Saturday, April 26, 2008

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் நகர செயற்குழு கூட்டம் 20.04.2008 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நகர த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாளை ளு.ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன், நகர செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணை தலைவர் மு.மு.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் உட்பட அனைத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சொத்து வரியை உயர்த்திய நெல்லை மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பது.

2. தொடர் மின்வெட்டை சரி செய்யாத மின் வாரியத்தை வன்மையாக கண்டிப்பது.

3. விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

4. ரேசன் கார்டு பெயர் திருத்தம் செய்யும் நடைமுறையில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் துறையை கண்டிப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு சரி செய்ய கோருவது.

5. ஹாமீம்புரம் 12 தெருக்கள், ஞானியரப்பா நகர் 8 தெருக்கள், பங்களப்பா நகர் 5 தெரு, ரஹ்மானியாபுரம் 2 தெரு, ராஜா நகர், தாய் நகர், அமுதா நகர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு அடக்கஸ்தலம் (மயானம்) தான் உள்ளது. எனவே, மேலும் ஒரு அடக்கஸ்தலத்திற்கு அரசு ஒரு இடத்தை ஒதுக்கி தர அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. மே 10 அன்று மேலப்பாளையத்தில் த.மு.மு.க. தலைவர் ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் நன்றி கூறினார்.

செய்திகள் : K.S.ரசூல் மைதீன்

No comments: