துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.
28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா ? என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.
இவரது தொடர்பு எண் (00971) 050 9044240.
செய்தி: முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment