி மீண்டும் மீண்டும் சொல்கிறவர்கள் இதை கண்டுகொள்ளவேயில்லை.
இஸ்லாமோபோபியாவின் தாக்கம் எவ்வளவு உண்மைகளை மறைக்கிறது என்பதை உணர முடிகிறது.
1 comment:
கேரள தொலைக்காட்சிகள் கடைபிடிக்கும் நேர்மை- துணிச்சலில் நூற்றில் ஒரு பங்கு கூட தமிழக மற்றும் இந்திய ‘பொழுது போக்கு' தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடையாது.
தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கட்சிகளுக்கும் - மத நிறுவனங்களுக்கும் 'அடிவருடுவதற்காக' மட்டும் இயங்கி வருபவை - அவைகளிடம் உண்மையான செய்திகளை எதிர்பார்க்க கூடாது.
Post a Comment