Sunday, May 04, 2008

பி.ஜே யோடு கைகோர்த்து பணி செய்ய காத்திருக்கின்றேன் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்லாஹ்வின் திருநாமத்தால்........நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.

நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:

ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.

  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.

  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.

  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.

  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.

  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.

  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்---ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-- அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

8 comments:

Ansari B A said...

Dear Brothers in ISLAM,
Assalamu Alaikum!
Kindly convert my comment in tamil, May Allah Reward you!

Dear respectable Moulana Rahmathullah,May Allah give rahmah in your "ILM" as you have them in your name. I really appreciate you as you have used such polite words in your article. Please keep this manner in your future articles and do not bring or pinpoint any personnel indiscipline attacks by using wrong words even if anyone provoke you as i have seen some in this site some brothers used before which will make no differance in between "HAQUE" and " BATHIL".

However, I would request you to kindly explain to the such muslim ummah about in which way the muslim ummah (has) beeing abused by (PJ)him in the name of AT-THOUHID using Al-Quran and Al-Hadith instead explaining how many people ha has stabbed on the back.

May Allah reward you for this and give us the right path of islam to all our muslim ummah!

Wassalam.
Ansari - London

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அன்பு நண்பர் அன்ஸாரி அவர்களே, தனி மனித வாழ்வில் தூய்மை இல்லாதவர்கள் பொது வாழ்வுக்கு வரக்கூடாது. நமது தலைவர் பெருமானார்(ஸல்) அவர்கள் சொல்லும், செயலும் ஒன்றாக இருந்ததால் தானே காபிர்கள் குறையை தேடி இஸ்லாத்தை ஆராய வந்தாலும் வெற்றியை இஸ்லாத்தின் பக்கமே எழுதினார்கள். பிஜெ திருந்திய பிறகும் இதுபோல் குறை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவது சரியாகும். அவர் திருந்துவதற்காகத் தானே இவ்வளவு பாடுபடுகிறார்கள். - வஸ்ஸலாம்.

தாருல்ஸஃபா சாதிக் said...

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் பதில் மிகவும்
அருமையாகவும், இஸ்லாமிய நல்லிணத்தை வலியுறுத்தியும்
உள்ளது. ஆதமின் மக்கள் அனைவர்களும் தவறு செய்பவர்களே!
தனது தவறிலிருந்து திருந்தி வருவதே மனிதனுக்கு இறைவன் தந்த
அறிவிற்கு உதாரணம். செய்த தவறிலிருந்து மன்னிப்பு கேட்டு அனைவர்களும்
இறைநேசர்களாக மாற வல்ல இறைவன் துணை செய்வானாக! ஆமீன்.!

அன்புடன்,
சாதிக்.

Anonymous said...

அண்ணன் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுக்க,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு சகோதரனிடம் காணப்படும் தவறுகளைப் பொது இடத்தில் வைத்து பேசும் பொழுது எப்படி வார்த்தைகளைக் கையாள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக உங்களின் கடிதம் அமைந்துள்ளது.

நாம் சுட்டிக்காட்டும் ஒரு தவற்றின் மூலம் சம்பந்தப்பட்டச் சகோதரர் அத்தவறிலிருந்து விலக வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து அவனிடம் மனதாரப் பிரார்த்தித்தவர்களாக அதனைச் சுட்டிக்காட்டுவதே நல்ல ஒரு இஸ்லாமியனின் பண்பு.

ஆனால் இங்கே அந்நிலையை விட்டு மாறி, சம்பந்தப்பட்டவனை ஒரு குற்றவாளியாக, "கிரிமினலாக", அயோக்கியனாக, மோசக்காரனாக மக்கள் மத்தியில் சித்தரித்து அந்தச் சம்பந்தப்பட்ட நபரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். இத்தகைய வஞ்சம் மனதில் கொண்டு அவர்கள் எடுத்து வைக்கும் செய்திகளில் அவர்கள் கையாளும் வார்த்தைக்கணைகளின் கூரிய விஷ அம்புகளால் அவர்கள் கூறவரும் நியாயமான ஆதாரத்துடன் கூடிய பல விஷயங்களும் நடுநிலையாளர்களாலும் என்னைப்போன்ற பாமரர்களாலும் புறந்தள்ளப்படும் சூழலுக்கு ஆளாகின்றன.

ஒரு விதத்தில் தவறு செய்பவர்களுக்கு மேலும் மேலும் மக்கள் மத்தியில் - குறைந்தபட்சம் அவர்களின் சீடர்கள்-தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்க இதுவும் துணைபுரிகின்றன என்பதை இவர்கள் எப்பொழுது புரிந்துக் கொள்வார்களோ?

நல்லது. உங்களின் இப்புது முயற்சி சமுதாயத்திலும் சம்பந்தப்பட்ட தவறிழைக்கும் சகோதர குழுவின் மத்தியிலும் நல்லதொரு மாற்றத்தை உருவாக்குமாயின் அதனால் மிக்க மகிழ்ச்சியடையும் கூட்டத்தாரில் நானும் ஒருவனாக இருப்பேன்.

தொடருங்கள் உங்களின் கடிதத்தை இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
தம்பி ஹாஜியார்.

(ஏம்பா தம்பி முகவை, இரு நாட்களுக்கு முன்னர் உனது இத்தளத்தில் நான் வைத்த ஒரு கருத்தை இதுவரை நீ அனுமதிக்கவில்லையே, ஏன்?. தவறாக ஏதாவது அதில் நான் எழுதியிருந்தால் அனுமதித்து விட்டு, உனது மொழியில் நன்றாக நான்கு திட்டு திட்ட வேன்டியது தானே?. அதை விடுத்து அனுமதிக்கமல் இருந்தால் என்ன அர்த்தம்?)

முகவைத்தமிழன் said...

//(ஏம்பா தம்பி முகவை, இரு நாட்களுக்கு முன்னர் உனது இத்தளத்தில் நான் வைத்த ஒரு கருத்தை இதுவரை நீ அனுமதிக்கவில்லையே, ஏன்?. தவறாக ஏதாவது அதில் நான் எழுதியிருந்தால் அனுமதித்து விட்டு, உனது மொழியில் நன்றாக நான்கு திட்டு திட்ட வேன்டியது தானே?. அதை விடுத்து அனுமதிக்கமல் இருந்தால் என்ன அர்த்தம்?)//

ரென்டு நாளா பயங்கர பிசி தல...அதான்...இப்ப வுட்டாச்சு பாக்கவும்

Rock said...

அஸ்ஸலாமு அலைக்கும்....

மதிப்பிற்குரிய ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி கூறியதுப்போல் இதுப்போன்ற உண்மைகள் மக்களின் காதுகளுக்கு சென்றடைய வேண்டும். இதுப்போன்ற தெளிவுள்ள உண்மைகளை நாமும் நம் சகோதரர்களுக்கும், மக்களுக்கும் சென்றடைய முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த உண்மை பயணம் வெற்றியடைய அல்லாஹ் அருள் செய்வானாக! ஆமீன்! யரப்பிலாலமீன்!

அன்புடன்,
சமிர் அகமத்.அதிரை.

AERO said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அன்பான சகோதரர் ரஹ்மத்துல்லாஹி இம்தாதி அவர்களுக்கு, ஏர்வாடி சிராஜ் எழுதிக்கொள்வது. தங்களுடைய சத்திய விமர்சனங்களை பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ். தனிப்பட்ட வாழ்வில் பி.ஜே செய்த ஊழல்கள் பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்தும் அதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள் என்பதை புரிந்து அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் செய்த குழப்படிகளை மட்டும் மிக அழகாக தொகுத்து தமிழ்பேசும் மக்களுக்கு உண்மையை புரியும்படி எழுதியுள்ளது மிகவும் சிறப்பு! அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு தலைமையின் கீழ் கட்டுபட்டு வாழ்பவன் மட்டும்(நீங்கள் கட்டுபட்டவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள் '2:132 திருக்குர்ஆன்) தான் இந்த உலகில் மரணிக்கும் போது கட்டுபட்டவனாக மரணிப்பான் என்ற உண்மையை மீண்டும் மக்களுக்கு இன்னும் தெளிவாக விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஆரம்பிக்கப்பட்டதே பல தலைமைகளின் கீழ் வாழ்ந்து வந்த மக்களை; அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் நீங்கள் ஒன்றுபடுங்கள், பிரிந்து விடாதிர்கள் 3:103என்ற திருக்குர்ஆன் வசனத்தை உண்மைப்படுத்துவதற்காகத்தான் என்பதை இன்னும் அழுத்தாமாக பதிவு செய்து உங்கள் பிரச்சாரத்தை செய்யவும்.

மேலும் தற்போது தமிழகத்தில் மீண்டும் எந்த தலைமையையும் ஏற்காதவர்கள் என கூறி பல குட்டி குட்டி ஜமாஅத்துகள் உருவாகி வருவதை தாங்கள் அறிந்ததே! அவர்களுக்கும் நாம் கட்டுபட்டவர்களாக மரணிக்க வேண்டும் 2:132 என்ற வசனத்தின் யதார்த்தத்தை புரிய வைத்து ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி செய்யவும். நமது ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற பெயர் நீங்கள் வைத்ததால் தான் ஒரு தலைமையின் கீழ் மக்கள் ஒன்றிணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களுக்கு நாம் ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸின் மாநில துணை செயலாளர் என்ற அடிப்படையில் சத்தியமாக கூறிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குர்ஆன் ஹதீஸ் பேசும் மக்களும் ஒரு தலைமையின் கீழ் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தால் இந்த பெயரை கூட நாம் விட்டு கொடுத்து அனைத்து ஜமாஅத்துகளும் கூடி எந்த பெயரை ஜமாஅத்திற்கு சூட்டி அழைத்தாலும் நாமும் அதையே ஏற்று ஒன்றிணையத்தயார் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

ஏர்வாடி சிராஜ்

Omar Abdul said...

ASSALAMU ALAIKUM DEAR BROTHER IN ISLAM,

I THANKU VERY MUCH TO JANAB. IMTHATHI- SINCE HE IS VERY POLITE IN WORDS , OFFCOURSE HE IS VERY RIGHT ENOUGH TO RAISE QUESTION UPON THE POSTERS WHICH IS ANY COST SHOULD NOT BE DONE BY TNTJ SINCE ITS PERSONNEL ABUSE TO HIM .

I KNOW pj also doing very good job , sometime they are very aggressive in their ways as it shows arrogancy in terms of organisation which is also similar to be arrogancy in terms of etnic and culture , and language . so allah bless all of them to be in right way

omar abdul latid - kayalpatnam