Thursday, January 10, 2008

வரவேற்கத்தக்க முடிவு!

வரவேற்கத்தக்க முடிவு!

வரும் ஜனவரி 14ம் தேதி சென்னை வருகைதரும் நரவெறிபிடித்த நரேந்திர மோடியை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினோர் மீது அக்கரைக்கொண்ட சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஃபாசிச எதிர்ப்பு முன்னனி (A.F.F) என்றப் பெயரில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முன்னனிக்கு அமைப்பாளராக தமுமுக தலைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க பட சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடிய சமுதாய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து இந்த முன்னனியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த முன்னனியின் சார்பாக வரும் ஜனவரி 14ம் தேதி நரேந்திர மோடி பங்கேற்க உள்ள காமராஜர் அரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் இந்த முன்னனியின் செயல்பாடுகளை வெற்றியாக்கிவைப்பானாக. நமது சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுப்பிரச்சினை என்று வந்த பொழுது ஒன்று சேர்ந்து நமது சமுதாய நல விரும்பிகளும் இந்த முன்னனியில் தங்களையும் இணைத்துக்கொண்டு போராட இருப்பது பெரிதும் பாராட்டத்தக்க ஒன்று.

சமுதாய அக்கரைக்கொண்ட தமுமுகவும் அதன் தலைவர்களும் ஏன் இதே போன்று மற்ற இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றினைத்து டிசம்பர் 6 போண்ற சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தக்கூடாது? ஓரு தனிப்பட்ட இயக்கம் என்று நடத்தாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயக்கங்கள் சேர்ந்து நடத்தினால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கோரிக்கையாக அமையுமல்லவா? தனக்ககென தனிஇயக்கம் கண்டவர்கள் சமுதாயத்தை துன்டாட நினைப்பவர்கள், தங்களுக்கென உள்ள மடையர் கூட்டத்தை தக்கவைக்க ஒரு கொள்கை - அதுதான் எங்களுக்கென உள்ள தனிக் கொள்கை என்று பிரிவினையை தங்களது கொள்கையாக வகுத்துக் கொண்டவர்கள் எனக்கு கூட்டம் அதிகமா? உனக்கு கூட்டம் அதிகமா? (இப்படியே அவர்கள் ததஜவை உறுவாக்கியப் பிறகு நடந்த டிசம்பர் 6 க்கு பிறகு வந்த உண்ர்வு இதழில் எழுதினார்கள்) என்று சமுதாயத்தை பிரித்து கணக்கு பார்க்கக்கூடிய சமுதாய துரோகிகளின் எண்ணங்களை தவிடு பொடியாக்கலாமே? வருடா வருடம் ஒவ்வொரு குழுக்களாக – தனித்தனியாக போராடாமல், ஒட்டு மெத்தமாக அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து போராடினால் அதன் மூலம் சமுதாயம் பலன் பெறுமல்லவா? தமுமுக போண்ற சமுதாய இயக்கங்கள் இதை செய்ய முன்வருமா? இதற்கு சமுதாய இயக்கங்கள் பதிலளிக்க வேண்டும். பதில் அளிப்பார்களா?

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த நல்ல வேளையில் சமுதாய இயக்கங்களிடமிருந்து நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்ப்பார்ப்போம்.

- அப்துல்லாஹ், சென்னை

1 comment:

vengai ibrahim said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பின் சகோதரர் அனைவருக்கும் என்
இனிய மாஅல் ஹிஜ்ரா நள்வாழ்துக்கள்...

சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் கட்டுரை
கண்டேன் அல்ஹம்துலில்லஹ்...
சகோதரர் அவர்களின் சமுதாய கவலை
எங்களுக்கு மட்டுமில்லாமல் இல்லை
எந்த ஒரு விசயத்திலும் தமுமுக சமுதாய மக்களின்
கருதுக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே செயல்பட்டு
வருகிறது என்பதை நிச்சயமாக யாரும் மறுக்க முடியாது
காரணம் இது சமுதாய மக்களின் இயக்கம் கடந்த 12 ஆண்டு
காலமாக எவ்வித சுயலாபமும் கருதாமல் சமுதாய மக்களின்
நலனை மட்டுமே சிந்தையில் கொண்டு ஆயிரக்கணக்கான
சமுதாய அடலேறுகளை தியாககத்தின் பாதைக்கு
கொண்டுவந்து கடந்த கால வரலாறுகளில் நாம் செய்திட்ட
பிழைகளை திருத்தி வருகிறது அல்லாஹ் அக்பர்...

இந்த பணிகளை செம்மையாக செய்திட சமுதாய மக்களின்
ஆதரவும் முக்கிய காரணம் என்பதை நாங்கள்என்றும் மறக்கமாட்டோம் "இன்ஷாஅல்லாஹ்"

தமுமுக பல கட்டங்களில் பல்வேறு போராட்டங்களில்
சமுதாய மக்களின் ஒத்துலைப்பை கோரியிருக்கிறது
சமுதாயத்தின் பலதறபினரையும் தமுமுக பொருட்டாக
நினைக்காதிருந்தால் இப்படிப்பட்ட அழைப்பை செய்துவறாது
உதாரணமாக கடந்த ஆண்டு டெல்லி நடைபெற்ற வரலாற்று
சிறப்புமிக்க பேரணி முதல் அண்மையில் தமிழக முதல்வருக்கு
நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு வரை இதே நிலையோடுதான்
தமுமுக செயல்பட்டு வருகிறது ஆகையால் நாங்கள்
மற்ற சமுதாய அமைப்புகளை என்றும் ஒதுக்குவதே இல்லை
கைகோர்த்து கலப்பணி ஆற்றிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்
என்பதை தமுமுகவின் கடைநிலை தொண்டர்களில் ஒருவன்
என்கிற முறையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்...

அன்புடன்
வேங்கை இப்ராஹிம்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
தமுமுகா
மலேசியா&சிங்கப்பூர்