Wednesday, March 19, 2008

தமுமுக மீது விமர்சனம் - MNP கண்டனம்

மனித நீதிப் பாசறையையும், த.மு.மு.க வையும் தரக்குறைவாக விமர்சித்த பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஐ மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கின்றது.

பத்திரிகையாளர் பிரான்சிஸ் முகலாய மன்னர்களின் வரலாற்றை திரித்து தன் கற்பனையை சேர்த்து முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கண்காட்சியை கடந்த 03.03.2008 அன்று ஏற்பாடு செய்திருந்தார்.

வரலாற்று கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் அதில் புதைந்து கிடந்த வகுப்புவாதத்தை கருத்தில் காண்டு கண்காட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தனர் தெர்ாந்து அந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு வலுக்கவே கண்காட்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் பிரான்சிஸ் , மத ஒற்றுமைக்கு சான்றாக இருக்கும் ஆர்காட் நவாபையும் மக்க் இயக்கமான மனித நீதிப் பாசறையையும் சாடியிருப்பது கண்டிக்கதக்கது.

பத்திரிகையாளர் பிரான்சிஸ் போன்ற மதவாத சக்திகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் இது போன்ற எந்த ஒரு நிகழச்சியை ஏற்பாடு செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.

இவன்

ஏ.ஃபக்ருத்தீன்
மாநில செயலாளர்
மனித நீதிப் பாசறை

No comments: