துபாயில் கார் நம்பர் ஒன்று ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் விற்பனை ஆனது.
கார் நம்பர்களை ஏலத்தில் விட்டு கார் உரிமையாளர்களுக்கு ஒதுக்குவது துபாயில் வழக்கம். துபாய் போக்குவரத்து ஆணையம் கார் நம்பர் ஏலத்தை நடத்துகிறது.
58 வது கார் நம்பர் ஏலம் நேற்று முன் தினம் துபாயில் நடந்தது.
இரட்டைப் படை எண்ணுள்ள கார் நம்பர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஜி 16 என்ற கார் எண் உயர்ந்தபட்ச தொகைக்கு விற்கப்பட்டது. அதன் ஏல விலை 50 லட்சம் திர்ஹாம் (ரூ. 5.5 கோடி).
ஈ 60 என்ற கார் எண் 36 லட்சம் திர்ஹாமுக்கு விற்பனை ஆனது.
ஜி 21 என்ற எண்ணுக்கு கிடைத்த விலை 34 லட்சம் திர்ஹாம்.
இந்த ஏல விற்பனையின் மூலம் போக்குவரத்து ஆணையத்துக்கு கிடைத்த தொகை ரூ. 35 கோடி.
நன்றி தினகரன்
1 comment:
சூடான் - சோமாலியா - எத்தியோப்பியாவில் பட்டினி கிடந்து உயிர் துறக்கின்றனர் - பல்லாயிரக்கணக்கான குழந்தைகள். துபாயில் உள்ள பணத்திமிர் பிடித்தவர்கள் - 'நம்பருக்கு' இத்தனை கோடி செலவு செய்கிறார்கள்?. இறைவா! ந்ல்ல புத்தியை கொடு.
Post a Comment