இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008
http://nganesan.blogspot.com/2008/05/tirunelveli-june7-meeting.html
வரும் ஜீன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் மாவட்டக் கலெக்டர் திரு.கோ. பிரகாஷ், I.A.S தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும்கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். முனைவர்கள் நா. கணேசன், சொ.சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும்பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும்பங்கேற்க உள்ளனர். தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ்மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்துஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.
இணையத்தில் வளர்தமிழ்வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி - 5நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)
வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க்கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம். வருவோர்எண்ணிக்கை அறிய உதவியாக, தாங்கள் வருவதாக முடிவு செய்தால்naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.
இவண்,
சேகர் பொன்னையா,
குளோபல் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி
முனைவர் முல்லை ச. முருகன்,
நெல்லைத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
Tuesday, May 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment