Sunday, March 23, 2008

மாநிலங்களவை எம்.பி. பதவி: தமுமுகவுக்கு ஏமாற்றமா?

எம்.அஹ்மது, இளையான்குடி
கேள்வி : முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக முதல்வரை சந்தித்து முறையிட்டுள் ளீர்கள். இச்சிக்கல் குறித்து ஆரம்பத் தில் நீங்கள் மறுத்ததாகவும், பிறகு ஏற்றுக் கொண்டதாகவும் உங்களை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன?

பதில் : முஸ்லிம்களுக்கு அüக்கப் பட்ட 3.5% இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்த சில பணிகüல் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மறுக்க வில்லை, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் வெüயிட்ட விளம்பரத்தை பார்த்த பிறகு, அந்த பாரபட்சத்தை அந்த ஆணையத்திற்கு சுட்டிக்காட்டி முதல் கடிதத்தை அன்று எழுதி உடன் முறையிட்டது தமுமுகதான் என்பதை சொல்லிக் கொள்கிறோம். ஒரு வார பத்திரிக்கையில் இது பற்றிய செய்தி வந்த அதே வாரம் நமது மக்கள் உரிமையிலும் (4:32) அதை சுட்டிக்காட்டி, போராடத் தயங்க மாட்டோம் என்று எழுதியிருந் தோம். அதன் பிறகு உயர் அதிகாரிகளை எல்லாம் சந்தித்து கிருத்தவர்களுக்கு சரியான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு அமலாகும்போது முஸ்லிம்களுக்கு ஏன் இப்படி சிக்கல் உள்ளது என்று வினவினோம்.

அதன்பிறகுதான், ''ரோஸ்டர் சிஸ்டம்' என்ற ஒன்று இருப்பதாகவும், அதன் வழியாகத்தான் இதை செயல்படுத்து கிறோம் என்றும் அதிகாரிகள் விளக்கி னார்கள். அதன் பிறகுதான் ரோஸ்டர் சிஸ்டம் என்றால் என்ன? இடஒதுக் கீட்டில் அது எந்த வகையில் தலையிடு கிறது என்பதையெல்லாம் விளக்கி மக்கள் உரிமையில் 4:33 எழுதியிருந்தோம்.

நாம் இப்படி உண்மை நிலையை விளக்கிய பிறகுதான் களவாடப்பட்ட பத்திரிக்கையில் (உரிமை 12, குரல் 20), நம்மை விமர்சிப்பவர்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு விளக்கத்தை எழுதியிருந்தார்கள்.

மிகவும் நுட்பமான இந்த விவகா ரத்தை எப்படி கையாள்வது? அதை எப்படி தீர்ப்பது? என்பது பற்றி தமுமுக நிர்வாகக் குழுவில் ஆலோசித்தோம். நீதிமன்றத்திற்குப் போனால் அது இடஒதுக்கீட்டிற்கே ஆபத்தாக முடிந்து விடக்கூடும். போராட்டம் நடத்துவது என்பது விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது. மாநில அரசோடு நல்ல புரிந்துணர்வு உள்ளதால், மீண்டும் முதல்வரை சந்தித்து, ரோஸ்டர் முறையை நீக்கக் கோருவது என்றும், எதுவுமே நடக்காத பட்சத்தில்தான் இறுதியாக போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

எனவே இந்த பாரபட்சத்தை நீக்குவதற்கு மாற்று வழி என்ன என்பதை ஆய்வு செய்வதற்காக தமுமுக தலைவர் தலைமையில், ஓய்வுபெற்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்தோம். பழுத்த அனுபவசாலிகளைக் கொண்ட அந்தக் குழு மாற்று திட்டத்தை வகுத்தது. பிறகு அந்த திட்டத்தை ரோஸ்டர் முறையை வடிவமைத்த பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கான அரசு செயலாளர். அத்துறைக்கான அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி, தமிழக அரசின் சட்டத்துறைச் செயலாளர் ஆகியோரிடம் எடுத்துச்சென்று அüத்ததுடன் மட்டுமில் லாமல் ரோஸ்டர் முறையில் யூனிட் என்பது குறிப்பிட்ட பணியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மாவட்டங் களாகப் பிரிந்த பிறகு அதிலுள்ள அலுவலகங்களை யூனிட்டாக கருதக் கூடாது என்பதை எடுத்துரைத்தோம். அவர்களும் நமது ஆலோசனை சரியானது என்பதை ஒத்துக் கொண் டார்கள். ஆனால் இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று யோசித்தார்கள். இச்சூழலில் ராஜ்யசபா தேர்தல் குறித்த வேட்பாளர்கள் அறிவிப்பெல்லாம் முடிந்து அந்த அரசியல் பரபரப்பு ஓய்ந்தபிறகு கடந்த 07.03.2008 அன்று தமிழக முதல்வரை தமுமுக தலைவரும், பொதுச் செலாளரும் சந்தித்தார்கள்.


ரோஸ்டர் முறை குறித்து தமுமுக நிர்வாகிகள் முதல்வரிடம் உரிய ஆதாரங்களுடன் விளக்கிய பொழுது, அவர் அதிர்ந்து விட்டார். ''இது நீதி கட்சி கால நடைமுறை. அது இன்னுமா நடைமுறையில் உள்ளது'' என்று அதிர்ச்சியாக முதல்வர் கேட்டார். (அதை முதல்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டு பேசிய செய்தியைப் பார்க்கவும்) ''''நான் உடனே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கüன் கூட்டத்தைக் கூட்டி விசாரித்து சரி செய் கிறேன்'' என்று கூறினார். அதன்பிறகு ரோஸ்டர் முறையை நீக்குவது குறித்து உரிய அதிகாரிகüடம் பேசியிருக்கிறார்.

இதனிடையே அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து 12.03.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முழு அளவில் அமல் படுத்தப்படவில்லை என்றும், இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்பதையும் வலியுறுத்தி அதிரடியாகப் பேசினார். இதை முதல்வர் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. பொதுச் செயலாளரை மேற்கோள்காட்டி அங்கு பேசிய விஜய டி.ராஜேந்தரும் அதையே வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஹைதர் அலி அவர்கள், '''முஸ்லிம் களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை அரசு கொடுத்திருக்கிறது, ஆனால் அதிகாரிகள் அதை பல்வேறு காரணங்களை கூறி முழுமையாக பயன்பெற விடாமல் செய்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டினார். எந்த நோக்கத்திற்காக அங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததோ, அதையும் பேசிவிட்டு, அங்கே சமுதாயத்தின் உரிமைக் குரலையும் உரக்கப் பதிவு செய்தார்.

அதற்கு தமிழக முதல்வர், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர் களின் பேச்சுக்கு பதிலüத்துப் பேசும் போது, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குழப்பத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகப் பேசியது உள்üட்ட அனைத்து விபரங்களும் தமிழக அரசின் இணையதளத்திலும், 13.03.2008 அன்று வெüயான நாüதழ்கüலும் வெüவந்திருக்கிறது.

ஆக தமுமுகதான் இப்பிரச்சனையை முதன்முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து அதிகாரி களை சந்தித்து முறையிட்டது. மேலும் முதல்வரை சந்தித்து இதுகுறித்து நேரில் முறையிட்ட ஒரே முஸ்லிம் அமைப்பும் தமுமுகதான்! இவை அனைத்தையும் தூய உள்ளத்தோடுதான் செய்து வருகிறது.

அதனால்தான் முதல்வரே தமுமுகவை குறிப்பிட்டு, அவர்களால்தான் இந்த ரோஸ்டர் சிக்கல் தீர்க்கப்பட உள்ளது என்பதையும் தெüவுபடுத்தியுள்ளார். (அல்ஹம்துலில்லாஹ்)

இடஒதுக்கீடு பாரபட்சம் குறித்து நாம் இதையெல்லாம் முன்பு மறுத்ததாக சிலர் வதந்தியை கிளப்புவதாகக் கேள்வி கேட்டுள்ளீர்கள். கருணாநிதி முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார் என்றும், முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு 1.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் 'புளுகு' பிரமுகர் அவதூறு கிளப்பினார். தமுமுகவையும் சீண்டினார். நாம் இதையெல்லாம் மறுத்தோம். இந்த சிக்கலுக்கும் முதல்வருக்கும் சம்பந்த மில்லை என்றும், இது அதிகாரிகள் செய்த குழப்பம் என்றும், நமக்கு 3.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை பெறுவதில் 'ரோஸ்டர்' முறையில்தான் சிக்கல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தோம். நமது நிலையை தெüவாகப் புரிந்து கொள்ளாதவர் கள்தான் பரபரப்பு கிளப்பினார்கள்.

ஆனால் பாவம்! நீதிமன்றத்தால் ''விளம்பரத்திற்காக செயல்படுபவர்கள்'' என்ற பட்டத்தையும் வாங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயம் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இறைவன் மிகப்பெரியவன்! விளம் பரத்திற்காக செயல்படுபவர்களையும், உள்ளத்தூய்மையோடு செயல்படுவர் களையும் அவனே நன்கு அறிந்தவன்!


பி. முகம்மது அலி ஜின்னா, கோவை

கேள்வி : மாநிலங்களவை எம்.பி. பதவி தமுமுகவுக்கு கொடுக்கப்படும் என்று ஒரு செய்தி உலவியது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, தன்னிடம் சீட் கேட்ட கட்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது ஒரு இடத்தில் கூட தமுமுக கேட்டதாக சொல்லவில்லை. இது பற்றி சரியான விளக்கம் தேவை.

பதில் : உங்கள் கேள்வியின் இறுதிப் பகுதியில் பாதி பதில் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே வதந்தி பரவியிருந்தது. தற்போது மாநிலங்களவைக்கான தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதும், அதில் திமுக கூட்டணியிலிருந்து ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதும், இச்செய்திகள் கடந்த இரண்டு மாதமாக கூட்டணிக் கட்சி களும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கடந்த ஆறு மாதத்தில் சமுதாய மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அவரிடம் 'வருகின்ற ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள்' என்று தமுமுக கேட்கவில்லை,
அரசிடம் சமுதாய பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். சமீபத்தில் இடஒதுக்கீடு சிக்கல் குறித்து பேசுவதற்காக முதல்வரை சந்தித்தோம். 05.03.2008 அன்று முதல்வர் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி அனைத்தையும் அறிவித்த பிறகு 07.03.2008 அன்றுதான் அவரை சந்தித்தோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது மாநிலங்களவையில் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பüக்க வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்தோம். சிறுபான்மையினர் குரலை ஒலிக்க வைப்போம் என்று நம்மிடம் தெரிவித் தார். நமது கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் வழக்குறைஞர் ஜின்னா அவர்கள் திமுகவின் வேட்பாளராக மார்ச் 9ம் தேதி அறிவிக்கப்பட்டார். வழக்குறைஞர் ஜின்னா அவர்களும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் தனக்கு இப்பொறுப்பு தரப்பட்டுள்ள தாகவும், இதனை மனதில் வைத்து செயல்படுவேன் என்றும் தினத்தந்தி நிருபரிடம் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலை இப்படியிருக்க, சில விஷமிகளும் பிறரை குறைகூறியே வளர நினைப்பவர்களும் பரப்பும் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என சமுதாய மக்களை தமுமுக கேட்டுக் கொள்கிறது.

எஸ்.ஆதம் மாலிக், காயல்பட்டினம்

கேள்வி : பழனி அருகே உள்ள பாலநத்தத்தில் தமுமுக சகோதரர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக வாழ்த்து சுவரொட்டி அடித்துள்ளார்கள். இதை தலைமை கண்டிக்கவில் லையா...?

பதில் : இச்செய்தி வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் அன்சாரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதை உண்மை என்றவர், அவர்கள் இயக்கத்திற்கு மிகவும் புதியவர்கள் என்றும், நமது கொள்கை கோட்பாடுகளை முழுமையாகப் புரியாமல் ஆர்வத்தில் வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இயக்கத் திற்கு நன்மை செய்கிறோம் என நினைத்து தவறு செய்துவிட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகிகள் விளக்கமüத்தனர். மேலும் இந்த செய்தி வந்த சில மணி நேரத்திற்குள் சுவரொட்டி ஒட்டப்பட்ட அந்த கிராமத்திற்கு மேல்மட்ட நிர்வாகிகள் சென்று விளக்கங்களை அüத்தார்கள் என்றும், அதன்பிறகு உடனடியாக, ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அவர்களே கிழித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

நாம் நடந்த சம்பவங்களைக் கண்டித்த தோடு, அங்கு தர்பியா வகுப்புகளை எடுத்து புதியவர்களை ஒழுங்குபடுத்து மாறும் கேட்டுக்கொண்டோம். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்ற பிறகு இதனை பரப்பி விடுபவர்கள் தமுமுகவை மூன்று மாதத்தில் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ்வை மறந்து சாபமிட்டு, அந்தக் கனவு நிறைவேறாமல் இரவெல் லாம் தூக்கமில்லாத நிலையில் இது போன்ற ஃபித்னாக்களை பரப்புவதை தங்கள் வாழ்வின் இலட்சியமாக்கிக் கொண்டு நமக்கு நன்மைகளை சேர்த்து தருகிறார்கள்.

நாள்தோறும் பெருகிவரும் புதிய கிளைகüல் சில சகோதரர்கள் அறியாமை யின் காரணமாக தவறு செய்துவிடுகிறார் கள். அவர்களை அரவணைத்து திருத்து வதுதான் நமது பணி. தெரிந்து பல அநியாயங்களை செய்பவர்களைவிட தெரியாமல் தவறு செய்யும் அப்பாவிகள் இரக்கத்திற்குரியவர்கள். அவர்களை நேர்வழிப்படுத்தும் பணியை இன்ஷா அல்லாஹ் நாம் செய்வோம்.. இதனை அரசியலாக்கி லாபத்தைப் பெற முயல் பவர்கள் லாட்ஜ், சொகுசு பேருந்து, தொலைபேசி லீலைகள் இத்தியாதி என நிரம்பி வழியும் தங்களது மற்றும் தங்களது இன்னாள் சகாக்கüன் முகத்தையும், முதுகையும், ஈனச் செயல்களையும் உற்றுப்பார்ப்பது நல்லது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

No comments: