தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் 2008ம் ஆண்டிற்கு நியாய விலை கடைகளுக்கு அரசு பொது மற்றும் பண்டிகை விடுமுறை தினங்கள் என்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 1776(15.11.2007)ல் இஸ்லாமியர்களுக்கான ரமலான் மற்றும் பக்ரீத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இவ்விரு பண்டிகைகளும் உலகத்தில் வாழும் எல்லா முஸ்லிம்களும் கொண்டாடுவதாகும். அந்த நாட்களை வேலை நாட்களாக அறிவித்து இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, தமிழக அரசு உடனே தலையிட்டு இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செய்தி : நெல்லை உஸ்மான் கான்.
Saturday, March 15, 2008
முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லாத அரசு ஆணை
அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை.
குறிச்சொற்கள்
அரசு ஆணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment